செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கோடிகளை குவித்த அசோக்செல்வனின் 5 படங்கள்.. மூன்றே நாளில் போர் தொழில் செய்த வசூல் சாதனை

Actor Ashok Selvan: அசோக் செல்வன் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவருடைய சில படங்கள் கோடிகளில் வசூல் செய்துள்ளது. அசோக் செல்வன் முதலாவதாக பில்லா 2 படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சில படங்களில் நடித்து வந்த நிலையில் தெகிடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்நிலையில் அவருடைய கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய 5 படங்களை பார்க்கலாம்.

தெகிடி : அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தெகிடி. இப்படத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்காக துப்பறியும் வேலையை அசோக் செல்வன் செய்வார். இப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. தெகிடி படம் 6.2 கோடி வசூல் செய்தது.

Also Read : சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பு அபாரம்.. போர் தொழில் அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

ஓ மை கடவுளே : அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஓ மை கடவுளே. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படம் 12.5 கோடி வசூல் செய்து தற்போது வரை அசோக் செல்வனின் படங்களில் அதிக வசூல் செய்த படமாக இருக்கிறது.

பீட்சா 2 : தீபன் சக்ரவர்த்தி இயக்கத்தில் அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி, நாசர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பீட்சா 2 வில்லா. பீட்சா முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாசத்திற்கும் நல்ல விமர்சனம் கிடைத்தது. மேலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 6 கோடி வசூல் செய்திருந்தது.

Also Read : சித்தார்த் பட கலக்சனை திணறடித்த போர் தொழில்.. ஆரவாரமில்லாமல் பல கோடிகளை வாரி இறைக்கும் சூப்பர் காம்போ

மன்மத லீலை : வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், பிரேம்ஜி போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்த படம் மன்மத லீலை. இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் வசூலை பொருத்தவரையில் மன்மத லீலை படம் 6.5 கோடி வசூல் செய்திருந்தது.

போர் தொழில் : விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் போர் தொழில். இதுவரை அசோக் செல்வன் காட்டாத புதிய பரிமாணத்தை இப்படத்தில் காட்டி இருக்கிறார். இதன் மூலம் அசோக் செல்வனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அதோடு மூன்றே நாட்களில் போர் தொழில் படம் 5.7 கோடி வசூல் செய்திருக்கிறது.

Also Read : பதட்டத்திலேயே வைத்திருக்கும் சிறந்த 6 புலனாய்வு படங்கள்.. ராட்சசனை மிஞ்சிய போர் தொழில்

Trending News