ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ரஜினி ஹீரோயிசம் காட்டாத 5 படங்கள்.. இன்று வரை பேசப்படும் முள்ளும் மலரும்

ரஜினி படங்கள் என்றாலே சில வரைமுறைகள் உள்ளது. குறிப்பாக ரஜினியின் ஸ்டைலுக்காகவே ஏராளமான ரசிகர்கள் படத்தை பார்க்க திரையரங்குக்கு வருவார்கள். அதுமட்டுமின்றி ரஜினி படத்தில் அதிக பஞ்ச் டயலாக்குகள் இடம்பெறும், ஆனால் ஹீரோயிஸம் காட்டாத படங்களிலும் ரஜினி நடித்துள்ளார். இந்த 5 படங்களை தற்போது பார்க்கலாம்.

ஆறிலிருந்து அறுபது வரை : எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், படாபட் ஜெயலட்சுமி, சோ மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆறில் இருந்து அறுபது வரை.இப்படத்தில் சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் வறுமையில் வாடும் மனிதனாக ரஜினி நடித்திருப்பார். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது.

Also Read :ரஜினி பட டைட்டிலை வைத்து ஹிட் கொடுத்த 5 படங்கள்.. வேற லெவலில் இருந்த சிவகார்த்திகேயனின் வேலைக்காரன்

முள்ளும் மலரும் : மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி, படாபட் ஜெயலட்சுமி, ஷோபா, சரத்பாபு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் முள்ளும் மலரும். இப்படம் கல்கியின் நாவலிலிருந்து எடுக்கப்பட்டது. இப்படத்தில் ரஜினி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

கை கொடுக்கும் கை : மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி, ரேவதி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கை கொடுக்கும் கை. இப்படத்தில் ரஜினியின் பார்வையற்ற ரேவதியை திருமணம் செய்து கொள்கிறார் அதன் பின்பு சிலரது சூழ்ச்சியால் கற்பை இழந்த ரேவதியை ரஜினி ஏற்றுக்கொள்கிறார். இப்படம் 100 நாட்களை தாண்டி ஓடியது.

Also Read :ரஜினியை சூப்பர் ஸ்டாராக்கிய பிரபலம்.. இன்று வரை யாராலும் வெல்ல முடியாத பட்டம்

அக்னி சாட்சி : கே பாலச்சந்தர் இயக்கத்தில் சிவகுமார், சரிதா முக்கிய வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் அக்னி சாட்சி. இப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இதில் ரஜினி மற்ற படங்களை போல ஹீரோயிஸம் காட்டாமல் சாதாரணமாக நடித்திருந்தார்.

உருவங்கள் மாறலாம் : ரமணன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜெய்சங்கர், வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் உருவங்கள் மாறலாம். இப்படத்தில் ராகவேந்திர பக்தரான ரஜினிகாந்த் ஸ்ரீ ராகவேந்திரா கோயிலுக்குள் இருந்து வருவார்.

Also Read :மணிரத்தினத்தை தூக்கி சாப்பிட்ட ரஜினி.. சூப்பர் ஸ்டார் கற்பனையில் பொன்னியின் செல்வன்

Trending News