வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

80களில் ரஜினியுடன் நடிக்க போட்டி போட்ட 5 நண்பர்கள்.. எப்பொழுதுமே நாட்டாமையை விட்டுக் கொடுக்காத சூப்பர் ஸ்டார்

Rajinikanth Friends: தன்னுடைய 72வது வயதிலும் எனர்ஜி குறையாமல் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ஆரம்பகால சினிமா பயணத்தில் நிறைய நண்பர்களை சேர்த்து வைத்தவர். அப்படிப்பட்டவர்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிப்பதற்கு போட்டி போட்டு இருக்கின்றனர். அந்த ஐந்து முன்னணி பிரபலங்கள் யார் என்பதை பார்ப்போம். 

ஜெய்சங்கர்: தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஆக 80களில் கிரைம் திரில்லர் படங்களில் அதிகமாக நடித்துக் கொண்டிருந்த ஜெய்சங்கர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் கூட. இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கிய பின், ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை படத்தில் வில்லனாக புதிய பரிமாணத்தில் தோன்றி  பாராட்டுகளைப் பெற்றார். அதன் பிறகு இவர் பல படங்களில் வில்லனாக மிரட்டினார்.

தியாகராஜன்: 80களில் ஃபேமஸ் டைரக்டராகவும் நடிகராகவும் இருந்தவர் தியாகராஜன். இவர் நடிகர் பிரசாந்தின் தந்தை. இவர் 1988-ல் பூவுக்குள் பூகம்பம் என்ற படத்தை தானே இயக்கி நடித்தார். அதன் பிறகு தன்னுடைய மகனை சினிமாவில் வளர்த்து விட வேண்டும் என்று அவருடைய படங்களை தயாரித்து இயக்கினார். 80களில் இவரும் ரஜினியின் நண்பர் என்பதால் அவருடன் இணைந்து நடிக்க எப்போதுமே விருப்பத்துடன் காத்திருந்தார் 

Also Read: நொண்டி குதிரைக்கு சறுக்கியதே சாக்கு.. ரஜினியால் வாழ்க்கை இழந்ததாக புலம்பும் நடிகை

விஜயன்: மலையாள நடிகரான விஜயன் கிழக்கே போகுது ரயில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உதிரிப்பூக்கள் படத்தின் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றவர். ரஜினி 80களில் கோலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் போது, அவருக்கு போட்டியாக விஜயனும் உருவெடுத்துக் கொண்டிருந்தார். ரஜினியின் நெருங்கிய நண்பரான இவர் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம்  கொண்டிருந்தார்.

சரத்பாபு: 70களில் தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த சரத்பாபு,  அதன் பின்பு தமிழ் சினிமாவிற்கு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு 200 படங்களுக்கு மேல் துணை நடிகராக சிவாஜி, கமல், ரஜினி, சிரஞ்சீவி உள்ளிட்டோர்களுடன் இணைந்து  நடித்துள்ளார். அதுவும் ரஜினியுடன் முத்து படத்தில் எந்த அளவிற்கு நெருங்கிய நண்பராக  நடித்திருந்தாரோ, அதேபோல நிஜ வாழ்க்கையிலும் சூப்பர் ஸ்டாரும் இவரும் நெருங்கிய நண்பர்கள்.  

Also Read: சிம்புவைப் போல 90களில் ரஜினியை சுழற்றி அடித்த கெட்ட நேரம்.. தயாரிப்பாளர்கள் போட்ட முட்டுக்கட்டை

விஜயகுமார்: 70களில் கதாநாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்த விஜயகுமார் 1977 ஆம் ஆண்டு வெளியான ஆறு புஷ்பங்கள் என்ற படத்தின் மூலம் ரஜினியுடன் இணைந்து நடித்திருப்பார். இந்த படத்திற்கு பிறகு தான் இவர்களது நட்பு வலுபட்டது. இவர் ரஜினியின் நெருங்கிய நண்பர்.

அதன் பின் ரஜினியுடன் இறைவன் கொடுத்த வரம்,  குப்பத்து ராஜா, காளி அதன் தொடர்ச்சியாக எஜமான், பாட்ஷா, பாபா, குசேலன், லிங்கா என ரஜினியின் முக்கியமான படங்களில் விஜயகுமார் கண்டிப்பாக இடம் பெறுவார். அதிலும் விஜயகுமார் நாட்டாமையாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை வகுத்தும் சூப்பர் ஸ்டாரின் நண்பராக தொடர்ந்து அவருடன் பயணிக்கிறார்.

Also Read: 90களில் சினிமாவை வெறுத்த ரஜினி.. இரண்டாவது இன்னிங்ஸில் சூப்பர் ஸ்டார் கேரியரை தூக்கி நிறுத்திய இயக்குனர்

Trending News