புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஒரே ஒரு வெற்றிக்காக போராடும் 5 ஹீரோக்கள்.. அடல்ட் கண்டன்ட் நடிச்சும் வேலைக்கு ஆகாத அசோக் செல்வன்

தமிழ் சினிமா கதாநாயகர்களில் சிலருக்கு நல்ல நடிக்கும் திறமை இருந்தும் ஹீரோ ஆகுவதற்கு அத்தனை தகுதிகள் இருந்தும் வெற்றிப்படம் என்பது இன்னும் கனவாகவே இருக்கிறது. அவர்கள் அடுத்தடுத்து படங்கள் பண்ணினாலும், ரசிகர்களால் எந்த ஒரு அங்கீகாரமும் கிடைப்பதில்லை. இதற்கு அவர்கள் தேர்வு செய்யும் கதையும் ஒரு காரணமாக இருக்கலாம். இதுபோன்று நிறைய ஹீரோக்கள் பல வருடங்களாக ஒரு வெற்றி படத்திற்காக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த்: நடிகர் ஸ்ரீகாந்த் சின்னத்திரைகளில் சீரியலில் நடித்து பின்னர் ரோஜா கூட்டம் திரைப்படம் மூலம் சினிமாவுக்குள் ஹீரோவாக நுழைந்தார். வந்த புதிதில் இவருக்கு பெண் ரசிகைகள் அதிகமாக இருந்தனர் என்று கூட சொல்லலாம். ஆனால் ஒரு கட்டத்தில் இவரால் வெற்றி படம் என்பதே கொடுக்க முடியவில்லை. அதுவும் தனி ஹீரோவாக கூட படம் பண்ண முடியவில்லை. அப்படி அவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்திருக்கின்றன.

Also Read: ஹீரோவாக்க உசுர கொடுத்து வேல செஞ்ச 5 அப்பாக்கள்.. மகனுக்காக குருவையே எதிர்த்த விக்ரம்

அதர்வா முரளி : 90களில் காலகட்டத்தில் டாப் ஹீரோவாக இருந்தவர் நடிகர் முரளி. இவருடைய மகனான அதர்வா முரளி பானா காத்தாடி என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்குள் ஹீரோவாக வந்தார். ஆனால் இன்று வரை இவரால் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். வாரிசு நடிகராக இருந்தாலும் ஒரு வெற்றி படத்திற்காக இன்றுவரை கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்.

ஹரிஷ் கல்யாண்: நடிகர்கள் கார்த்திக், மாதவன், அரவிந்த்சாமி போன்று நல்ல அழகான தோற்றம் இருந்தும் ஹரிஷ் கல்யானால் இன்று வரை சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க முடியவில்லை. இவருக்கு அதிகமாக பெண் ரசிகைகள் இருந்தும் இன்று வரை அவரால் ஒரு வெற்றி படம் கூட கொடுக்க முடியவில்லை.

Also Read: நல்ல அழகு இருந்தும் ஜொலிக்க முடியாமல் போன 5 நடிகர்கள்.. காசு வேண்டாம் வாய்ப்பு தாங்க என கதறிய ஷ்யாம்

மகத்: நடிகர் மகத் மங்காத்தா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஆனால் அதன் பிறகு அவருக்கு அந்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பராக இருந்தும் இன்று வரை தனி ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு இவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை தற்போது இவர் சினிமாவில் இருக்கிறாரா இல்லையா என்பது கூட வெளியில் தெரியாத வகையிலே இருக்கிறது.

அசோக் செல்வன்: நடிகர் அசோக் செல்வன் தெகிடி திரைப்படத்தில் தன்னுடைய திறமையான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார். இதுவரை அவர் நடித்த திரைப்படங்களில் எல்லாம் அவருடைய நடிப்பை பற்றி எந்த குறையும் சொல்ல முடியாது. இருந்தாலும் இவருக்கு வெற்றிப் படம் என்பது எட்டா கனியாகவே இருக்கிறது. இறுதியாக மன்மத லீலை போன்ற அடல்ட் கன்டென்ட் படத்தில் நடித்தும் இவருக்கு எந்த வாய்ப்பும் அமையவில்லை.

Also Read:2022ல் காணாமல் போன 5 ஹீரோக்கள்.. 6 படம் கையில் இருந்தும் பரிதவிக்கும் விஜய் ஆண்டனி

Trending News