புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்து கொண்ட 5 நடிகர்கள்.. லண்டன் மாமனார் என தலையாட்டிய தளபதி

Thalapathy Vijay: காதலுக்கு எப்படி கண்ணில்லை என்று சொல்கிறார்களோ, அதேபோன்று வயது வித்தியாசமும் பெரிதில்லை என சினிமா நட்சத்திரங்களின் சில கல்யாணங்கள் நிரூபித்து இருக்கின்றன. சமீப காலமாக அதிக வயது கொண்ட நடிகர்கள், சின்ன பெண்களை திருமணம் செய்து கொண்டு ரசிகர்களின் வயிற்று எரிச்சலை வாங்கி வருகிறார்கள். இதேபோன்று சில பிரபலமான நடிகர்கள், தங்களை விட வயதில் மூத்த பெண்ணையும் திருமணம் செய்து இருக்கிறார்கள். அப்படி திருமணம் செய்த ஐந்து நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

தனுஷ்- ஐஸ்வர்யா: தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக இருந்த கல்யாணம் என்றால், அது தனுஷ்- ஐஸ்வர்யா திருமணம்தான். சூப்பர் ஸ்டார் மகளை, இப்படி ஒரு ஹீரோ திருமணம் செய்து கொண்டாரே என, அனைவரும் தங்களுடைய அங்கலாய்ப்பை கொட்டி தீர்க்க, அதே நேரத்தில் தன்னைவிட இரண்டு வயது பெரிய பெண்ணை தனுஷ் திருமணம் செய்திருக்கிறார் என்ற செய்தியும் பெரிய அளவில் பேசப்பட்டது. இவர்களுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆன பின்னும் கூட, இந்த வயது வித்தியாசம் நிறைய இடங்களில் குறிப்பிட்டு பேசப்பட்டது.

Also Read:சனியனை தூக்கி பனியனில போட்ட கதையால இருக்கு.. லியோ எதிர்பார்ப்பை குறைக்கும் வெங்கட் பிரபு.!

ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன்: பல காதல் தோல்விகள், சர்ச்சைகள் என்பதை தாண்டி ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அவர்களுடைய திருமணத்தின் போது நிறைய விஷயங்கள் சர்ச்சைகளாக பேசப்பட்டாலும், அதில் மிக முக்கியமான ஒன்று இருவருடைய வயது வித்தியாசம் தான். ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை விட மூன்று வயது மூத்தவர் என்பதால் தான், இது பெரிய அளவில் பேசப்பட்டது.

விக்ரம்-சைலஜா: நடிகர்கள் பலர் தங்களை விட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்திருக்கிறார்கள் என, ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் இந்த லிஸ்டில் இதுவரை தெரியாத நடிகர் என்றால் அது சீயான் விக்ரம் தான். விக்ரமின் மனைவி சைலஜா, அவரைவிட ஆறு வயது மூத்தவராக இருக்கிறார். விக்ரம் தான் இந்த லிஸ்டில் அதிக வயது வித்தியாசம் கொண்ட பெண்ணை திருமணம் செய்தவர்.

Also Read:எல்லாம் விஜய்யை அடிபணிய வைக்கத்தான்.. பப்ளிசிட்டிக்காக தில்லுமுல்லு செய்யும் லைக்கா

விஷ்ணு விஷால் -ஜுவாலா கட்டா: நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, ஒரு குழந்தை இருந்த நிலையில், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அவர் ஜுவாலா என்னும் விளையாட்டு வீராங்கனையை திருமணம் செய்து கொண்டார். மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுதே, இவர்கள் இருவருக்கும் திருமணத்தை தாண்டிய உறவு இருந்தது, அவருடைய விவாகரத்துக்கு பின்பு தான் பொதுவெளியில் தெரிய ஆரம்பித்தது. ஜுவாலா, விஷ்ணு விஷாலை விட ஒரு வயது மூத்தவர்.

விஜய்-சங்கீதா: தளபதி விஜய் தன்னுடைய தீவிர ரசிகையான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். லண்டனிலிருந்து, ஒரு ரசிகையாக விஜயை பார்க்க வந்த சங்கீதா, அவருக்கு காதல் மனைவியானார். இன்று வரை இவர்கள் இருவருக்குள்ளும் எந்தவிதமான சர்ச்சைகளும் இருப்பது போல் மீடியாவில் எந்த ஒரு செய்தியும் வந்தது கிடையாது. விஜய், சங்கீதாவை விட இரண்டு வயது குறைவானவர்.

Also Read:விஜய், லைக்காவிடமிருந்து ஒதுங்கி இருப்பதன் பின்னணி.. பிரச்சனையில் சிக்கிய வரை காப்பாற்றிய அண்ணன்

Trending News