புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிச்சைக்காரனை நம்பி இருக்கும் விஜய் ஆண்டனி.. ராசி இல்லாமல் கிடப்பில் போடப்பட்ட 5 படங்கள்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் விஜய் ஆண்டனி. தனக்கும் நடிப்பு வரும் என்பதை தனது படங்களில் நடிப்பதன் மூலம் நிரூபித்து வருகிறார். இருந்தாலும் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க ரொம்பவும் மெனக்கெட்டு வரும் இவர் பிச்சைக்காரன் என்ற ஹிட் படத்தின் மூலம் அனைவரின் மத்தியிலும் மிகவும் பிரபலமானார். இதனை அடுத்து இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது. ஆனாலும் விஜய் ஆண்டனியின் கைவசம் உள்ள 5 படங்கள் ரிலீஸ் ஆகாமல் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. அவை என்னென்ன படங்கள் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

காக்கி: ஏ செந்தில்குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காக்கி. மேலும் இப்படத்தில் சத்யராஜ், ஸ்ரீகாந்த், ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிலும் போலீஸ் அதிகாரியாக விஜய் ஆண்டனி மற்றும் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் தோன்றியுள்ளனர். அதனைத் தொடர்ந்து காக்கிச்சட்டைக்கு என்று முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய வகையில் இப்படமானது அமைந்துள்ளது. இந்நிலையில் இப்படம் வெளியாகாமல் தாமதமாகி கொண்டே இருக்கிறது.

Also Read: 2022ல் காணாமல் போன 5 ஹீரோக்கள்.. 6 படம் கையில் இருந்தும் பரிதவிக்கும் விஜய் ஆண்டனி

அக்னி சிறகுகள்: நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அக்னி சிறகுகள். இப்படம் அதிரடி ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. மேலும் விஜய் ஆண்டனி உடன் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அக்சரா ஹாசன், பிரகாஷ்ராஜ், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றது. இதனை அடுத்து அக்னி சிறகு திரைப்படம் நீண்ட நாட்களாகவே ரிலீஸ் ஆகாமல் இருந்து வருகிறது.

தமிழரசன்: பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தமிழரசன். மேலும் விஜய் ஆண்டனி, சோனு சூட், சுரேஷ்கோபி, ராதாரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதனை அடுத்து படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தாலும் படம் வெளியாகாமல் நீண்ட நாட்கள் ஆக இழுத்தடித்தபடியே உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஜூன் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் விஜய் ஆண்டனி.. மூளையை மாற்றி கம்பேக் கொடுத்த பிச்சைக்காரன் 2

கொலை: விஜய் ஆண்டனி நடிப்பில் பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கொலை. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் ராதிகா, முரளி ஷர்மா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஆனது ஒரு கொலை நடந்ததை விஜய் ஆண்டனி கண்டுபிடிப்பதற்காக போராடும் கதைக்களமாக அமைந்துள்ளது. படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தாலும் இப்படம் இன்னும் வெளியாகாமல் இருந்து வருகிறது.

பிச்சைக்காரன் 2: சசி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. அதிலும் இப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்தது மட்டுமல்லாமல் இயக்கியும், தயாரித்தும் இருக்கிறார்.  இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம் மே 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read: பல கோடி சம்பளம் கேட்கும் விஜய் ஆண்டனி.. படமே ஓடாதவர் கையில் இவ்வளவு படங்களா.?

Trending News