ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

மொட்ட ராஜேந்தரை விட்டுக் கொடுக்காத 5 ஹீரோக்கள்.. பீடி அடித்ததில் இருந்து பென்ஸ் கார் வரை செய்த பயணம்

Mottai Rajenthran: நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆரம்பத்திலிருந்து சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார். நான் கடவுள் படம் தான் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்திற்கு பிறகு ராஜேந்திரன் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும், ஒரு சில ஹீரோக்கள் அவருக்கு தொடர்ந்து தங்களுடைய படங்களில் வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.

மொட்டை ராஜேந்திரனை விட்டுக் கொடுக்காமல் இருக்கும் ஐந்து ஹீரோக்கள்:

ஆர்யா: நான் கடவுள் படம் தான் மொட்டை ராஜேந்திரனுக்கு சினிமாவில் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தது. இந்த படத்திற்கு முன்பு வரை மொட்டை ராஜேந்திரன் பீடி அடித்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்ததாகவும், இந்த படம் மூலம் கிடைத்த வாய்ப்புகளால் தான் இன்று பென்ஸ் கார் வரை வைத்திருப்பதாகவும் அவரே பேட்டியில் சொல்லி இருக்கிறார். நான் கடவுளை தொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி படங்களில் ஆர்யாவுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

விக்ரம்: ஒல்லியான தேகம் வில்லனுக்கு அடையாளம் இல்லை என்றாலும், மொட்டை ராஜேந்திரன் தன்னுடைய கரகரப்பான குரலால் வில்லத்தனம் செய்தார். இவரை முதல் முதலில் திரையில் அடையாளம் காட்டிய படம் விக்ரமின் பிதாமகன். அதைத் தொடர்ந்து விக்ரம், மொட்டை ராஜேந்திரனுக்கு நிறைய உதவிகளை செய்து இருக்கிறார்.

சந்தானம்: நான் கடவுளில் வில்லனாக மிரட்டிய மொட்டை ராஜேந்திரனை காமெடி நடிகராக மாற்றிய படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இந்த படத்திற்கு பிறகு நடிகர் சந்தானம் தொடர்ந்து ராஜா ராணி, நண்பேண்டா, வேலாயுதம் , A1, பாரிஸ் ஜெயராஜ், தில்லுக்கு துட்டு போன்ற படங்களில் தன்னுடன் நடிக்கும் வாய்ப்புகள் கொடுத்தார்.

விஷால்: மொட்டை ராஜேந்திரன் நடிகர் விஷாலுடன் இணைந்து முதலில் சமர் படத்தில் இணைந்து நடித்தார். அதன் பின்னர் மதகத ராஜா படத்தில் விஷால் அவருக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார். அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. அதன் பின்னர் பட்டத்து யானை படத்திலும் ராஜேந்திரனுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார்.

சிவகார்த்திகேயன்: மொட்டை ராஜேந்திரன் முதன் முதலில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சீம ராஜா, ரெமோ படங்களில் ராஜேந்திரனுக்கு சிவகார்த்திகேயன் வாய்ப்பு கொடுத்திருந்தார். இவர்கள் இருவருடைய காம்போவில் வரும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தது

Trending News