வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

90களில் ஹேண்ட்ஸமாய் இருந்து வில்லன் அவதாரம் எடுத்த 5 ஹீரோக்கள்.. பிரகாஷ்ராஜை வாட்டி வதைத்த மச்சினிச்சி மோகம்

Tamil Villain Actors: ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைவது அந்த படத்தின் வில்லன்கள் தான். ஏனென்றால் ஹீரோவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஒரு வில்லனை மட்டும் போட்டு விட்டால் நிச்சயம் அந்த படம் ஹிட் ஆகிவிடும் என்பதுதான் லாஜிக். அந்த வகையில் 90களில் ஹேண்ட்ஸம் லுக்கிலிருந்தும் வில்லனாக நடித்து மிரட்டிவிட்ட ஐந்து பிரபலங்களை பற்றி பார்ப்போம்.

ரகுவரன்: 90களில் டாப் நடிகர்களுக்கு எல்லாம் பயங்கர டஃப் கொடுத்த நடிகர் தான் ரகுவரன். இவர் அஞ்சலி போன்ற ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் அதன் பிறகு தொடர்ந்து வில்லனாகவே பல படங்களில் மிரட்டி விட்டிருக்கிறார். அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், புரியாத புதிர் படத்தில்  ரகுவரனின் நடிப்பு அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரகுமானை மிஞ்சும் அளவுக்கு இருந்தது. அதே போல் தான் பாட்ஷா படத்தில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரகுவரனுக்கு ஈடு கொடுத்து நடிப்பதற்காக நிறைய விஷயத்தில் மெனக்கிட்டு இருக்கிறார்.

இன்று வரை பாட்ஷா படத்தில் ரகுவரனின் மார்க் ஆண்டனி கேரக்டரை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. அதே போல் தான் காதலன், முதல்வன், உயிரிலே கலந்தது போன்ற படங்களில் ரகுவரனின் வில்லத்தனம் படத்தை பார்ப்போரை பயமுறுத்தும் அளவுக்கு இருந்தது.  ஆனால் இந்த படங்களில் எல்லாம் வில்லனாக நடித்திருந்தாலும் கலரிலும் உயரத்திலும் ஹேண்ட்சம் ஆக இருந்த இவர் ஹீரோவாக தன்னை காட்டிக்கொள்ளாமல் வில்லனாகவே காட்டிக் கொள்வதில் பெருமை அடைந்தார். 

Also Read: பெண் மோகத்தில் வில்லனாக பிரகாஷ்ராஜ் மிரட்டிய 5 படங்கள்.. மச்சினிச்சியை அடைய நினைத்த வில்லத்தனம்

நெப்போலியன்: சினிமாவில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் பெயர் வாங்குவது அவ்வளவு சுலபம் அல்ல, ஆனால்  அந்தப் பெயரை  நெப்போலியன்  சுலபமாகவே பெற்றார். இவர் இருந்த ஹேண்ட்சம் லுக்கிற்கு முதலில் சீவலப்பேரி பாண்டி, கிழக்குச் சீமையிலே போன்ற படங்களில் கதாநாயகனாக  நடித்தார். ஆனால் அதன் பிறகு இவரை  தொடர்ந்து இயக்குனர்கள் வில்லனாகவே பயன்படுத்தினார்கள்.

அதிலும்  நெப்போலியன் முரட்டு வில்லனாக பங்காளி, நாடோடி தென்றல், இது நம்ம பூமி, புது நெல்லு புது நாத்து, எஜமான் போன்ற படங்களில்  கொடூரமான வில்லனாக நடித்திருப்பார். ரஜினியின் எஜமான் படத்தில் மிக மோசமான முறையில் சூப்பர் ஸ்டாரை படாத பாடு படுத்துவார். இவருடைய கதாபாத்திரம் ரஜினிக்கு இணையாக பேசப்பட்டு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது. இந்த படம் 175 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி  ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 

தேவன்: தமிழிலும் மலையாளத்திலும்  நிறைய படங்கள் நடித்த நடிகர் தேவன். வெள்ளித்திரையில் மட்டுமல்ல சின்னத்திரையையும் கலக்கியவர். இவருடைய  கலருக்கும் தோற்றத்திற்கும் மாறாக நிறைய  எதிர்மறையான கதாபாத்திரங்கள் மட்டுமே குவிந்தது. இருப்பினும்  அவற்றில் நடித்ததன் மூலம் அவருக்கு நல்ல பெயரும் கிடைத்ததால், தொடர்ந்து நெகடிவ் கேரக்டர்களிலேயே சினிமாவில் நடித்தார்.

அதிலும் விஜயகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ஹானஸ்ட் ராஜ் படத்தில் அவருக்கு நண்பராக இருந்து பின் துரோகியாக மாறிய தேவனின் கதாபாத்திரம்  அந்தப் படத்தின் முழு கதையையும் வழி நடத்தியது. அதிலும் நடிகர் தேவன் ஹானஸ்ட் ராஜ் படத்தில் பரதன் என்ற கேரக்டரில்  கேப்டனின் முதுகில் குத்தி துரோகம் செய்த நண்பராக மாறியது அவரை கொடூரமான வில்லனாக நடித்தார். 

Also Read: சூப்பர் ஸ்டார் புகழ் சரத்குமார் வில்லனாக நடித்த 5 படங்கள்.. மிஸ்டர் சென்னை வென்றதால் வந்த வாய்ப்பு

சரத்குமார்: ஆரம்ப காலத்தில் பாடி பில்டிங் மூலம் ஆணழகன் போட்டியில் பங்கேற்று மிஸ்டர் சென்னை பட்டத்தை வென்ற சரத்குமார் பின்னாளில் படங்களில் நடிக்க துவங்கினார். இவர் தொடக்கத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு மட்டுமே கிடைத்ததால் அதில் சிறப்பாக நடித்து அதன் பின் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார்.

அப்படி இவர் வில்லனாக மிரட்டிவிட்ட படங்கள் தான் புலன் விசாரணை, ஜகதலப்பிரதாபன், சந்தன காற்று, உறுதிமொழி, ராஜா கை வச்சா  போன்ற படங்களாகும். அதிலும்  புலன்விசாரணை படத்தில்  சங்கர் என்ற கேரக்டரில் நடித்திருக்கும் சரத்குமார் போலீசுக்கே தண்ணி காட்டும் அளவுக்கு  வில்லனாக மாஸ் காட்டியிருப்பார். இந்த படம் வசூல் ரீதியாகவும் ஏகபோக வரவேற்பை பெற்றது. 

பிரகாஷ்ராஜ்: சினிமாவில் எப்படிப்பட்ட கேரக்டர்கள் கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடித்து அசத்தி விடுபவர் தான் நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் என்னதான் ஹீரோவுக்கு நிகரான லுக்கில் இருந்தாலும் ஏராளமான வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறார். அதிலும் பெண் மோகம் கொண்டு  ஒரு சில படங்களில்  தன்னுடைய வில்லத்தனத்தை   காட்டினார்.

ராசி, வானவில், கில்லி போன்ற படங்களில் கதாநாயகிகளை அடைய  துடிக்கும் பிரகாஷ் ராஜின் வில்லத்தனம் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதிலும் ஆசை படத்தில் மச்சினிச்சி மீது உள்ள ஆசையில் மனைவியை கொன்ற கொடூரமான வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்து மிரட்டி விட்டார். 

Also Read: சுப்ரீம் பெருசா, சூப்பர் ஸ்டார் பெருசா.. கேள்வி கேட்டு வம்படியாக மாட்டிக்கொண்ட சரத்குமார்

Trending News