செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மார்க்கெட் இறங்கியதால் நயன்தாராவின் இடத்தை பிடிக்க துடிக்கும் 5 ஹீரோயின்கள்.. உச்சகட்ட கவர்ச்சிக்கு ஓகே சொன்ன 6 அடி நடிகை

Nayanthara: அண்ணன் எப்ப எந்திரிப்பான் திண்ண எப்போ காலியாகும்னு சிலர் காத்திருப்பதுண்டு. அப்படிதான் இப்போது அடுத்த நயன்தாரா யார் என்ற போட்டியும் இருக்கிறது. நயன்தாராவே ஆக்டிவாக நடித்து கொண்டிருக்கும் போது, இப்போ எதுக்கு அடுத்த நயன்தாரா பஞ்சாயத்து என கேட்டால், கல்யாணத்திற்கு பிறகு நயன் மார்க்கெட் டல் ஆகி கொண்டிருப்பதன் விளைவு தான் இது. நயன்தாரா இடத்திற்கு போட்டா போட்டி போட்டு கொண்டிருக்கும் 5 நடிகைகளை பார்க்கலாம்.

போட்டா போட்டி போட்டு கொண்டிருக்கும் 5 நடிகைகள்

கீர்த்தி சுரேஷ்: மகாநடி என்னும் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் கீர்த்தி சுரேஷ். என்ன தான் திறமையான நடிப்பை காட்டினாலும் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ட்ரோல் மெட்டீரியலாக தான் இவர் இருக்கிறார். தொடர்ந்து விஜய் உடன் நடித்தும் எந்த பிரயோஜனமும் இல்லாமல் போனது. நயன்தாராவின் மார்க்கெட் சரிய தொடங்கியதில் இருந்து இவருக்கு நிறைய ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் கிடைத்திருக்கின்றன. அதில் ஒரு படம் கூட தேறவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

சமந்தா: நடிகை சமந்தா ஏற்கனவே தென் இந்திய சினிமாவில் தன்னைக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டிருந்தார். கடந்த வருடம் சமந்தா நடிப்பில் வெளியான யசோதா படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது . ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் கவர்ச்சி என கலக்கி கொண்டிருந்த இவர் தான் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் என பேச்சுக்கள் எழுந்த நிலையில் தான் இவருக்கு மையோசைடிஸ் நோய் தாக்கியது. தீவிர சிகிச்சை பெற்று வரும் இவர் தொடர்ந்து சினிமாவிலும் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: எதிர்பாராத நேரத்தில் அசுர வளர்ச்சி அடைந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்ப காலத்தில் இவருக்கு விஜய் சேதுபதியின் படங்களில் மட்டுமே வாய்ப்பு கிடைத்து வந்தது. காக்கா முட்டை படம் இவருடைய சினிமா கேரியரில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது . நயன்தாரா கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி கொண்டிருக்கும் நிலையில் சின்ன தயாரிப்பாளர்களுக்கு எல்லாம் இவர் தான் இப்போது லோ பட்ஜெட் நயன்தாராவாக இருக்கிறார் .

சாய் பல்லவி: ப்ரேமம் என்னும் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் தன்னுடைய பக்கம் சாய்த்து விட்டார் சாய் பல்லவி. நடுவில் கொஞ்சம் பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஆசைப்பட்டு ரொம்பவே சொதப்பி கொண்டிருந்தார். தற்போது சரியான பாதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் இவருக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது.

ப்ரியா பவானி ஷங்கர்: தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டும் தான் ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கிறாரா, அல்லது அவருக்கு வாய்ப்பு கம்மியாக தான் கிடைக்கிறதா என புரியாத குழப்பம் தான் நீடிக்கிறது. இருந்தாலும் கிடைக்கும் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் எல்லாம் இறங்கி நடித்து விட வேண்டும் என இப்போது உறுதியாக இருக்கிறார். உச்சகட்ட கவர்ச்சி காட்டவும் அம்மணி ரெடியாக இருப்பதாக தெரிகிறது.

Trending News