வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

சன் பிக்சர்ஸ் கிட்ட மாட்டாத 5 ஹீரோக்கள்.. எவ்வளவு டார்கெட் பண்ணாலும் சிக்காத அஜித்

Sun Pictures: சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதுவரைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் படங்களை தயாரித்து வழங்கி இருக்கிறது. இன்று தமிழ் சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக இது பார்க்கப்பட்டாலும், முக்கியமான ஐந்து ஹீரோக்கள் இன்று வரை இந்த நிறுவனத்திடம் சிக்காமல் டேக்கா கொடுத்து வருகிறார்கள். அவர்கள் யார் என்று பார்க்கலாம்.

சன் பிக்சர்ஸிடம் சிக்காத ஹீரோக்கள்

கமல்: உலகநாயகன் கமலஹாசன் தொடர்ந்து உதயநிதிக்கு சொந்தமான ரெட் ஜெயன்ட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார். ஆனால் இதுவரை கலாநிதி மாறன் நடத்தும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் அவர் இணையவில்லை. ரஜினியின் படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இது ஒரு மிகப்பெரிய ஏமாற்றம் தான்.

அஜித்: அஜித் தன்னுடைய ஐம்பதாவது படமான மங்காத்தா படத்தை தயாநிதி அழகிரி தயாரிப்பில் நடித்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகித்தது. அதை தவிர்த்து இதுவரை அஜித்குமார் இந்த நிறுவனத்துடன் இணைந்து எந்த படங்களிலும் பணியாற்ற வில்லை. நடிகர் விஜய் படங்களை தொடர்ந்து அஜித்துடன் இணைய வேண்டும் என்பது சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய கனவாக இருக்கிறது.

Also Read:ஹீரோவாக களமிறங்கும் தனுஷ் குடும்ப வாரிசு.. பச்சைக்கொடி காட்டிய அஜித் பொண்ணு

சிம்பு: நடிகர் சிம்புவும் உதயநிதிக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடன் இணைந்து நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார். ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இன்னும் இணைந்து படம் பண்ணவில்லை. இளம் ஹீரோக்களின் படங்களை நிறைய தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சிம்புவின் படத்தையும் தயாரிக்க வேண்டும் என்பது டார்கெட் ஆக இருக்கிறது.

விக்ரம்: முன்னணி ஹீரோக்கள் ஆன ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற ஹீரோக்களை வைத்து படம் பண்ணிய சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்னமும் நடிகர் விக்ரமுடன் இணைந்து படம் பண்ண வில்லை. சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பின்னால் ஆரம்பிக்க லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கூட விக்ரம் நடித்துவிட்டார்.

கார்த்தி: நடிகர் கார்த்தியின் பெரும்பாலான படங்களை ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. அவருடைய அண்ணன் சூர்யாவும் 12 படங்களை 2d தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார். இதுவரை நடிகர் கார்த்தி சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணிபுரியவில்லை.

Also Read:விடாமுயற்சி, தளபதி 68-ல் இருக்கும் ஒற்றுமையான விஷயங்கள்.. அட! ரிலீஸ் தேதியும் ஒன்னா?

Trending News