புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வடிவேலு பகைத்துக்கொண்ட 5 ஹீரோக்கள்.. குண்டக்க மண்டக்க பார்த்திபனுடன் போட்ட சண்டை

காமெடி என்றாலே அது வடிவேலு நகைச்சுவை தான் என்று எல்லாரும் மனதிலும் பதித்த ஒரு காமெடியன். இவருடைய நகைச்சுவை வைத்து தான் எல்லாரையும் கலாய்த்து வரும். அப்படிப்பட்ட இவர் கொஞ்சம் தலைகனத்துடன் இவருடன் நடித்த ஹீரோக்களை மதிக்காமல் தரை குறைவாக பேசி அவமானம் செய்திருக்கிறார். அப்படி இவர் பேசிய ஹீரோக்களை பற்றி பார்க்கலாம்.

விஜயகாந்த்: இவரை பிடிக்காதவர்கள் யாரும் கிடையாது அந்த அளவிற்கு ஒரு நல்ல மனசு படைத்த ஒரு மாமனிதர் என்றே சொல்லலாம். ஆனால் இவருக்கு சினிமாவில் அதிக பிரச்சினையை ஏற்படுத்தியது காமெடி நடிகர் வடிவேலு. சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலுக்கு ஒரு சான்ஸ் வேண்டும் என்று இயக்குனரிடம் சிபாரிசு செய்து எனக்கு படம் முழுக்க குடை பிடிக்கும் ஒருவராக இவரை போட வேண்டும் என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறார். அப்படி வந்தவர்தான் நகைச்சுவையில் இப்பொழுது கலக்கி கொண்டிருக்கிறார். ஆனால் இவர்களுக்குள் ஒரு பிரச்சனை பூதாகரமாக வெடித்து வந்திருக்கிறது. நிறைய இடங்களில் இதை பற்றி நேரடியாக விஜயகாந்தை தாக்கி வடிவேலு பேசி இருக்கிறார்.

Also read: தனித்துவமான குரல் மற்றும் நடிப்பால் கலக்கிய சரத்பாபு.. நண்பன் ரஜினியுடன் சேர்ந்து நடித்து சூப்பர் ஹிட் ஆன 5 படங்கள் 

அஜித்குமார்: இவர் மற்றும் வடிவேலு நடிப்பில் வெளிவந்த ராஜா படத்தின் மூலம் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அப்பொழுது ஒரு காட்சியில் உண்மையாகவே மரியாதை கொடுக்காமல் கொஞ்சம் தரக்குறைவாக பேசி இருக்கிறார். இதை பார்த்த இயக்குனர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் அஜித்திடம் இந்த காட்சியை அப்படியே நிப்பாட்டி விடலாமா இது சரிப்பட்டு வராது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அஜித் இல்லை இந்த படம் நல்லபடியாக எடுத்து முடிக்க வேண்டும். அதனால் இதை பெரிசாக எடுத்துக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அதன் பின் மற்ற எந்த படங்களிலும் இவர்கள் சேர்ந்து நடிப்பதை நிறுத்தி விட்டார்கள்.

தனுஷ்: இவர் நடிப்பில் வெளிவந்த படிக்காதவன் படத்தில் காமெடியனாக முதலில் வடிவேல் அவர்கள் தான் நடித்திருக்கிறார். அவரை வைத்து நிறைய காட்சிகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் வடிவேலு இப்படத்தின் வில்லனாக இருக்கும் சுமன் காலை பிடிக்கும் ஒரு காட்சியை இயக்குனர் அவரிடம் சொல்லும் போது இப்படி எல்லாம் என்னால் நடிக்க முடியாது என்னுடைய கௌரவம் எனக்கு ரொம்ப முக்கியம் அப்படி என்று இந்த படத்தை பாதியில் நிப்பாட்டி விட்டு போயிட்டார். இதனாலேயே தனுஷ்க்கும் இவருக்கும் பெரிய அளவில் மனக்கஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

Also read: எம்ஜிஆர், விஜயகாந்த் போல உதவி செய்த வாரிசு நடிகை.. ஒரு கோடிக்கு தங்க காசுனா சும்மாவா!

பார்த்திபன்: இவர் வடிவேலு உடன் சேர்ந்து பத்து படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவர்கள் காம்போவில் வந்த அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிறது. அத்துடன் வடிவேலு செய்யும் காமெடிக்கு குண்டக்க மண்டக்காக பேசி அவரை கவுக்கும் வகையில் நிறைய படங்களில் பார்த்திபன் நடித்திருப்பார். இதுவே இவருக்கு மனதளவில் ஒரு கோபத்தை நீண்ட நாட்களாக வைத்திருக்கிறார். அதே மாதிரி இவர்கள் கடைசியில் நடித்த குண்டக்க மண்டக்க படத்தில் பார்த்திபன் அவரை மரியாதை குறைவாக பேசியதால் வடிவேலு இன்செல்டிங்காக நினைத்து ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் பின் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதே நிறுத்தி விட்டார்கள்.

விக்ரம்: இவருடன் வடிவேலு சேர்ந்து கிங், அருள், மஜா, கந்தசாமி போன்ற படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கந்தசாமி படத்தில் வடிவேலு நடித்த போது இவர்களுக்குள் ஏற்பட்ட ஒரு சில பிரச்சனை காரணமாக வடிவேலு இவரை கொஞ்சம் மரியாதை இல்லாமல் பேசி இருக்கிறார். அத்துடன் அதிகளவில் கொஞ்சம் திமிராகவும் நடந்திருக்கிறார். வடிவேலு பொருத்தவரை நம்முடைய காமெடி இல்லையென்றால் அந்த படம் சரியாக ஓடாது என்ற நினைப்பில் அதிக தலைகனத்துடன் இருந்திருக்கிறார்.

Also read: ரீ என்ட்ரியில் சொதப்பும் வடிவேலு.. தாக்கு பிடிக்க முடியாமல் ஓடிய சம்பவம்

Trending News