வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சண்டைக் காட்சியில் பின்னி பெடல் எடுத்து 5 ஹீரோயின்கள்.. விஜயசாந்திக்கு டஃப் கொடுத்த சினேகா

சினிமாவை பொருத்தவரையில் சண்டை காட்சி என்றாலே ஆண்களுக்கு என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் சில படங்களில் ஹீரோயின்களும் ஆண்களுக்கு இணையாக சண்டைக்காட்சிகளில் நடித்த அசத்தியுள்ளனர். அந்த வகையில் ஆக்சன் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்த ஐந்து நடிகைகளை தற்போது பார்க்கலாம்.

விஜயசாந்தி : அரசியல், சினிமா இரண்டிலும் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியவர் நடிகை விஜயசாந்தி. இவர் அதிரடி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றார். போலீஸ் கெட்டப் என்றாலே முதலில் விஜயசாந்தி தான் தேர்வாவார். அவ்வாறு அதிரடி காட்சிகளில் பின்னி பெடல் எடுக்கக் கூடியவர்.

Also Read : பட வாய்ப்பு தருகிறேன் என தவறான உறவுக்கு அழைத்த நபர்.. விஜயசாந்தி ரேஞ்சுக்கு வெளுத்து வாங்கிய அனிதா சம்பத்

ஜோதிகா : ஜோதிகா எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல் தத்ரூபமாக நடிக்க கூடியவர். பல வருடங்களுக்குப் பிறகு ரி என்ட்ரி கொடுத்திருக்கும் ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதில் ஜாக்பாட் என்ற படத்தில் சண்டைக் காட்சிகளில் நடித்த அசத்து இருப்பார்.

நிக்கி கல்ராணி : துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சப் இன்ஸ்பெக்டர் அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் ஆண்களுக்கு இணையாக சண்டைக்காட்சிகளில் நிக்கி கல்ராணி நடித்திருப்பார்.

Also Read : 200 கோடி கொடுத்தும் மசியாத ரஜினி.. காசை பார்த்ததும் கரஞ்ச சூர்யா, ஜோதிகா

அனுஷ்கா ஷெட்டி : அனுஷ்கா டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு பல படங்களில் நடித்துள்ளார். இவர் பாகுபலி படத்திலேயே தனது துணிச்சலான நடிப்பை வெளிக்காட்டி அனைவரது பாராட்டையும் பெற்றார். மேலும் அருந்ததி படத்தில் வால் வீச்சு சண்டை காட்சியில் நடித்து அசத்து இருந்தார்.

சினேகா : சினேகா தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஒரு ரவுண்டு வந்தார். விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்ட நடித்தார். பவானி ஐபிஎஸ் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக சினேகா சண்டைக்காட்சிகளில் அடித்து நொறுக்கி இருப்பார். விஜயசாந்திக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு அவரது சண்டை காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

Also Read : சினேகா விருது பெற்ற 4 திரைப்படங்கள்.. பின்ன புன்னகை அரசிக்கு கிடைக்காமல் இருக்குமா

Trending News