சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சுந்தர் சி விட்டுக் கொடுக்காத 5 நடிகைகள்.. அட இதுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா!

Sundar C: இயக்குனர் சுந்தர் சி யை பொருத்தவரைக்கும் தயாரிப்பாளர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு படம் பண்ணி கேரண்டி வெற்றியை கொடுக்கக் கூடியவர். நிறைய நட்சத்திரங்களை வைத்து மசாலா படங்களை கொடுக்கும் இயக்குனர் என்றாலும் சுந்தர் சி தன்னுடைய படங்களில் விட்டுக் கொடுக்காத முக்கியமான 5 நடிகைகள் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அந்த 5 பேருமே அவருடைய காதல் மனைவி குஷ்பூவின் சாயலில் இருந்தது தான்.

சுந்தர் சி விட்டுக் கொடுக்காத 5 நடிகைகள்

பூனம் பாஜ்வா: நடிகை பூனம் பாஜ்வா தமிழ் சினிமாவில் உண்மையிலேயே முன்னணி நடிகையாக வர வேண்டியவர். திடீரென உடல் எடை கூடியதால் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் சரியாக அமையவில்லை. பூனம் பாஜ்வாவுக்கு மார்க்கெட் இல்லாத சமயத்திலேயே சுந்தர் சி அரண்மனை 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்திருந்தார். அந்தப் படம் ரிலீஸ் ஆன உடனே தன்னுடைய முத்தின கத்திரிக்கா படத்திலும் கதாநாயகியாக நடிக்க வைத்தார்.

கிரண்: நடிகை கிரண் முதன் முதலில் சுந்தர் சி யின் இயக்கத்தில் அன்பே சிவம் படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து பிரசாந்த் மற்றும் வடிவேலுவின் காமெடி கலாட்டாவில் சுந்தர் சி இயக்கிய வின்னர் படத்திலும் ஹீரோயின் ஆக நடித்தார். கிரணுக்கு மார்க்கெட்டே இல்லாமல் இருந்த நேரத்திலும் சுந்தர் சி இயக்கத்தில் வெற்றி பெற்ற ஆம்பள படத்தில் அவருக்கு முக்கிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்திருந்தார்.

Also Read:49 வயதில் நக்மாவிற்கு வந்த கல்யாண ஆசை.. பாட்ஷாவின் காதலிக்கு இருந்த நிஜமான 4 எக்ஸ் காதலர்கள்

ஹன்சிகா: நடிகை ஹன்சிகா தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய போது அவரை சின்ன குஷ்பூ என்று எல்லோரும் கொண்டாடினார்கள். அதைத் தொடர்ந்து குஷ்பூவின் காதல் கணவரான சுந்தர் சி இயக்கத்தில் முதலில் ஹன்சிகா அரண்மனை படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அரண்மனை இரண்டாம் பாகத்திலும் ஹன்சிகாவுக்கு தான் முக்கியமான கேரக்டர் கொடுத்து இருந்தார் சுந்தர் சி.

நமிதா: ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நமீதா இல்லாத சுந்தர் சி படங்களே இல்லை என பத்திரிகைகளுக்கு தீனி போடும் அளவுக்கு இவர்களுடைய கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. படம் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை அதில் நமீதா இருந்தால் போதும் என முடிவெடுத்து சுந்தர் சி சண்டை, பெருமாள், வாடா என அடுத்தடுத்து பட வாய்ப்புகளை அவருக்கு அள்ளி வழங்கினார்.

ரம்யா கிருஷ்ணன்: நமீதாவை தொடர்ந்து சுந்தர் சி யின் பேவரட் லிஸ்டில் சமீபத்தில் இருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் முதலில் சுந்தர் சி இயக்கத்தில் பெரிய வெற்றி பெற்ற ஆம்பள படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். அதைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் படத்திலும் ரம்யா கிருஷ்ணனுக்கு முக்கியமான கேரக்டர் கொடுத்திருந்தார்.

Also Read:ஜிம்மில் தலைகீழாக தொங்கும் ஹன்சிகா.. வெறித்தனமாக வெளியான ஒர்க்அவுட் புகைப்படம்

Trending News