சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நாங்களும் டெரர் பீஸ் தான்.. வில்லி முகம் காட்டி மொக்கை வாங்கிய 5 ஹீரோயின்கள்

Actress Simran: ஹீரோயின்கள் என்றாலே அழகு பதுமையாக கொஞ்சிக் கொஞ்சிப் பேசி டூயட் பாடும் கேரக்டர்களில் தான் நடிப்பார்கள். ஆனால் நாங்களும் டெரர் பீஸ் தான் என்று வில்லத்தனத்தில் இறங்கிய நடிகைகளும் இருக்கிறார்கள். அவ்வாறு கொடூர வில்லத்தனமான கேரக்டர்களில் பார்த்தாலும் அவர்களை அமுல் பேபி போல் தான் நினைக்க தோன்றும். அப்படி வில்லி முகம் காட்டி மொக்கை வாங்கிய ஐந்து ஹீரோயின்கள் பற்றி இங்கு காண்போம்.

சிம்ரன்: ஒரு காலத்தில் தன்னுடைய அசத்தலான நடனத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் சீம ராஜா படத்தில் வில்லியாக நடித்திருப்பார். ஆனால் அந்த கேரக்டர் இவருக்கு எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு முன்பே பார்த்தேன் ரசித்தேன் படத்தில் அப்படி ஒரு வில்லத்தனத்தில் நடித்திருப்பார். அது கூட அவருக்கு பொருத்தமாக இருந்தது ஆனால் சீம ராஜா படத்தில் புடவையை வரிந்து கட்டிக்கொண்டு செம லோக்கலாக நடித்திருப்பார். ஆனாலும் அவரை வில்லியாக பார்க்கவே தோன்றவில்லை.

Also read: விவாகரத்தை ட்ரெண்ட் ஆக்கிய 5 டிவி தொகுப்பாளர்கள்.. ஒரே வருடத்தில் முடிவுக்கு வந்த திருமண உறவு!

திரிஷா: தனுஷ் இரு வேடங்களில் நடித்த கொடி படத்தில் இவர் தன் காதலனையே கொல்லும் அளவுக்கு வில்லியாக நடித்திருப்பார். இருப்பினும் அவருடைய வில்லத்தனம் நம்மை மிரள வைப்பதற்கு பதில் ரசிக்கவே வைத்தது. அதன் காரணமாகவே இந்த வில்லி தோற்றம் அவருக்கு கொஞ்சம் கூட பொருந்தவில்லை.

சமந்தா: விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள படத்தில் சமந்தா இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அதில் ஒரு கேரக்டர் கொடூரமான வில்லியாக சித்தரிக்கப்பட்டிருக்கும். அதிலும் சமந்தா அதில் புகை பிடிக்கும் படியாக நடித்திருந்தது அதிர்ச்சியை தான் கிளப்பியது. ஆனாலும் அந்த வில்லி கேரக்டர் இந்த பார்பி டாலுக்கு பொருந்தாமல் இந்த கேரக்டருக்கு நீங்க சரிப்பட்டு வர மாட்டீங்க என சொல்ல வைத்தது.

Also read: ரீ என்ட்ரி-யில் பட்டைய கிளப்பிய மேடியின் 5 திரைப்படங்கள்.. இரண்டு வருடம் சினிமாவுக்கு பிரேக் கொடுத்த மாதவன்

ஜோதிகா: சரத்குமார் நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் இவர் பணத்திற்காக எதையும் செய்யும் வில்லியாக நடித்திருப்பார். அதிலும் ஆண்களை மயக்கி பணம் பறிக்கும் ஒருவராக ஜோதிகா நடித்தது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கிளைமாக்ஸ் காட்சியில் அவர் நானும் டெரர் பீஸ் தான் என காட்டும் வகையில் நடித்திருப்பார். ஆனாலும் அவரை வில்லியாக நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

மனிஷா கொய்ராலா: தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் அவருக்கு மாமியாராக இவர் நடித்திருப்பார் இதுவே பெரும் ஷாக்காக இருந்த நிலையில் வில்லத்தனம் காட்டுகிறேன் என்ற பெயரில் இருந்த அவருடைய நடிப்பு க்யூட் ஆகத்தான் இருந்தது. அதனாலேயே அவர் இந்த படத்தில் வில்லி என்ற பெயரில் மொக்கை வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also read: இயக்குனர் சந்தானபாரதி வெற்றி கண்ட 5 படங்கள்.. கண்ணீர் சிந்த வைத்த கமல் படம்

இப்படி இந்த ஐந்து ஹீரோயின்களும் வில்லியாக நடித்திருந்தாலும் ரசிகர்களுக்கு க்யூட்டாகத் தான் தெரிந்தார்கள். அந்த வகையில் நாங்களும் டெரர் பீஸ் என மாஸ் காட்ட வந்த இந்த நடிகைகள் மொக்கை வாங்கியது தான் மிச்சம்.

Trending News