புதன்கிழமை, ஜனவரி 15, 2025

செம கதை அமைந்தும் விக்ரமுக்கு ப்ளாப்பான 5 படங்கள்.. மணிரத்தினம் படம் கூட ஓடாத பரிதாபம்

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கக் கூடியவர் தான் நடிகர் சியான் விக்ரம். இவரின் நடிப்பில் வெளியான படங்கள் நல்ல கதை அம்சத்துடன் அமைந்திருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. அதிலும் பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த படமும் தோல்வியை மட்டுமே சந்தித்தது. அப்படியாக விக்ரம் நடிப்பில் வெளியாகி ப்ளாப்பான 5 படங்களை இங்கு காணலாம்.

காதல் சடுகுடு: நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் காதல் சடுகுடு. இப்படம் ஒரு காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாகும். இதில் பிரியங்கா திரிவேதி, பிரகாஷ்ராஜ், விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் விக்ரம் தனது காதலுக்காக எல்லாம் சூழ்நிலைகளிலும் பிரகாஷ்ராஜிடம் வெறுப்பை மட்டுமே சம்பாதித்தார். காதலை மையமாக வைத்து வெளிவந்த, இப்படத்தின் பாடல்கள் வரவேற்பை பெற்ற நிலையில் படம் தோல்வியை மட்டுமே சந்தித்தது. 

Also Read: விக்ரமுக்கு போட்டி போடும் 3 இயக்குனர்கள்.. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகயுள்ள பிரம்மாண்ட படம்

உல்லாசம்: 1997 ஆம் ஆண்டு இயக்குனர் ஜே டி ஜெரி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆகும். இதில் விக்ரம், அஜித் குமார், மகேஸ்வரி, ரகுவரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் ஒரே பெண்ணை விரும்புகின்றனர். பின்னர் இவர்கள் இருவரில் யாருடன் திருமணம் நடக்கும் என்பதை மையமாக வைத்து இக்கதையானது அமைந்துள்ளது. ஆனால் இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை என்றே சொல்லலாம்.

புதிய மன்னர்கள்: இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் புதிய மன்னர்கள். இதில் விக்ரம் உடன் மோகினி, நளினிகாந்த், சக்தி குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் அரசியல்வாதிகளுக்கு எதிராக நண்பர்களுடன் இணைந்து, சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை முன்வைப்பதை மையமாக வைத்து இக்கதை ஆனது அமைந்துள்ளது. மேலும் வணிக ரீதியாக இப்படம் வெற்றி பெறவில்லை.

Also Read: கேள்விக்குறியான விக்ரமின் எதிர்காலம்.. தங்கலான் படத்திற்காக நீச்சல் குளத்திலேயே தவம் கிடக்கும் புகைப்படங்கள்

சாமுராய்: இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அனிதா நடிப்பில் உருவான திரைப்படம் சாமுராய். இதில் நாசர், வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  படத்தில் பணத்திற்காக மனித உயிர்களை காப்பாற்றுவதில் அலட்சியம் காட்டும் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்பதை மையமாக வைத்து இப்படமானது அமைந்துள்ளது. மேலும் இப்படம் ஆனது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

ராவணன்: இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆகும். இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ப்ரித்விராஜ், சுகுமாரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் மலையோர பழங்குடியின மக்களை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படம் ஆகும். பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் வணிக ரீதியாக தோல்வியை சந்தித்தது.

Also Read: விக்ரமை மொத்தமாக சாய்த்த அந்த ஒரு படம்.. குப்புற விழுந்தவர் இன்னும் மீள முடியவில்லை

Trending News