திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விழுந்து விழுந்து நடிச்சும் 100 கோடி வசூலை நெருங்க முடியாத 5 ஹீரோக்கள்.. பழக்கத்துக்கு நடிச்சு வெறுத்துப் போன விஜய் சேதுபதி

அஜித், விஜய், ரஜினி ,கமலஹாசனை தவிர்த்து பிற நடிகர்கள் 100 கோடி வசூலை எடுக்க பல சிரமங்களை மேற்கொள்வார்கள். அதில் விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பெரும்பாடுபட்டு 100 கோடி வசூலை எடுத்து வருகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் நடிப்பு மட்டுமே கதியாக உள்ள 5 நடிகர்கள் கனவில் கூட 100 கோடி வசூலை தொட முடியாமல் உள்ளனர். அவர்களை பற்றி பார்க்கலாம்.

விஜய் சேதுபதி: நடிகர் விஜய்சேதுபதி ஆரம்பத்தில் துணை நடிகராக களமிறங்கி பின்னர் ஹீரோ, வில்லன் என மிரட்டி வருகிறார். மேலும் தமிழ் மொழியையும் தாண்டி ஹிந்தி, தெலுங்கு என காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் விஜய் சேதுபதி கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வருகிறார். இருந்தாலும் இவர் ஹீரோவாக நடித்து வெளியான படங்கள் ஒன்றுக்கூட இன்று வரை 100 கோடி வசூலை அடைந்தது இல்லை.

Also Read: விஜய் சேதுபதி பையனை வைத்து வெற்றிமாறன் போடும் திட்டம்.. திருப்தி அடையாத முதல் பாகம்

ஜெயம் ரவி: 2003 ஆம் ஆண்டு ஜெயம் திரைப்படத்தில் மூலமாக ஹீரோவாக அறிமுகமான ஜெயம் ரவி, நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடித்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதில் அருள்மொழிவர்மனாக நடித்து பெண்கள் முதல் இளைஞர்கள் வரை மனதை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இருப்பினும் இவர் நடித்த ஒரு படம் கூட தற்போது வரை 100 கோடி வசூலை எடுக்கவில்லை.

விஷால்: தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் விஷால், ஜெயம் ரவியை போலவே ஹீரோவாக தான் நடிப்பேன் என அடம்பிடித்து 20 வருடங்களாக நடித்து வருகிறார். அந்த வகையில், விஷாலின் பல படங்கள் தோல்வியை சந்தித்து பல தயாரிப்பாளர்கள் தலையில் துண்டைப்போட்டுள்ளார். இது போதாது என இவரே சொந்தமாக தயாரித்த படங்களும் பெருந்தோல்வியை சந்தித்துள்ளது. அந்த வகையில் 100 கோடி வசூல் என்பது விஷாலின் கனவில் கூட நடக்காத ஒன்றாக உள்ளது.

Also Read: இங்க பருப்பு வேகல, அக்கட தேசத்து அரசியலுக்கு அடி போடும் விஷால்.. கைநழுவி போன கனவு நடக்குமா?

ஆர்யா: தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வரும் ஆர்யா பல படங்களில் ஹீரோவாக நடித்து இளைஞர்களின் ஆஸ்தான நாயகனாக உருவானவர். இருந்தாலும் இவரது படங்கள் பல சறுக்கல்களை சந்தித்தது. இதன் காரணமாக இவரது நடிப்பில் படங்களை தயாரிக்க பெருமளவில் தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டியதுண்டு. அந்த வகையில் நடிகர் ஆர்யாவுக்கும் 100 கோடி வசூல் என்பது கனவாகவே உள்ளது.

அருண் விஜய்: நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லன் விக்டராக ரீ என்ட்ரி கொடுத்த அருண் விஜய் தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்தார். அதன் பின் ஹீரோவாக களமிறங்கி தற்போது பாலாவின் வணங்காண் படத்தில் கமிட்டாகியுள்ளார். இதனிடையே இன்றுவரை இவர் நடிக்கும் படங்களில் 50 கோடி வரை வசூலை எட்ட முடியாமல் உள்ள நிலையில், 100 கோடி வசூல் என்பது எட்டாக் கனியாகவே அருண் விஜய்க்கு உள்ளது.

Also Read: அஜித்துக்கு அடுத்து ஜாதகத்தை கணித்த இயக்குனர்.. அருண் விஜய்க்கு ஒர்க்அவுட் ஆன சுக்கிர திசை

Trending News