திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தமிழில் முழு நீள காமெடியாக வெளிவந்த 5 திரைப்படங்கள்.. அப்பவே அசத்திய சிவாஜி

பெரும்பாலான படங்களில் காமெடி என்பது சில காட்சிகள் மட்டும் தான் எடுக்கப்படும். ஆனால் தியேட்டருக்கு வரும் ரசிகர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்படி சில படங்கள் வெளியாகி உள்ளது. அவ்வாறு தமிழில் முழு நீள காமெடி படமாக வெளியான 5 படங்களை இப்போது பார்க்கலாம்.

காசேதான் கடவுளடா : முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் காசேதான் கடவுளடா. இந்த படத்தில் மூன்று நண்பர்கள் காசுக்காக பல பொய்கள் சொல்கிறார்கள். ஆனால் அவையெல்லாம் நகைச்சுவையாக படம் எடுக்கபட்டது. வணிக ரீதியாக இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

Also Read : 3 மணி 45 நிமிடம் ஓடிய முதல் தமிழ் படம்.. சிவாஜியை பின்னுக்குத் தள்ளி சாதித்த எம்ஜிஆர்

பலே பாண்டியா : சிவாஜி கணேசன், எம் ஆர் ராதா, தேவிகா ஆகியோர் நடிப்பில் டி ஆர் பந்தலு இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பலே பாண்டியா. டி ஆர் பந்தலூர் இயக்கிய பெரும்பாலான படங்கள் நகைச்சுவையாக இருக்கும். அந்த வகையில் பலே பாண்டியா படமும் முழு நீள காமெடி படமாக எடுக்கப்பட்டது.

காதலிக்க நேரமில்லை : முத்துராமன், டி எஸ் பாலையா, நாகேஷ் ஆகியோர் நடிப்பில் காதல் கலந்த நகைச்சுவை படமாக எடுக்கப்பட்டிருந்தது காதலிக்க நேரமில்லை படம். இந்தப் படத்தில் பாலையா மற்றும் நாகேஷ் இடையே நடக்கும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

Also Read : சிவாஜிக்கு மகள், பின் மனைவி என நடித்துக் அசத்திய ஹீரோயின்.. கெட்ட வார்த்தைகளுக்கு பெயர் போல குணச்சித்திர நடிகை

அனுபவி ராஜா அனுபவி : முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், மனோரமா, நாகேஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் அனுபவி ராஜா அனுபவி. இந்தப் படத்தில் திரைக்கதை, வசனம் அனைத்தும் கே பாலச்சந்தர் எழுதிய இருந்தார். இந்தப் படமும் முழுக்க முழுக்க நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருந்தது.

ஊட்டி வரை உறவு : சிவாஜி கணேசன், கே ஆர் விஜயா ஆகியோர் நடிப்பில் ஸ்ரீதர் இயக்கத்தில் 1967 இல் வெளியான திரைப்படம் ஊட்டி வரை உறவு. இந்தப் படம் முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை படமாக எடுக்கப்பட்டது. மேலும் இப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

Also Read : திமிரை விட்டுக் கொடுக்காமல் உச்சாணி கொம்பிலே நின்ற நடிகர்.. இறங்கி வந்த எம்ஜிஆர், சிவாஜி

Trending News