கோலிவுட்டில் கொஞ்சம் கூட அசராமல் தொடர் தோல்வி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் 5 ஹீரோக்கள் இப்போதும் அடுத்தடுத்த படங்களில் வரிசையாக கமிட் ஆகி கொண்டிருக்கின்றனர். அதிலும் மகனுக்காக இறங்கி நடித்த விக்ரமின் பிளான் செல்லுபடியாகாமல் போனது.
விஜய் சேதுபதி: இந்த வருட தொடக்கத்தில் வெளியான காத்துவாக்குல 2 காதல், மாமனிதன், டிஎஸ்பி போன்ற திரைப்படங்களிலும் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 3 திரைப்படங்களும் விஜய்சேதுபதியின் ஹீரோ நடிப்பிற்கு கை கொடுக்காமல் மாபெரும் தோல்வியைத் தழுவியது. அதற்கு முன்பும் இவர் நடிப்பில் வெளியான சீதக்காதி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் போன்ற 2 மொக்க படங்களையும் கொடுத்தார். இதில் முக்கியமாக மாமனிதன் திரைப்படம் வசூல் ரீதியாக கூட வெற்றி பெறவில்லை என்பதே நிதர்சனம்.
விக்ரம்: கடாரம் கொண்டான், ஸ்கெட்ச், 10 எண்றதுக்குள்ள போன்ற தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த விக்ரம் நடிப்பில் இந்த ஆண்டு மகான், கோப்ரா உள்ளிட்ட இரண்டு திரைப்படங்கள் வெளியானது. ஒரு காலத்தில் சியான் ஆக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட சீக்கிரம் தன்னுடைய மகனையும் சினிமாவில் நடிகராக மாற்ற வேண்டுமென ரிஸ்க் எடுத்து மகான் படத்தில் இணைந்து நடித்த ஆனால் அந்த படம் அவருக்கு படு தோல்வியாக அமைந்தது.
மேலும் பிரபல ஓடிடி தளமான நெட்பிலிக்ஸில் மகான் படம் ரிலீசான நிலையில், இத்திரைப்படம் விக்ரமிற்கு மாபெரும் தோல்வியை கொடுத்தது. அடுத்ததாக நான்கு வருடங்கள் படப்பிடிப்பிற்கு பின்னர் ரிலீசான கோப்ரா படத்தில் பல கெட்டப்புகளில் வளம் வந்த விக்ரம், படத்தின் கதை சரியாக அமையாததால் விக்ரமிற்கு இத்திரைப்படமும் கைக்கொடுக்கவில்லை.
Also Read: 2022-ல் தோல்வி படங்களை மட்டுமே கொடுத்த 5 ஹீரோக்கள்.. ரொம்பவும் மோசமாக போன விஜய்சேதுபதியின் ஹீரோயிசம்
விஷால்: சமீபகாலமாக விஷால் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் தொடர் தோல்வியைத் தழுவியுள்ளது. அந்த வகையில் சண்டைக்கோழி 2, ஆக்சன், அயோக்கியா, எனிமி, வீரமே வாகை சூடும், சக்ரா போன்ற படங்களின் தோல்வியை தொடர்ந்து இப்போது லத்தி படமும் தோல்வியடைந்துள்ளது.
ஜெய்: சுப்ரமணியபுரம் படம் ஜெயிக்கு மிகப்பெரிய பாராட்டை பெற்றுக் கொடுத்தது. சினிமாவில் ஜெய் முன்னணி நடிகராக ஜொலிப்பார் என்று நினைத்த நிலையில் தலை கனத்தால் நிலைத்து நிற்க முடியாமல் போய்விட்டது. தற்போது ஜெய் ஒரு ஹிட் படத்தை கொடுக்க போராடி வருகிறார்.
சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வெளியான திரைப்படம் காபி வித் காதல். இந்தப் படம் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படத்திற்கு போட்டியாக வெளியானது. இப்படம் போட்ட வசூலை கூட எடுக்க முடியாமல் தோல்வியை தழுவியது.
Also Read: தலைக் கனத்தால் அழிந்த கொண்டிருக்கும் 6 ஹீரோக்கள்.. சீட்டிங் கேசில் டேமேஜ் ஆன விமல்
அசோக் செல்வன்: இந்த ஆண்டு அதிக தோல்வி படங்கள் கொடுத்ததாக அசோக் செல்வனின் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் ஆகிய 5 படங்களை குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இந்த 5 பிரபலங்களும் தொடர் ஐந்திற்கும் மேலான பிளாப் படங்களை அசால்டாக கொடுத்திருக்கின்றனர். அதிலும் மகான் படத்தின் மூலம் மகனுக்காக ரிஸ்க் எடுத்தும் விக்ரம் பருப்பு வேக வில்லை.