Tamil Actors: சினிமாவில் இருக்கும் பிரபலங்களுக்கு அழகு எந்த அளவிற்கு இருக்கிறதோ அதே அளவிற்கு லக்கும் இருந்தால் தான் ஜெயிக்க முடியும். ஏனென்றால் திரையுலகில் கொள்ள அழகுடன் அறிமுகமான 5 ஹீரோக்கள் டாப் ஹீரோவாக ஜெயிக்க முடியாமலே போனது. அப்படிப்பட்ட ஐந்து பிரபலங்களைப் பற்றி பார்ப்போம்.
ராஜீவ்: 1982 ஆம் ஆண்டு வெளியான ‘முள் இல்லாத ரோஜா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்ததின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கிய நடிகர் ராஜீவ், பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு அடுத்தடுத்து ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் எதிர்மறை, குணச்சித்திர வேடங்களுக்கான பட வாய்ப்புகள் மட்டுமே குவிந்தது. இருப்பினும் அவற்றில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டிய ராஜீவ், ஜெயம் படத்தில் கதாநாயகியின் அப்பாவாகவும் நடித்து அசத்தினார். ஆனால் இவரால் ஹீரோவாக மட்டும் ஜொலிக்க முடியவில்லை.
ராம்கி: 80களில் ரசிகைகளின் கனவு நாயகனாக இருந்த ராம்கி கதாநாயகனாக நிலவே முகம் காட்டு, குற்ற பத்திரிக்கை, செந்தூரப்பூவே, இணைந்த கைகள், மருதுபாண்டி, வெள்ளையத்தேவன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து கலக்கியவர். அதன் பிறகு இவருக்கு மார்க்கெட் குறைந்ததும் நடிகை நிரோஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கொள்ளை அழகு கொண்ட ராம்கி, தமிழ் சினிமாவில் வளரும் நடிகராகவே பார்க்கப்பட்டார். கடைசி வரை அவரால் டாப் நடிகராக போராடிக் கொண்டிருந்தாரே தவிர ஜெயிக்க முடியாமலே போனது தற்போது டாப் நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டுள்ளார்.
சுரேஷ்: 80களில் ரசிகைகளின் மனம் கவர்ந்த கண்ணனாக இருந்தவர்தான் நடிகர் சுரேஷ். இவர் அறிமுகமான பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம் திரையரங்குகளில் 275 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை பெற்றது. அதன் பின்பு நிறைய படங்களில் சுரேஷ் நடித்திருந்தாலும் நடிகை நதியாவுடன் உனக்காகவே வாழ்கிறேன், இனிய உறவு பூத்தது, என் வீடு என் கணவர் என தொடர்ந்து பல காதல் படங்களில் ஜோடி போட்டார்.
இந்த படங்களில் எல்லாம் இவர்களது கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனது. அதனால் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது, அதன்பின் சுரேஷுக்கு பட வாய்ப்புகள் குறைந்து மார்க்கெட்டும் சரிந்தது. இவருக்கு இருந்த அழகிற்கு நிச்சயம் கமல், ரஜினி போல் முன்னணி ஹீரோவாக மாறி இருக்க வேண்டும், ஆனால் அது நடக்காமல் போனது.
ஆனந்த்: ‘நிலா பெண்ணே’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகர் ஆனந்த். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். தொடக்கத்தில் கதாநாயகனாக நடித்து செல்லுபடியாகாததால் அடுத்தடுத்து குணச்சித்திரம், வில்லன் கேரக்டரில் நடிக்க துவங்கி விட்டார்.
அதிலும் கமலஹாசனின் சத்யா, விஜயகாந்தின் பூந்தோட்ட காவல்காரன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு இருந்த ஹேண்ட்ஸம் லுக்கிற்கு டாப் ஹீரோவாக வந்திருந்திருக்கலாம். ஆனால் இவராலும் எதிர்பார்த்த அளவு வளர முடியவில்லை.
Also Read: ரஜினியை பிடிக்காதவர்கள் செய்யும் நச்சு வேலை.. தளபதியை வைத்து ஆடும் ஆடுபுலி ஆட்டம்
செல்வா: ‘ஆத்தா உன் கோவிலிலே’ என்ற படத்தில் கஸ்தூரி உடன் அறிமுகமான நடிகர் தான் செல்வா. ஒரு கிராமத்து கதாநாயகனாகவே ரசிகர்களின் மனதில் பதிந்த இவர் அடுத்தடுத்து தம்பி ஊருக்கு புதுசு, செண்பகத் தோட்டம், கிழக்கு வீதி, ராக்காயி கோவில் என அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.
ஆனால் அந்த படங்கள் எதுவுமே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை. செல்வாவிற்கு என்ன நேரமோ தெரியல, இவரால் முன்னணி நடிகராக மாற முடியவில்லை. அதன் பிறகு செல்வா 2019 மிஸ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் என்ற படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிங்ஸ் துவங்கியிருக்கிறார். இவர் முகமூடி, ஈட்டி போன்ற படங்களிலும் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.