வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 21, 2025

பிரதீப் போல் உருவ கேலி செய்யப்பட்ட 5 ஹீரோக்கள்.. மரண அடி கொடுத்து மீசையை முறுக்கிய நம்ம வீராச்சாமி

ஹீரோவுக்கு நடிப்பதற்கெல்லாம் ஒரு அழகிய முகம் தேவை. இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா நடிக்குது என தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களை மக்களே உருவ கேலி செய்துள்ளனர். ஆனால் அவர்கள் எதையும் பொறுப்பெடுத்தாமல் எல்லாருடைய வாயையும் அடைக்கும் அளவிற்கு பெரிய ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார்கள். அப்படி ஜெயித்த 5 ஹீரோக்கள்

விஜய்: 1992 நாளைய தீர்ப்பு படம் வெளியானதும் விஜய்யின் முகத்தை பார்த்து அனைவரும் கேலி செய்தனர். பிரபல நாளிதழாகிய குமுதம் அவரை தாறுமாறாக உருவ கேலி செய்தது. அதை எதிர்த்து விஜய்யின் தந்தை குமுதம் ஆபீசை அடித்து நொறுக்கினார். ஆனால் இன்று விஜய் இருக்கும் இடம்?

டி ராஜேந்தர்: எல்லாத்தையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ளும் டி ராஜேந்தர் நடித்த முதல் படத்திலேயே அவரை உருவ கேலி செய்து மட்டம் தட்டினார்கள். ஆனால் அவரிடம் இல்லாத திறமைகளே இல்லை. இன்று எல்லாத்தையும் தாண்டி அவர் சினிமாவில் ஜெய்துள்ளார்.

தனுஷ்: தந்தை இருக்கும்போது சினிமாவிற்குள் மகனை கொண்டு வந்து விடுவார். ஆனால் ஹீரோவாக நடிப்பதற்கெல்லாம் ஒரு அழகு வேண்டும் என தனுசும் ஆரம்பத்தில் கேலி கிண்டலுக்கு ஆளாகியவர் தான். இன்று உச்ச நட்சத்திரங்களில் ஒருவர்.

பிரதீப் ரங்கநாதன்: சமீபத்தில் டிராகன் பட விழாவில் இவர் குமுரிய குமுறல்கள் தான் இன்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. என்னை மட்டம் தட்டுகிறார்கள், என்னை அடக்குகிறார்கள் என்றெல்லாம் இவர் பேசினார். அதுமட்டுமின்றி தனுஷ் போல் இவரையும் உருவ கேலி செய்கிறார்களாம்.

நாகேஷ்: நடிக்க வந்த புதிதில் பார்ப்பதற்கு மெல்லிய ஆளாகவும், ஒட்டி போன கன்னங்களுடன் இருந்த நாகேஷ்சை தமிழ் சினிமா மட்டம் தட்டியது. ஆனால் அதையெல்லாம் தாண்டி தனக்கு எது வந்ததோ அதை வைத்து ஜெயித்துக் காட்டினார். காமெடியில் முடி சூடா மன்னனாக வெற்றி பெற்றார்.

Trending News