வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கம்பேக்கில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த 5 ஹீரோக்கள்.. 10 வருடம் கழித்து ரீ என்ட்ரி கொடுத்த சிம்பு

5 Celebrites: என்னதான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், அதை தக்க வைத்து கொள்ள முயற்சி போட வேண்டி இருக்கிறது. அவ்வாறு படத்தின் வெற்றியை கொண்டே தன் மார்க்கெட்டை உயர்த்திக் கொள்வார்கள்.

மேலும் நடிக்கும் படங்கள் எல்லாம் வெற்றி பெறுவதில்லை. ஒரு சில வருட கேப்பில் கம் பேக் கொடுத்த நடிகர்கள் ஏராளம். அவ்வாறு மார்க்கெட் இழக்கும் நிலையில் இருந்து கம் பேக் கொடுத்த 5 நடிகர்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: இது என்னடா குணசேகரனுக்கு வந்த சோதனை.? துண்டக் காணும் துணிய காணோம்னு ஓடிப்போன ஜான்சி ராணி

சிம்பு: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பின் முன்னணி கதாநாயகனாக இவர் ஏற்ற எண்ணற்ற படங்கள் வெற்றியை கண்டுள்ளது. அவ்வாறு இவர் நடிப்பில் வெளிவந்த மன்மதன், வல்லவன் படங்களுக்குப் பிறகு 2010ல் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் பெரிதும் பேசப்பட்ட இவர் அதை தொடர்ந்து ஏற்ற படங்கள் சரிவர கை கொடுக்காத நிலையில் சுமார் 10 வருட கேப்பில் ரீ என்ட்ரியில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம் தான் மாநாடு.

சூர்யா: தந்தையின் சிபாரிசில் நடிக்க வந்த, இவர் தன் நடிப்பின் மூலம் முன்னணி கதாநாயகனாக ஏற்ற படங்களில் பெரிதும் பேசப்பட்டார். அவ்வாறு சிங்கம் படம் வெற்றிக்கு பிறகு சரிவர எந்த படங்களும் கை கொடுக்காத நிலையில், ஊர் குருவியும் பருந்தாகும் என்ற பாணியில் இவர் ஏற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம் தான் சூரரை போற்று. இப்படத்தின் மூலம் தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொண்டார் என்றே கூறலாம்.

Also Read: தொடர்ந்து பிளாப் கொடுக்கும் நயன்தாரா.. புருஷனே கைவிட்ட பரிதாபம்

விஜய்: இவர் ஏற்ற எண்ணற்ற படங்கள் இவருக்கு வெற்றியை கொடுத்துள்ளது. அவ்வாறு தன் நடிப்பின் மூலம் முன்னணி கதாநாயகனாக இவர் ஏற்ற படங்கள் ஆன குஷி, பிரண்ட்ஸ்,கில்லி, திருப்பாச்சி போன்றவை நல்ல வரவேற்பை கொடுத்தது. அதை தொடர்ந்து 2007ல் பிரபுதேவா இயக்கத்தில் வெளிவந்த போக்கிரி பட வெற்றிக்கு பிறகு இவர் ஏற்ற படங்கள் பெரிதளவு பேசப்படாத நிலையில் சுமார் 5 வருட கேப்பில் இவர் ஏற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம் தான் துப்பாக்கி.

அஜித்: தனக்கென்று ஒரு வரமுறையை பின்பற்றும் இவர் ஏற்ற எண்ணற்ற படங்களில் காதல் கோட்டை, வாலி போன்ற படங்கள் பெரிதும் பேசப்பட்டது. அதை தொடர்ந்து 2007ல் மாறுபட்ட பரிமாணம் ஏற்று நடித்த பில்லா மாபெரும் ஹிட் கொடுத்தது. அதன்பின் இவர் படங்கள் சரிவர பேசப்படாத நிலையில், சுமார் 4 வருடம் கழித்து இவர் ஏற்ற மங்காத்தா மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.

Also Read: வேகம் எடுக்கும் தனுஷ் 50.. இவ்வளவு நடிகர்களா?. தெறிக்க விட்ட சம்பவம்

கமல்: பன்முகத் திறமை கொண்ட இவர் நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கு என்ற ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். அவ்வாறு இவரின் நடிப்பில் வெற்றி கண்ட மாபெரும் படங்களில், 2013ல் வெளிவந்த படம் ஆன விஸ்வரூபம் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார். அதை தொடர்ந்து இவர் ஏற்று படங்கள் இவருக்கு சரிவர கை கொடுக்காத நிலையில் இதற்குப் பிறகு பீல்ட் அவுட் ஆகும் நிலையில் இருந்த இவர் 2022ல் மேற்கொண்ட விக்ரம் படத்தில் தன் நடிப்பின் மூலம் வாயடைக்க செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News