Vijay Sethupathi: பிரகாஷ் ராஜ், ரகுவரன் போன்ற மிரட்டலான வில்லன்கள் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை கலக்கி கொண்டு இருந்தார்கள். சமீப காலமாகவே வில்லன் கேரக்டருக்கு என்று நடிக்க ஆளில்லாமல் ஹீரோக்களில் இருந்து இயக்குனர்கள் வரை வில்லனாக நடிக்க வந்து விட்டார்கள். இப்படி திடீரென ஏற்பட்ட பஞ்சத்தை குறைக்கும் விதமாக பலே கில்லாடிகள் ஆக 5 வில்லன்கள் இப்போது களமிறங்கி இருக்கிறார்கள்.
எஸ் ஜே சூர்யா: இயக்குனராக சினிமாவுக்கு வந்து ஹீரோவாக நடித்து இப்போது பன்முக திறமை கொண்ட கலைஞனாக நடிப்பில் பல பரிமாணத்தைக் காட்டி வருகிறார். எஸ் ஜே சூர்யா இவர் இந்தியன் 2 படத்தில் வில்லன் ரோலில் நடிக்கிறார். எஸ் ஜே சூர்யா டாப் ஸ்டார்களுடன் இணைந்து நடித்த எல்லா படமுமே ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இருக்கிறது. கமல் மற்றும் இவரை ஒரே திரையில் பார்ப்பதற்கு இப்போது சினிமா ரசிகர்கள் ஆவலாக காத்துக் கிடக்கிறார்கள்.
விநாயகன்: சமீபத்தில் ஜெயிலர் படத்தில் வர்மன் என்னும் கேரக்டரில் சம்பவம் பண்ணி திரையரங்கை அலறவிட்டவர் தான் விநாயகம். இவர் திமிரு படத்தில் வில்லியாக நடித்த ஈஸ்வரியுடன் வரும் காட்சிகள் அப்போதே அதிகமாக ரசிகர்களிடம் கவனம் பெற்றது. தற்போது ஜெயிலர் படம் பெரிய கம்பேக்கை கொடுத்திருப்பதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருக்கும் இவர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்திலும் மிரட்ட இருக்கிறார்.
மிஸ்கின்: வித்தியாசமான கதைகளங்களில் படங்கள் எடுத்ததால் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற இயக்குனர் மிஷ்கின் நந்தலாலா படத்தின் மூலம் நடிகராக மாறினார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் இவருடைய நடிப்பு நல்ல விமர்சனத்தை பெற்றது. தற்போது லியோ படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கிறார்.
அர்ஜுன்: 90ஸ் கிட்ஸ்களில் ஃபேவரிட் ஹீரோக்களின் லிஸ்டில் இன்றும் இருப்பவர் தான் ஆக்சன் கிங் அர்ஜுன். தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் லியோ படத்தின் மூலம் வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார். விஜய் மற்றும் அர்ஜுன் கூட்டணி கண்டிப்பாக பேசப்படும் ஒன்றாக அமையும்.
ராகுல் போஸ்: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் தான் ராகுல் போஸ். இவர் உலகநாயகன் கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து இப்போது இறைவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கம்பேக் கொடுத்திருக்கிறார்.