வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சக நடிகர்களை தூக்கி விட்டு அழகு பார்த்த 5 ஹீரோக்கள்.. சிம்புவிற்கு நிகராக போட்டி போடும் சந்தானம்

5 Celebrites: தனக்கு கிடைத்த வாய்ப்பைக் கொண்டு வெற்றி அடைந்தது மட்டுமல்லாது, தன் சக நடிகர்களையும் தூக்கிவிட்டு அழகு பார்க்கும் பிரபலங்கள் ஏராளம். அவரவர் திறமைக்கேற்ற வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு வாய்ப்பு அமைத்து கொடுத்த நடிகர்கள் தமிழ் சினிமாவில் உண்டு.

மேலும் இத்தகைய நட்பு ரீதியான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டு தன்னை ஹீரோக்களாக அடையாளப்படுத்திக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு தன் சக நடிகர்களின் வளர்ச்சியில் பங்களித்த 5 பிரபலங்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: அரேபிய குதிரையாக மாறி சூப்பர் ஸ்டாருடன் ஆட்டம் போட்ட தமன்னா.. ட்ரெண்டாகும் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள்

வெங்கட் பிரபு: சென்னை 600028, சரோஜா, மங்காத்தா, மாநாடு போன்ற படங்களில் வெற்றி கண்ட இயக்குனர் தான் வெங்கட் பிரபு. மேலும் ஒரு சில படங்களில் நடிகராகவும் மேற்கொண்ட இவர் வைபவுக்கு கோவா, பில்லா போன்ற படங்களில் வாய்ப்பு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்தே அவருக்கு அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர் படத்தில் கதை இல்லாமல் இருக்கலாம் ஆனால் தம்பி பிரேம்ஜி இல்லாமல் இருக்க முடியாது. அவ்வாறு ஒரு சில காட்சிகளில் ஆவது தன் தம்பியை நடிக்க வைத்து விடுவார்.

கே எஸ் ரவிக்குமார்: தமிழ் சினிமாவின் மாபெரும் இயக்குனர்களில் ஒருவரான கே எஸ் ரவிக்குமார், தான் மேற்கொள்ளும் படங்களில் ஒரு சில காட்சிகளில் இடம் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளவர். அவ்வாறு இருக்க, இவர் பொண்டாட்டி ராஜ்ஜியம் என்னும் படத்தில் சரவணனை ஹீரோவாக்கி அழகு பார்த்தார். இருப்பினும் அதை தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததாக கூறப்படுகிறது.

Also Read: மாரி செல்வராஜுக்கு போட்டியாக வரும் சசிகுமார்.. மாமன்னனை ஓரங்கட்ட வரும் அரசியல் கதை

விஜய் சேதுபதி: தான் ஏற்கும் கதாபாத்திரங்களாகவே மாறி நடிக்கும் வல்லமை கொண்டவர் விஜய் சேதுபதி. அவ்வாறு இருக்க ஜிகர்தண்டா படத்தில் மாஸ் காட்டிய பாபி சிம்ஹாவை தன் நடிப்பில் வெளிவந்த படமான பீட்சா மற்றும் சூது கவ்வும் படங்களில் இவரை நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு: தன் வெற்றி படங்களால் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சிம்பு. அவ்வாறு இருக்க, இவர் தன் படங்கள் ஆன மன்மதன் மற்றும் வல்லவன் போன்ற படங்களில் நகைச்சுவை நடிகரான சந்தானத்திற்கு வாய்ப்பு கொடுத்து இவரின் கேரியரை சப்போர்ட் செய்து உள்ளார். மேலும் அதைத் தொடர்ந்து தான் இவர் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு பெற்றார் எனவும் கூறப்படுகிறது.

Also Read: இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவர இருக்கும் 4 படங்கள்.. திரையரங்குகளில் சோடைப் போன பாட்ஷா

தனுஷ்: டாப் ஹீரோக்கள் வரிசையில் இடம் பெற்ற தனுஷ். தன் அடுத்த கட்ட படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் 3. இப்படத்தில் தனுஷின் உயிர் நண்பனாய் சிவகார்த்திகேயன் நடித்திருப்பார். அதை தொடர்ந்து நட்பு ரீதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல் என்னும் படத்தை தயாரித்தார். அதைத்தொடர்ந்து காக்கி சட்டை என்னும் படத்தில் மாஸ் ஹீரோவாய் சிவகார்த்திகேயன் நடித்திருப்பார். அதையும் இவரின் வொண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News