திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஹீரோவும் நானே வில்லனும் நானே என்று அமைந்த 5 படங்கள்.. வேறொரு பரிமாணத்தில் கலக்கிய தனுஷ்

Actor Dhanush: படங்களில் பல கதாபாத்திரங்கள் இடம்பெறுவது வழக்கம். ஆனால் ஒரு சில படங்களில் வில்லனும் நானே ஹீரோவும் நானே என மாஸாய் படம் முழுக்க டிராவல் செய்து கலக்கி இருப்பார்கள். மேலும் அவை மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று ஹிட் கொடுத்திருக்கும்.

இது போன்ற புது முயற்சிகளை மாறி மாறி அசத்திய நடிகர்களும் தமிழ் சினிமாவில் உண்டு. அவ்வாறு ஒருவர் இரு கதாபாத்திரம் ஏற்று கலக்குவது போன்று அமைந்த 5 படங்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: காணாமல் போன 5 துணை நடிகர்கள்.. ஆள் அட்ரசே இல்லாமல் போன தேவதர்ஷினியின் ரமணி

உருவம்: 1991ல் ஜி எம் குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் உருவம். இப்படத்தில் மோகன், பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மோகன் தன் மன ரீதியாய் ஏற்படும் மாற்றத்தை மக்களோடு மக்களாக வதந்தியை பரப்பி தீகிலூட்டும் காட்சிகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமையப்பட்டிருக்கும். மேலும் இப்படத்தில் மோகன் ஹீரோவாகவும், வில்லனாகவும் சிறப்புற நடித்திருப்பார்.

சிகப்பு ரோஜாக்கள்: பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த சைக்கோ த்ரில்லர் படம் தான் சிகப்பு ரோஜாக்கள். இப்படத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி, கவுண்டமணி, பாக்கியராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் கமல் இளம் வயதில் பெண் ரீதியான சம்பவங்களை சந்தித்து அறவே பெண்களை விரும்பாத மனிதராய் நடித்திருப்பார். அதைத்தொடர்ந்து பெண்களை கொலை செய்வது போன்ற காரியங்களை மேற்கொண்ட இப்படம் 175 நாள் திரையில் ஓடி வெற்றியை கண்டது.

Also Read: அஜித்தால் மார்க்கெட்டை இழந்த நடிகை.. இப்போ வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்

கண்களால் கைது செய்: பாரதிராஜா இயக்கத்தில் 2004ல் வெளிவந்த ரொமான்டிக் த்ரில்லர் படம் தான் கண்களால் கைது செய். இப்படத்தில் பிரியாமணி, வசீகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் ஹீரோவாய் காட்டப்படும் வசீகரன் தன்னிடம் இருக்கும் வினோதமான பழக்கத்தால் பிரியாமணி இடம் தவறாக நடந்து கொள்வார். இருப்பினும் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று, பாக்ஸ் ஆபீஸில் படும் தோல்வியை சந்தித்தது.

காதல் கொண்டேன்: 2003ல் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் காதல் கொண்டேன். இப்படத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சுதீப் சாரங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். தான் விரும்பும் பெண் தன்னை விரும்பாது வேறொருவர் மீது கொண்ட அன்பை, பெற எண்ணி இறுதியில் சைக்கோ லெவலில் நடிப்பை வெளிகாட்டியிருப்பார் தனுஷ். இருப்பினும் இப்படம் விமர்சன ரீதியான பாராட்டுகளை பெற்று, வணிக ரீதியாகவும் வெற்றியை பெற்று தந்தது.

Also Read: ரீ என்ட்ரியில் சரத்குமார் பட்டையை கிளப்பிய 6 படங்கள்.. பழுவேட்டையராக ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியான சுப்ரீம் ஸ்டார்

மங்காத்தா: வெங்கட் பிரபு இயக்கத்தில் கேங்ஸ்டர் படமான மங்காத்தா படத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் அஜித்தின் நடிப்பு வேற லெவலில் இருக்கும், அதுவும் ஹீரோவாக தன்னை காட்டிக் கொண்டு இறுதியில் கேங்ஸ்டரின் தலைவனாய் அசத்திருப்பார் அஜித். இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வெற்றியை கண்டது.

Trending News