Manoj Bharathiraja : சினிமாவில் வாரிசு நடிகர்களுக்கு எளிதில் வாய்ப்பு கிடைத்து விடுகிறது. ஆனாலும் ஒரு பெரிய ஜாம்பவானின் மகன் என்பதாலே அவர்களுக்கான அழுத்தம் என்பது அதிகமாக இருக்கிறது.
அதனாலேயே அவர்களால் பெரிய முயற்சி எடுக்க முடியாமல் சினிமாவில் தோற்றுப் போன வாரிசு நடிகர்களை பார்க்கலாம்.
மனோஜ் பாரதிராஜா தாஜ்மஹால் படத்தில் மூலம் நடிகராக அறிமுகமானார். தந்தை பாரதிராஜா பெரிய இயக்குனர் என்பதால் இருவரும் சாதிக்க வேண்டும் என்று பல முயற்சிகள் மேற்கொண்டார்.
அந்த வகையில் இயக்குனராக மார்கழி திங்கள் என்ற படத்தை எடுத்திருந்தார். இந்த படமும் சரியாகப் போவதில்லை. பாரதிராஜாவின் மகன் என்பதாலேயே இதற்கு நிறைய அழுத்தம் சினிமாவில் இருந்தது.
சக்தி வாசுதேவன் இயக்குனர் பி வாசுவின் வாரிசு தான். விவரம் தெரியாத வயதிலேயே தந்தையால் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு பி வாசு இயக்கத்திலேயே அவர் நடித்த படம் தான் தொட்டால் பூ மலரும்.
அடுத்து தனக்கு வரும் கதைகள் சரியாக தேர்ந்தெடுத்து நடிக்காமல் எல்லா படங்களிலும் கமிட்டானதால் அவரால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாமல் போய்விட்டது.
ஆனந்த் பாபு தந்தை பிரபல நடிகர் நாகேஷ். எந்த நடிகராலும் நாகேஷுக்கு ஈடு கொடுக்க முடியாது. அப்படிப்பட்ட அவரின் மகன் ஆனந்த்பாபு நடனத்தில் பேர் போனவர்.
ஆனால் அவர் நடிகராக தங்கைக்கோர் கீதம் படத்தில் டி ராஜேந்தர் மூலம் அறிமுகமானார். சினிமாவில் ஆனந்த் பாபுவால் சோபிக்க முடியவில்லை என்பதால் குடிக்கு அடிமையானார். அதன் பிறகு சின்னத்திரையில் இப்போது நடித்து வருகிறார்.
ரவி கிருஷ்ணா பிரபல தயாரிப்பாளர் ஏ எம் ரத்னத்தின் மகன் ஆவார். இவரை வைத்து செல்வராகவன் முதலில் எடுத்த படம் தான் 7ஜி ரெயின்போ காலனி. இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
ஆனால் அதன் பிறகு ரவிகிருஷ்ணன் நடித்த எந்த படமும் போகவில்லை. எடிட்டராக சிறந்த வழங்கிய ரவி கிருஷ்ணன் நடிக்க வந்ததால் அவரது கேரியர் தலைகீழானது.
ஆர் பி சவுத்ரியின் மகன்தான் ஜித்தன் ரமேஷ். இவருடைய தம்பி ஜீவா சினிமாவில் நல்ல பெயரை எடுத்துவிட்டார். ஆனால் இவர் முதலில் நடித்த ஜித்தன் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால் அடுத்தடுத்த படங்கள் தொடர் தோல்வியை கொடுத்தது. மீண்டும் கம்பேக் கொடுக்கலாம் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போதும் ஜித்தன் ரமேஷுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.