திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கிரிக்கெட் போட்டியில் இதயம் நொறுங்கிய 5 நிகழ்வுகள்.. தோனி கண்ணீர் விட்டு கதறி அழுத மேட்ச்

எப்பொழுதுமே வெறித்தனமான போட்டிகளில் இந்தியா தோற்று விட்டால் கண்ணீர் சிந்தும் ரசிகர்கள் பல பேர் இருக்கின்றனர். ஆனால் மனசு கேட்காமல் வீரர்களே தேம்பித் தேம்பி அழுத போட்டிகள் பல இருக்கிறது. ஒருமுறை மகேந்திர சிங் தோனியே கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார். அப்பேற்பட்ட இதயம் நெருங்கிய 5 போட்டிகளை காணலாம்

வினோத் காம்ளி: இந்தியா மற்றும் இலங்கை 1996 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் மோதியது. அந்த போட்டியில் இந்தியா படுதோல்வி அடைய போற வேளையில் ரசிகர்கள் கொந்தளித்து ஸ்டேடியத்தில் அத்து மீறினார்கள், அப்பொழுது இலங்கை அணி வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வினோத் காம்ளி தேம்பித் தேம்பி அழுதவாறு வெளியேறினார்.

மிஸ்பா உல் ஹக்: 2007 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில். தேவையில்லாமல் ஒரு ஷாட் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அழுது கொண்டே கடைசி விக்கெட்டாக பெவிலியன் சென்றார் மிஸ்பா உல் ஹக்.

ஏ பி டி வில்லியர்ஸ்: 2015 உலகக் கோப்பை அரை இறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக தோற்று மைதானத்தில் உட்கார்ந்து 10 நிமிடங்கள் அழுதார். நியூசிலாந்து அணிக்கு இரண்டு பந்துகளில் 5 ரன்கள் தேவைப்படும் பொழுது கிராண்ட் எலியட், டேல் ஸ்டைன் பந்தில் சிக்ஸர் அடித்து நியூசிலாந்து வெற்றியை உறுதி செய்தார்

மகேந்திர சிங் தோனி: 2015 உலகக் கோப்பை அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்று வெளியேறியது. கடைசி வரை போராடிய தோனி 65 ரன்கள் அடித்தார் அந்த போட்டியில் ரன் அவுட் மூலம் வெளியேறிய தோனி, கை க்லோசை கழற்றிவிட்டு கண்ணீரை துடைத்து விட்டு வெளியே சென்றார்.

சச்சின் டெண்டுல்கர்: மும்பையில் நவம்பர் 16ஆம் தேதி 2013ஆம் ஆண்டு விளையாடிய தனது கடைசி போட்டியில் மனது பொறுக்காமல் தேம்பி தேம்பி அழுதார். அவரை ஹர்பஜன்சிங் தேற்றினார். இந்தியா அந்த டெஸ்ட் போட்டியில் மூன்றே நாளில் வெற்றி பெற்றது.

Trending News