சினிமாவை பொருத்தவரை எந்த ஒரு கேரக்டராக இருந்தாலும் அவர்களுக்கு கொடுக்கிற முக்கியத்துவம் பொருத்தே பெரிய அளவில் ரீச் ஆவார்கள். அந்த வகையில் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு இணையாக வில்லன் கேரக்டருக்கு மிகப் பிரபலமாக இருக்கக்கூடிய நடிகர்களை வில்லன் ஆக்குவது தான் ட்ரெண்டாகி வருகிறது. அப்படி சில நடிகர்களை வில்லன் கேரக்டருக்கு கூப்பிட்டால் தலை தெரித்து ஓடி விடுகிறார்கள். அப்படியே அவர்கள் நடித்தாலும் ரோலக்ஸ் ஆகிட முடியுமா. எந்தெந்த நடிகர்கள் வில்லன் கேரக்டர் வேண்டாம் என்று சொன்னவர்களை பற்றி பார்க்கலாம்.
விஷால்: இவர் ஆரம்ப காலத்தில் நடித்த படங்கள் ஹிட்டாகி முன்னணி நடிகராக வந்து கொண்டிருந்தார். அதன்பின் என்ன ஆச்சு என்றே தெரியவில்லை இவரை கெட்ட நேரம் பிடிச்சு சுத்திக்கிட்டே இருக்கு என்று சொல்லலாம். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவுமே இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அத்துடன் தொடர்ந்து நண்பர்களாலும் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வந்தார். இந்நிலையில் எப்படியாவது மறுபடியும் ஒரு மாஸ் வெற்றியை கொடுக்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறார். ஆனால் அந்த நேரத்தில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் லியோ படத்தில் வில்லன் கேரக்டருக்கு இவரைத்தான் முதலில் கூப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் இவரோ வில்லன் கேரக்டரில் நடித்தால் ஹீரோ இமேஜ் போய்விடும் என்ற பயத்தால் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.
Also read: விஜய்யை வைத்து கேவலமான விளம்பரம் தேடும் விஷால்.. பப்ளிசிட்டியா இல்ல பதவியா, உஷாரா இருங்க
ஜெயம் ரவி: இவர் தற்போது வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் முகத்தைப் பார்த்தாலே ஒரு அம்மாஞ்சி, குழந்தைத்தனமான முகம் தான் ஞாபகம் வரும். இவர் வில்லன் என்று சொன்னால் அது எந்த அளவுக்கு சாத்தியமாகும். அதனால்தான் என்னமோ இவரை வில்லன் கேரக்டருக்கு கூப்பிட்டதும் எனக்கும் அதுக்கும் செட்டே ஆகாது என்னை ஆள விடுங்க என்று சொல்லிவிட்டார். இந்த அமுல் பேபி மாதிரி இருக்கிற ஜெயம் ரவி, ஹீரோ இமேஜ்க்கு மட்டும் தான் செட் ஆகும்.
பிரசாந்த்: இவர் சினிமாவிற்குள் வந்த 90 காலத்தில் இருந்து எல்லோருடைய மனதிலும் சாக்லேட் பாயாக இடம் பிடித்தவர். தற்போது என்னதான் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும் இதுவரை ஹீரோவாக நடித்து எல்லார் மனதிலும் குடி புகுந்து விட்டார். அப்படி இருக்கையில் இவரிடம் போய் வில்லன் கேரக்டரில் நடிக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு இவர் ஹீரோ வாய்ப்பு இருந்தால் கூப்பிடுங்கள் வில்லன் என்றால் என் பக்கமே வந்துவிடாதீர்கள் என்று கட்டன் ரைட்டாக கூறிவிட்டார்.
Also read: மணிரத்தினம் இயக்கத்தில் மாதவன் கொடுத்த 5 ஹிட் படங்கள்.. ஜோவையே காதலில் உருக வைத்த மேடி
மாதவன்: இவர் அலைபாயுதே, ரன், மின்னலே படத்தில் நடித்ததில் இருந்து எல்லோரும் மனதிலும் காதல் பாயாகத் தான் இருந்தார். ஆனால் ஏதாவது ஒரு வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்று துணிச்சலாக எடுத்த வில்லன் கேரக்டர் தான் ஆயுத எழுத்து படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்தார். ஆனால் அந்த படம் இவருக்கு சுத்தமாக எடுபடவே இல்லை. அத்துடன் அந்த படத்தில் இவர் நெகட்டிவ் ரோலில் நடித்ததற்கு அவப்பெயரை தான் வாங்கினார். அதனால் மறுபடியும் வில்லன் கேரக்டர் என்று சொன்னாலே தலை தெரித்து ஓடி விடுகிறார்.
பிரபுதேவா: இவர் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்ற ரசிகர்களால் அழைக்கப்படும் இண்டஸ்ட்ரியின் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமையை கொண்டவர். தற்போது இவர் அதிகம் கவனம் செலுத்துவது ஹீரோவாக நடிப்பது மட்டும்தான். அப்படி இருக்கும் போது இவரிடம் போய் வில்லனுக்கு நடிக்கிறீங்களா என்று கேட்டதற்கு அதிக அளவில் கோபப்பட்டு இந்த மாதிரி யோசனை கூட என்ன பார்த்து உங்களுக்கு வரக்கூடாது. எனக்கும் இந்த வில்லன் கேரக்டருக்கும் செட் ஆகாது என்று சொல்லிவிட்டார்.