வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வெயிட்டான கதாபாத்திரத்தை மறுத்து அழும் 5 ஹீரோக்கள்.. பிரசாந்த் ரோலில் ஸ்கோர் செய்த மாதவன்

5 Actors: காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்போது அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் பீல்டு அவுட் ஆவது உறுதி என்பதை உறுதிப்படுத்திய நடிகர்களும் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். அவ்வாறு வெயிட்டான கதாபாத்திரத்தை மறுத்து அழும் 5 ஹீரோக்கள் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

சாந்தனு பாக்யராஜ்: அவ்வப்போது சினிமாவில் தலைகாட்டி செல்லும் இவர் மேற்கொள்ளும் படங்கள் இதுவரை எந்த பிடிப்பும் கொடுக்காமல் இருந்து வருகிறது. இவர் தந்தைக்கு உள்ள அதிர்ஷ்டம் இவருக்கு கொஞ்சம் கூட இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு தான் போடும் முயற்சி இருக்கு இன்று வரை பலன் கிடைக்காமல் இருந்து வருகிறார். அவ்வாறு ஜெய் நடிப்பில் காதல் வலியை உணர்த்தும் படமாய் வெளிவந்த சுப்பிரமணியபுரத்தில் முதலில் இவர் தான் நடிக்க இருந்ததாம். இந்த கதாபாத்திரம் செட் ஆகாது என ஒதுக்கியதாக கூறப்படுகிறது.

Also Read: விஜய் அரசியலுக்கு வந்தால் விளைவுகள் வேற மாதிரி இருக்கும்.. உங்க கப்பலே கவுந்து கிடக்கு இதுல இப்படி உருட்டா!

கருணாஸ்: 2013ல் கற்றது தமிழ் புகழ் ராம் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் தங்க மீன்கள். நல்ல கருத்துள்ள கதை கொண்டு இப்படம் 3 தேசிய விருதுகளை பெற்றது. கௌதம் மேனன் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்தில் முதலில் கருணாஸ் தான் ராம் கதாபாத்திரம் ஏற்று நடிப்பதாக இருந்தது. அப்பொழுது படப்பிடிப்பில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் இப்படம் கைவிடும் நிலைக்கு சென்றதாம் அதனால் கருணாஸ் இப்படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இதை மிஸ் செய்ததாகவும் வருத்தப்பட்டுள்ளார்.

பிரசாந்த்: விஜய், அஜித்தை போல டாப் ஹீரோக்கள் லிஸ்டில் இருக்க வேண்டிய நடிகர் தான் பிரசாந்த். அவ்வாறு இவர் மேற்கொண்ட, வைகாசி பிறந்தாச்சு, வண்ண வண்ண பூக்கள், செம்பருத்தி போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றியை கொடுத்தது. இந்நிலையில் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையை எதிர்கொண்ட பிரசாந்த் சினிமாவில் கவனம் செலுத்தாமல் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு அலைபாயுதே படத்தில் மாதவன் ஏற்ற கதாபாத்திரத்தை இவர் தான் முதலில் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் இவர் ஸ்கோர் செய்ய வேண்டிய இப்படத்தை தவறவிட்டு, மாதவன் ஸ்கோர் செய்து விட்டார்.

Also Read: சூப்பர் ஸ்டார் டைட்டிலை களவாடிய 10 படங்கள்.. மாமா தானே என உரிமையோடு 4 முறை சுட்ட தனுஷ்

அப்பாஸ்: காதல் தேசம், விஐபி போன்ற படங்களில் வெற்றி நாயகனாய் வலம் வந்தவர் அப்பாஸ். அதை தொடர்ந்து சில படங்கள் இவருக்கு கை கொடுக்காத நிலையில், அவ்வப்போது சினிமாவில் தலை காட்டி வந்த இவர் தற்பொழுது அறவே ஒதுங்கி விட்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அவ்வாறு உச்சகட்ட நாயகனாக இருந்த போது இயக்குனர் பசில் இவரை காதலுக்கு மரியாதை என்னும் படத்தில் நடிக்க அணுகியுள்ளார். ஆனால் அப்பாஸின் மேனேஜர் கால்ஷீட் பிசியாக உள்ளதால், இப்படத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

ஷாம்: இன்று வரை தமிழ் சினிமாவில் தன் திறமைக்கான அடையாளத்தை பெற முயற்சித்து வரும் நடிகர் தான் ஷாம். 12 பி, இயற்கை போன்ற படங்களில் பெரிதும் பேசப்பட்ட இவர், அதன் பின் எந்த படமும் இவருக்கு சரிவர கை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பார்த்தேன் ரசித்தேன் படத்தில், முதலில் இவருக்கு தான் வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் சில காரணத்தால் அப்படத்தை தவறவிட்ட ஷாம் இன்று வரை தன்னை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார்.

Also Read: பிரம்மாண்ட செலவாளி ஷங்கர் என்ற பெயரை மாற்றும் இந்தியன் 2.. 90% பணத்தை இப்பவே எடுத்த லைக்கா

Trending News