சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

தம்பிகள் சீசனில் படையெடுக்கும் 5 ஹீரோக்கள் .. லியோவில் நடிப்பு அரக்கனின் தம்பியை களம் இறக்கும் லோகேஷ்

சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது என்ற பேச்சு ஒரு பக்கம் இருந்தாலும், நடிகர்களின் உடன்பிறந்தவர்களும் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சினிமாவில் களமிறங்குகின்றனர். ஆனால் அவர்கள் பெரிய அளவில் வரவில்லை என்றாலும் அவரது உடன்பிறந்த நடிகர்கள் அவர்களுக்கு வாய்ப்புகளை வாங்கிக்கொடுத்து அவர்களது ஆசைகளை நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் களமிறங்கி வரும் 5 தம்பி நடிகர்களை தற்போது பார்க்கலாம்.

ஆர்யா- சத்யா: நடிகர் ஆர்யாவின் உடன்பிறந்த தம்பியான நடிகர் சத்யா அமரக்காவியம் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன் பின் இவர் பெரிதாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது காதல் 2 கல்யாணம் என்ற படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், திடீரென இப்படம் பாதியிலே நின்றது. இதனிடையே 15 வருடங்கள் கழித்து இப்படத்தில் மீண்டும் சத்யா ஹீரோவாக நடித்து வருகிறார்.

Also Read: ஓடிடி-யில் கூட விலை போகாத ஆர்யாவின் 5 படங்கள்.. சந்தானத்தை மலை போல் நம்பி இறங்க காரணம்

சிம்பு-குறளரசன்: நடிகர் சிம்புவின் தம்பியான இவர் சில படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் நடிக்க ரீ என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்தை தழுவிய இவர் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். மேலும் இவர் அதிக எடையுடன் காணப்படுவதால் உடலை குறைத்து கூடிய விரைவில் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

அதர்வா-ஆகாஷ்: நடிகர் அதர்வாவின் உடன்பிறந்த தம்பியான ஆகாஷ் இயக்குனர் விஷ்ணுவரதன் இயக்கத்தில் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் இளைய மகளும், நடிகையுமான அதிதி ஷங்கர் ஜோடி போட்டு நடித்து வருகிறார். மேலும் இப்படத்தை விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ இப்படத்தை தயாரிக்கிறார். நடிகர் ஆகாஷ், சேவியர் பிரிட்டோவின் மகளான சினேகா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கமல், சூர்யா கொடுத்த தைரியம்.. பார்ட் 2 படத்திற்கு பழைய காதலியை ஜோடியாக்கும் சிம்பு

ராகவா லாரன்ஸ் – எல்வின்: நடிகர், நடன கலைஞர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸின் உடன் பிறந்த தம்பிதான் நடிகர் எல்வின். இவர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 2 படத்தில் இடம்பெற்ற சில்லாட்ட, பிள்ளாட்ட என்ற பாடலில் லாரன்சுடன் இணைந்து எல்வின் குத்தாட்டம் போட்டிருப்பார். இதனிடையே இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் புல்லட் திரைப்படத்தில் எல்வின் ஹீரோவாக நடித்து வருகிறார்.

நாசர்- ஜவகர்: ஹீரோ, வில்லன், துணை கதாபாத்திரம் என பன்முகத்தன்மை கொண்ட நடிகர் நாசர், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவரை போலவே அச்சு அசலாக இருக்க கூடிய இவருடைய தம்பி ஜவஹர், தற்போது லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 40 நாட்கள் நடந்த காஷ்மீர் படப்பிடிப்பில் 15 நாட்கள் ஜவஹர் தனது ஷூட்டிங்கை முடித்துள்ளதாக அண்மையில் தெரிவித்தார். நடிகர் நாசர் போலவே இவரது நடிப்பும் ரசிகர்களை கவருமா என்பதை பொறுத்திருந்து பார்கலாம்.

Also Read: 99.9% உறுதி ஆயிடுச்சு.. சிஷ்யனுக்காக களமிறங்கிய கமல், லியோ செய்யப் போகும் சம்பவம்

Trending News