திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வளர்ந்த உடன் அடாவடி காட்டும் 5 நடிகைகள்.. இவர் அம்மாவை பார்க்க கூட நேரமில்லையாம் படு பிஸியாக இருக்கும் வாரிசு பட நடிகை.

Actress : ஒவ்வொரு ஆண்டும் பல திறமையான நடிகர்கள் மற்றும் நடிகைகள் தனது அற்புதமான நடிப்புத் திறமையால் தமிழ் திரையுலகில் தங்கள் கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளனர். அதில் சில நடிகைகள் வளர்ச்சி மற்றும் புகழ் அடைந்த சில ஆண்டுகளிலேயே கெத்துக்காட்டி நடந்து கொள்ளவும் செய்கின்றனர். அவ்வாறு வளர்ந்தவுடன் அடாவடி காட்டும் ஐந்து நடிகைகள்.

நயன்தாரா : தமிழில் ஐயா படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. நல்ல கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார். ஒண்ணுமே தெரியாத புள்ள பூச்சி மாதிரி இருந்து இன்று லேடி சூப்பர் ஸ்டார் ஆகி இருக்கிறார் நயன்தாரா. பல முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று புகழின் உச்சிக்கே சென்றவர் இவர். ஒரு படத்திற்கு பத்து கோடி வரை சம்பளம் வாங்கும் நயன்தாரா பாலிவுட்டிலும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் உடன் ஜவான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Also Readகல்யாணத்துக்கு பின் ராசி இல்லாமல் போச்சு.. முதலிடத்தை பிடிக்க துடிக்கும் நயன்தாராவின் 75வது படம்

ஐஸ்வர்யா ராஜேஷ் : தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்க அதிக விருப்பம் தெரிவிக்கின்றார் ஐஸ்வர்யா ராஜேஷ். அட்டகத்தி, ரம்மி, காக்கா முட்டை , டிரைவர் ஜமுனா, துருவ நட்சத்திரம், மோகன்தாஸ் போன்ற படங்களில் நடித்திருந்தார். ஃபர்கானா, தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்களில் சமுதாயத்தில் பெண்களுக்கு ஏற்படும் நிகழ்வுகளை எடுத்துக்காட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் மிகத் துணிச்சலான பெண்மணியாகவும் வலம் வருகிறார். கமலுடன் இந்தியன் 2 படத்தில் தற்போது நடித்து வருகின்றார். அதிக படங்கள் கையில் வைத்திருக்கும் நடிகையான இவர் கணிசமாக தன் சம்பளத்தையும் அதிகப்படுத்தி இருக்கிறார். துணிச்சலான நடிகை என்ற பெயரை ஆரம்பக்காலத்திலேயே பெற்ற இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட மேக்கப் மேன் எல்லோரையும் பளார் விடுவாராம்.

தமன்னா : கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. சூர்யா, விஜய், அஜீத், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்து புகழ்பெற்றவர். பாகுபலி படத்தில் தனது நடிப்பு திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார் தமன்னா. இவர் சூப்பர் ஸ்டாருடன் ஜெயிலர் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றார். பட வாய்ப்புகள் அதிகம் வர ரொம்பவே கவர்ச்சியாக நடித்து வருகிறார் தமன்னா. அந்த நடிகையா இவர் ? என்று சொல்லும் அளவிற்கு லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் சீரிஸில் நடித்திருப்பார். அந்த அளவிற்கு எதையும் கண்டு கொள்ளாமல் சுற்றி வரும் நடிகையாக தமன்னா இருக்கிறார். 2 கோடிக்கு மேல் சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்களை துரத்தி விடும் தமன்னா தான் வரும் பிளைட்டில், கூட வருபவர்கள் 10 பேருக்கு டிக்கெட் கேட்கிறாராம். இவர் பக்கத்தில் எம் டி சீட் போட்டு யாரும் தன் பக்கத்தில் உட்கார்ந்து தொந்தரவு பண்ண கூடாது என்ற அளவிற்கு அடாவடி காட்டியிருக்கிறார் தமன்னா.

Also Read : லிப் லாக் காட்சிக்கு பின் வாயை டெட்டாலால் கழுவியை ஹீரோயின்.. தமன்னா கூட்டாளி செய்த அருவருப்பான செயல்

ராஷ்மிகா மந்தனா : கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் ஹிட்டான ராஷ்மிகா, தற்போது புஷ்பா 2 படத்திலும் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் கார்த்தி நடிப்பில் சுல்தான் படத்தின் மூலம் பிரபலமானார். பின்பு வாரிசு திரைப்படத்தில் விஜய் உடன் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார் ரஷ்மிகா. இப்போது ஹிந்தியில் ரன்பீர் கபருடன் அனிமல் படத்தில் நடித்த வருகிறார். இதற்கு முன் மிஷன் மஜ்னு என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தார். இப்படி படு பிஸியாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா தன் அம்மாவை பார்க்கக்கூட முடியாத அளவுக்கு கடும் பிசியாக இருக்கின்றார். அவருடைய மேனேஜர் கூட அவரை பார்ப்பதற்கு வந்தால் ரெக்கமெண்டேஷன் வேணும் என்ற அளவிற்கு படும் பிசியாக நடித்து வருகிறார்.

ஆத்மிகா : ஹிப் ஹாப் ஆதி இயக்கத்தில் சுந்தர் சி தயாரிப்பில் வெளியான படம் மீசைய முறுக்கு. இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. காட்டேரி, கோடியில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இயக்குனர் மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்திருப்பார். திருவின் குரல் என்ற படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ஆத்மிகாவும் படத்தில் வந்து போய் இருப்பார். ரசிகர்களை கவரும் விதத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளார் ஆத்மிகா. சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லாத நிலையிலும் தான் நடிக்கும் படங்களுக்கு அதிக சம்பளம் கேட்டுக் கொண்டிருக்கிறார் ஆத்மிகா. 2 கோடி சம்பளம் எதிர்பார்க்கும் ஆத்மிகாவுக்கு பட வாய்ப்புகள் வருகிறதா என்றால் கேள்விக்குறிதான்.

Also Read : சர்ச்சைக்கு மேல் சர்ச்சையில் சிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. கம்மி பண்ணலைன்னா ரொம்ப டேஞ்சர்

Trending News