வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வில்லனாக விஜயகாந்த் நடித்த 5 படங்கள்.. வளர்ந்து வரும் மார்க்கெட்டை அழிக்க போட்ட திட்டம்

அரசியலிலும் சினிமாவிலும் தனி ஆதிக்கம் செலுத்திய கேப்டன் விஜயகாந்த் ஆரம்பத்தில் வில்லனாக நடித்தார். அதன் பின்னர் ஹீரோவாக பெரிய ஹீரோக்களுக்கு ஆட்டம் காண்பித்தார். மீண்டும் இவரை வில்லனாக நடிக்க வைத்து இவர் மார்க்கெட்டை சரிக்க பல பேர் திட்டம் போட்டனர். அப்படி விஜயகாந்தின் கேரியரை கெடுப்பதற்காக அவரை வில்லனாக காட்டிய 5 படங்களை பற்றி பார்ப்போம்.

இனிக்கும் இளமை: குற்றாலத்திற்கு இன்ப சுற்றுலாவிற்காக சென்ற விஜயகாந்த் அங்கு பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டி கேட்ட அவரை எதார்த்தமாக இயக்குனர் எம்ஏ கஜா பார்த்து விட, அதன் பிறகு தன்னுடைய முகவரியை கொடுத்துவிட்டு தன்னை வந்து பார்க்கும்படி சொல்லி இருக்கிறார். உடனே சென்னை கிளம்பி வந்த விஜயகாந்த்தும் இனிக்கும் இளமை படத்தில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கினார்.

இதில் சுதாகர், ராதிகா இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் அருண் என்ற கேரக்டரில் விஜயகாந்த் சிறிய தோற்றத்தில் நடித்திருப்பார். 1979 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் விஜயகாந்த்க்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. இந்த படத்தில் சில காட்சிகள் மட்டுமே விஜயகாந்த் நடித்திருந்தாலும் நல்ல பெயரை பெற்று தந்தது.

Also Read: விஜயகாந்த் மனதில் லப்டப்பை ஏற்படுத்திய 4 நடிகைகள்.. வயசு கோளாறு என ஆசையை மறைத்த கேப்டன்

நூல் அருந்த பட்டம்: 1981 ஆண்டு வெளியான இந்தப் படத்தில் விஜயகாந்த் முழு நேர கதாநாயகனாக நடித்திருந்தாலும் இதில் பெண்ணை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளாமல் அவரை தவிக்க விட்ட பிளேபாயாக நடித்திருப்பார். அதற்காக கடைசியாக அவர் வருத்தப்பட்டு மனம் திருந்தி இருப்பார். இந்த படமும் விஜயகாந்த் தூக்கி விட்ட படமாகவே பார்க்கப்பட்டதே தவிர நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.

ஓம் சக்தி:1981 ஆம் ஆண்டில் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், மேனகா நடிப்பில் வெளியான இந்தப் படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தார். இதிலும் விஜயகாந்தின் கதாபாத்திரம் பேசும் அளவிற்கு இல்லை. விஜயகாந்தின் மார்க்கெட் சரியவும் காரணமாக அமைந்தது.

Also Read: ரஜினி, விஜயகாந்த் போல கோட்டை விடக்கூடாது.. நின்னு நிதானமாக காய் நகர்த்தும் தளபதி, உதவும் பெரிய புள்ளி

பார்வையின் மறுபக்கம்: 1982 ஆம் ஆண்டு எம் பாலகிருஷ்ணா இயக்கத்தில் விஜயகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த படம் தான் பார்வையில் மறுபக்கம். இதில் இவருடன் நம்பியார், ஸ்ரீபிரியா, சிவச்சந்திரன், சில்க் ஸ்மிதா உள்ளிட்டோர் இணைந்து நடித்திருப்பார்கள். அதுமட்டுமல்ல பார்த்திபன், ரோகினி ஆகியோரும் இந்த படத்தில் துணை வேடத்தில் நடித்திருப்பார்கள். இதில் விஜயகாந்த் விஜய் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். ஸ்ரீபிரியா இதில் கதாநாயகியாக நடித்திருப்பார். இந்த படமும் விஜயகாந்த் வளரும் நடிகராக இருந்த போது அவரது கேரியரை கெடுக்கும் விதமாக வில்லன் கலந்த கதாபாத்திரமான அமைத்து அவருடைய மார்க்கெட்டை கெடுக்க பார்த்தனர்.

ராமன் ஸ்ரீ ராமன்: 1985 ஆம் ஆண்டு பரபரப்பு அதிரடி திரைப்படமாக வெளியான இந்த படத்தில் விஜயகாந்த்திற்கு ஜோடியாக ஜோதி நடித்திருப்பார். இதில் விஜயகாந்த் விஜய் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படத்தில் நிகழும் கொலை சம்பவத்திற்கும் விஜய்க்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்ன நடந்தது? விஜய் தான் உண்மையான கொலைகாரா அல்லது நல்லவராக பாசாங்கு செய்கிறாரா என்பது போல் அவரை தவறான கண்ணோட்டத்திலேயே காட்டி இருப்பார்கள்.

Also Read: இன்றும் பயமுறுத்தும் 6 திரில்லர் படங்கள்.. விஜயகாந்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போன சூப்பர் ஹிட் மூவி

இவ்வாறு விஜயகாந்தின் ஆரம்ப கால படங்கள் எல்லாம் அவரை வில்லனாகவே காட்டியதால் அவருடைய மார்க்கத்தை சரிக்க பலரும் திட்டம் போட்டனர். ஆனால் விஜயகாந்தின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் தான் அவரை நல்வழிப்படுத்தி மாஸ் ஹீரோவாக மட்டுமே நடி என சரியான அறிவுரையை கொடுத்து தற்போது கேப்டனாக ஏகப்பட்ட ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

Trending News