ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பாலா டார்ச்சரில் சிக்கிய 5 நடிகைகள்.. சினிமாவுக்கு முழுக்கு போட்ட அஜித் பட ஹீரோயின்

Director Bala: இயக்குனர் பாலாவின் படங்களை பார்ப்பதற்கே ஒரு மன தைரியம் வேண்டும். பாலாவுக்கு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கவும் தெரியும். அதே மாதிரி கிளைமாக்ஸ் காட்சி இவ்வளவு வன்முறையா என்று பதற வைக்கவும் தெரியும்.

தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்க்கும் ரசிகர்களுக்கே இந்த நிலைமை என்றால், அவர் படத்தில் நடிக்கும் நடிகர்களை பத்தி நினைத்துப் பாருங்கள். அப்படி பாலாவிடம் சிக்கி பயங்கர டார்ச்சரை அனுபவித்த ஐந்து நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

இவானா: நடிகை இவானா என்று சொன்னதும் லவ் டுடே படத்தில் நெய் குழந்தை போல் வந்த முகம் தான் ஞாபகம் வரும். ஆனால் அதற்கு முன்பே நாச்சியார் படத்தில் இயக்குனர் பாலாவால் வறுத்தெடுக்கப்பட்டு விட்டார் இவானா.

சின்ன வயதிலேயே கற்பழிப்பு காட்சி, கர்ப்பிணி போல் நடிப்பது என எல்லா டார்ச்சர்களையும் சந்தித்து இருக்கிறார். இந்த படத்தில் இவானாவின் நடிப்பை பற்றி ஜோதிகா ஒரு மேடையில் ரொம்பவும் பெருமையாக பேசி இருந்தார்.

பூஜா: நடிகை லைலாக்கு பிறகு அந்த இடத்தை ஓரளவுக்கு பூர்த்தி செய்தவர் தான் பூஜா. எப்போதும் கலகலப்பாக நடிக்க கூடிய பூஜா, நான் கடவுள் படத்தில் பாலாவிடம் வசமாக சிக்கினார். இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன் இடம் அடி வாங்குவது, கீழே உருண்டு விழுவது எல்லாமே பூஜா உண்மையாகவே செய்தார்.

அது மட்டும் இல்லாமல் கண் தெரியாதவராக நடிப்பதற்காக கண்ணில் லென்ஸ் ஒரு நாள் முழுக்க மாட்டியிருக்க வேண்டும். இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு நடித்தது தேசிய விருதுக்காக தான். ஆனால் அந்த உழைப்புக்கும் பலன் இல்லை. பாலாவின் டார்ச்சரை சகித்துக் கொண்டது தான் மிச்சம். இந்த சினிமாவே வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு விட்டுப் போய்விட்டார்.

வேதிகா: தமிழ் சினிமாவிற்கு இறக்குமதியான பால் டப்பா நடிகைகளின் வேதிகாவும் ஒருவர். தன்னுடைய நடிப்பு திறமையை காட்ட வேண்டும் என்ற ஆசையில் பாலாவின் பரதேசி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

கிட்டத்தட்ட அவரை கருப்பாக காட்டவே மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் மேக்கப் போட வேண்டியதாய் இருந்தது. அதேபோன்று இந்த படத்தின் காட்சியில் அவர் வாங்கிய அடிகளும், மிதிகளும் எதார்த்தமாக தெரிய வேண்டும் என்பதற்காக உண்மையிலேயே வாங்கியது.

மமிதா பாஜு: பெரும்பாலும் பாலா படங்களில் நடிக்கும் நடிகைகள் அவர் செய்யும் டார்ச்சரை வெளியில் சொல்வதில்லை. ஆனால் வணங்கான் படத்தில் நடித்த நடிகை மமிதா பாஜு மூலம் சில விஷயங்கள் வெளியில் வந்தது.

இந்த படத்தில் சூர்யா முதலில் கமிட்டாகி இருந்த போது அவருடன் இணைந்து நடித்தவர் தான் மமிதா பாஜு. இவர் படபிடிப்பு தளங்களில் பாலா தன்னை அடித்ததாக ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.

பனிடா ஷந்து: தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தையே பலரும் இன்று வரை கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது சீயான் விக்ரம் தன்னுடைய மகனை அறிமுகப்படுத்துவதற்கு இந்த படத்தை ரீமேக் செய்ய விரும்பினார்.

சேது படத்தின் மூலம் தனக்கு வாழ்க்கை கொடுத்த பாலா தான் தன்னுடைய மகனை அறிமுகப்படுத்த வேண்டும் என விரும்பினார். ஆனால் பாலா வழக்கம் போல தன்னுடைய வேலையை காட்டி விட்டார்.

ஒரு முழு படமும் எடுக்கப்பட்டு பின்னர் அது வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் ஆதித்ய வர்மா என்று உருவான இந்த படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் பனிடா ஷந்து. இவரும் வாழ்க்கையை வெறுத்துப் போகும் அளவுக்கு அந்த படப்பிடிப்பு தளத்தில் பாலாவால் டார்ச்சர் செய்யப்பட்டு இருக்கிறார்.

Trending News