வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஒரே வார்த்தையில் மாஸ் காட்டிய 5 ஹீரோக்கள்.. தெறிக்க விட்ட ஆண்டவரின் டயலாக்

5 Hero’s Dialogue: பிரபலங்களின் படங்கள் என்றாலே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகம். இந்நிலையில் படத்தில் இடம்பெறும் டயலாக் படத்திற்கு கூடுதல் வெற்றியாய் அமைந்துவிடும். அந்த அளவுக்கு மக்களின் ஆழ்மனதில் பதியக்கூடிய வகையில் இடம் பெற்ற 5 ஹீரோக்களின் டயலாக் பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

ரஜினி: தன் நடிப்பாலும், ஸ்டைலாலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் ரஜினி. இவர் இடம் பெறும் படத்தில் இவர்களின் ஸ்டைலும், வசனமும் பெரிதாக பார்க்கப்படும். ஒவ்வொரு படத்திற்கும் ஏற்றவாறு தன் ஸ்டைலை மாற்றிக் கொள்ளும் இவரின் நடிப்பு மக்களிடையே பெரிதாக பேசப்படும். அந்த வகையில் கபாலி படத்தில் இடம்பெற்ற இவரின் ஒத்த வார்த்தையான மகிழ்ச்சி மக்களிடையே ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மாவீரன் படத்தை தூக்கி நிறுத்திய 2 நபர்கள்.. சிவகார்த்திகேயன் எல்லாம் அப்புறம் தான்

கமல்: எந்த கதாபாத்திரமாயினும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர் தன் அடுத்த கட்ட பட வாய்ப்புகளை மேற்கொண்டு பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் பிரம்மாண்டத்தின் உச்சமாய் பார்க்கப்படும், இவர் நடிப்பில் வெளிவந்த படமான விக்ரம் படத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்திருப்பார். அதிலும் ஆரம்பிக்கலாங்களா என்ற இவரின் வசனம் படத்திற்கு ஹைலைட் ஆக அமைந்திருக்கும்.

விஜய்: இவர் படத்தைக்காண, ரசிகர் கூட்டம் அலைமோதும் என்பது தெரிந்த ஒன்று தான். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகிய போது, அதில் விஜய் பேசும் பிளடி ஸ்வீட் என்னும் வசனம் மற்றும் காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். அதை பார்த்துவிட்டு அதே போல் நடித்து வெளியான வீடியோக்களும் ஏராளம். அந்த அளவிற்கு விஜய்யின் கெட்டப் இப்படத்தில் எதிர்பார்ப்பை முன்வைத்து வருகிறது.

Also Read: சரத்குமாருக்கு நச்சுன்னு முத்தம் கொடுத்த ராதிகா.. வைரலாகும் புகைப்படம்

தனுஷ்: தன் நடிப்பால் படிப்படியாக முன்னேறி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட முன்னணி கதாநாயகன் தான் தனுஷ். தற்பொழுது இவர் கேப்டன் மில்லர், தனுஷ் 50 போன்ற படங்களில் பிசியாக இருந்து வருகிறார். இருப்பினும் இவர் நடிப்பில் ஆக்சன் படமாய் வெளிவந்த மாரி படத்தில் இவர் பேசிய செஞ்சுருவேன் டயலாக் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அஜித்: இவர் நடிப்பில் படங்கள் வராதா என ஏங்கும் ரசிகர்களுக்கு விருந்தாய், படத்தில் இவர் பேசிய வசனம் பெரிதாக பார்க்கப்பட்டது. அதிலும் குறிப்பாக வேதாளம் படத்தில், கிளைமாக்ஸ் இல் இடம் பெறும் சண்டைக் காட்சிகள் இடையே இவரின் மாஸ் டயலாக் காண தெறிக்க விடலாமா கூடுதல் பில்டப்பாய் படத்திற்கு வெற்றியை தேடி தந்திருக்கும்.

Also Read: விஜய்க்கு நாடாளும் தகுதி கிடையாது.. புது சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

Trending News