திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

உடல் எடை குறைக்க முடியாமல் திணறும் 5 ஹீரோக்கள்.. பல வருடங்கள் முயன்றும் தோற்றுப்போன அஜித்

நடிகர்கள் பலரும் தங்களது உடலை கட்டுமஸ்தாக வைத்துக் கொள்வதில் அதிகம் மெனக்கெடுவார்கள். அதிலும் சில நடிகர்கள் படங்களில் நடிப்பதற்கே நேரமில்லாத சமயத்தில், உடலை மெருகேற்ற வேண்டிய வேளைகளில் தங்களது கவனத்தை சிதறவிட்டு ஒரு கட்டத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டு பூசணிக்காய் போல மாறி விடுவார்கள். அப்படி தங்களது உடல் எடையை குறைக்க முடியாமல் தவித்து வரும் 5 நடிகர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

யோகி பாபு: காமெடி நடிகராக அறிமுகமான யோகி பாபு ஆர்ம்பத்திலிருந்தே சற்று உடல் எடையுடன் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் தற்போது அவரது உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யோகி பாபு நடிப்பில் மாதத்திற்கு 2 படங்களாவது ரிலீஸாகும் நிலையில், படங்களில் நடிப்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு உடல் எடையை அப்படியே கண்டுக்காமல் விட்டுள்ளார்.

Also Read: நாகேஷ் இடத்தை சிக்குனு பிடித்த யோகி பாபு.. இவரைப் பார்த்து கத்துக்கோங்க காண்ட்ராக்டர் நேசமணி

பாபி சிம்ஹா: மலையாள நடிகரான இவர், தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமானார். ஆரம்பத்தில் ஒல்லியாக இருந்த பாபி சிம்ஹா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை அதிகரிக்க செய்தார். அதற்கு பின் அவரால் உடல் எடை குறைக்க முடியாமல் போகவே தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் தனது உடல் எடையை அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளார். இதன் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகள் வரமால் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்: ஆரம்பக்கால அஜித்தின் கட்டுமஸ்தான உடலமைப்பு தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. ஆஜித் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் இருந்ததால் பிட்டாக இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். ஆனால் 2002 ஆம் ஆண்டு ரிலீசான ரெட் திரைப்படத்திற்காக அஜித் தனது உடல் எடையை தாறுமாறாக ஏற்றி வைத்தார். அதற்கு பின்பு அவரது உடல் எடை குறையவே இல்லை, பெரும் சிரமப்பட்டு பில்லா படத்தில் உடல் எடையை குறைத்த அஜித், அவரால் அந்த கட்டுமஸ்தான உடலை மீண்டும் கொண்டு வர முடியாமல் போனது.

Also Read: துணிவு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்.. ஆட்டநாயகன் என நிரூபித்த அஜித்

விஜய் சேதுபதி: தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி, தொடர்ந்து சில படங்களில் தனது கட்டுமஸ்தான உடலை மெயின்டைன் செய்து வந்தார். ஆனால் பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்த நிலையில், உடலை தாறுமாறாக வெயிட் போட்டு தற்போது குண்டு பூசணிக்காய் போல உள்ளதாக அவரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பிரஷாந்த்: நடிகர் பிரஷாந்த் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக கட்டுமஸ்தான உடலமைப்பில் வலம் வந்து கொண்டிருந்தார். சில வருடங்கள் கழித்து பிரஷாந்தின் படங்கள் தொடர் தோல்வியடைந்ததையடுத்து விட்ட மார்க்கெட்டை பிடிக்க தனது தந்தை இயக்கத்தில் மம்பட்டியான் படத்தில் நடிக்க ஓவர் வெயிட் போட்டு நடித்தார். இப்படத்திற்கு பின் இவரால் உடல் எடையை குறைக்க முடியாமல் போகவே பட வாய்ப்புகளும் பறிப்போனது.

Also Read: தளபதி 67 விஜய் சேதுபதி இடத்தை பிடிக்கும் விக்ரம்.. மீண்டும் பயத்தில் விஜய்

Trending News