வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ராசியை இல்லன்னு ஒதுக்கப்பட்ட 5 ஹீரோயின்கள்.. வந்த வேகத்திலேயே காணாமல் போன லட்சுமி மேனன்

5 heroines no zodiac sign: அழகும், திறமையும் இருந்தால் சினிமாவில் ஜெயித்து விடலாம் என்று சொல்வார்கள். ஆனால் அதோடு சேர்ந்து அதிர்ஷ்டம் இல்லாததால் சில நடிகைகள் தற்போது வரை போராடி வருகிறார்கள்.

அதனாலயே தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கண்ணுக்கு இந்த ஐந்து நடிகைகள் ராசி இல்லைன்னு ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

கங்கனா ரனாவத்: தமிழில் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் பாலிவுட் படங்களில் அதிகமாக நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இவரைப் பற்றி எத்தனையோ சர்ச்சைகள் வந்திருக்கிறது. மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த தாக்கட் படம் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்தது.

கிட்டத்தட்ட 85 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் வெறும் மூன்று கோடி லாபத்தை கூட எட்ட முடியாமல் தவித்தது. அதனாலேயே வெற்றிக்கு அதிர்ஷ்டம் இல்லை என தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் ஒதுக்கி வருகிறார்கள்.

நித்யா மேனன்: மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நித்யா மேனன் தமிழிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகிவிட்டார்.

பொதுவாக இவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரம் இவருடைய கேரக்டருக்கு செட்டாக கூடியதாகவும், மக்களிடம் ரீச் ஆகுற மாதிரி இருந்தால் மட்டுமே தேர்வு செய்வார். அத்துடன் பார்ப்பதற்கு குண்டாகவும் இருப்பதால் இவரை வைத்து எடுத்தால் படம் பெருசாக வெற்றியடையாது என்பதினால் தொடர்ந்து வாய்ப்புகள் வருவதில்லை.

வந்த வேகத்திலேயே காணாமல் போன லட்சுமி

லக்ஷ்மி மேனன்: தமிழ் சினிமாவில் அறிமுகமான கொஞ்ச நாளிலேயே பல படங்களில் நடித்து கிடு கிடுன்னு வளர்ந்து விட்டார். அத்துடன் பார்ப்பதற்கு அழகாகவும் லட்சணமாகவும் இருப்பதினால் எந்த கேரக்டர்கள் கொடுத்தாலும் இவருக்கு செட் ஆகும்.

ஆனால் இது எல்லாமே கொஞ்ச காலத்துக்கு மட்டும் தான் என்பதற்கு ஏற்ப அடுத்தடுத்து எங்கே போனார் என்று தேடும் அளவிற்கு இவருடைய படங்கள் எதுவுமே வெற்றி பெறவில்லை.

ஹன்சிகா: ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் எல்லாமே வெற்றியாகவும் முன்னணி ஹீரோயினாகவும் வளர்ந்து வந்தார். ஆனால் போகப் போக இவருடைய நடிப்பையும் இவரையும் பார்ப்பதற்கு பிடிக்காமல் போய்விட்டது.

அதனால்யே சினிமாவில் இவருடைய மார்க்கெட் டவுன் ஆகிவிட்டது. பிறகு நல்ல வசதியான மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணி செட்டில் ஆகி விட வேண்டும் என்று கல்யாணத்தை பண்ணிக்கொண்டார். மேலும் இவருக்கு இருக்க ஓவர் தலைக்கனத்தால் இந்த நடிகை வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் ஒதுக்கும் அளவிற்கு அலப்பறையை பண்ணி இருக்கிறார்.

சுருதிஹாசன்: கமலின் மகளாக சினிமாவிற்குள் அறிமுகமாகி இருந்தாலும் இவருடைய நடிப்பு மக்களை கவர முடியவில்லை. அதனால் தமிழில் மார்க்கெட் இல்லாமல் போனதால் தெலுங்கு பக்கம் போய்விட்டார்.

இதற்கு இடையில் இவர் நடித்த படங்கள் பெயிலியர் படங்களாக முத்திரை குத்தப்பட்டு விட்டது. இவரிடம் திறமைகள் இருந்தாலும் அதிர்ஷ்டம் இல்லாததால் ராசி இல்லை என்று இயக்குனர்கள் இவரை தேடி போவதில்லை.

Trending News