வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

யாரு சாமி நீ என கேட்க வைத்த 5 ஹிட் இயக்குனர்கள்.. தொட்டதெல்லாம் துலங்க வைத்த லோகேஷ்

Director Lokesh Kangaraj: தன் மனதில் தோன்றும் கதைக்கேட்ப கதாபாத்திரங்களை அமைத்து படம் இயக்கி வெற்றி காண்பவர்கள் தான் இயக்குனர்கள். அவ்வாறு தன் கருத்துக்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் முயற்சியில் சாதித்த இயக்குனர் ஒரு சிலரே பெரிதும் பேசப்படுவார்கள்.

தன் படத்தின் வெற்றியை கொண்டு தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்திக் கொண்ட இயக்குனர்களும் உண்டு. அவ்வாறு தொடர் ஹிட் படங்களை கொடுத்த 5 இயக்குனர்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: ஆயுத பூஜையும் இல்ல, தீபாவளியும் இல்ல.. ரிலீஸ் தேதியை லாக் செய்த சந்திரமுகி 2

ஷங்கர்: எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் தொடர் வெற்றிகளை கொடுத்த சிறந்த இயக்குனர் தான் ஷங்கர். இவர் வெற்றி கண்ட எண்ணற்ற படங்களில் இந்தியன், சிவாஜி, எந்திரன் போன்ற படங்கள் பிரம்மாண்டமாய் எடுக்கப்பட்டு பெரும் வசூலை கண்டது. மேலும் தற்பொழுது கமலின் நடிப்பில் இந்தியன் 2 வின் படப்பிடிப்பை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜமவுலி: தன் எதார்த்தமான கற்பனைக்கு உயிர் கொடுத்தவாறு இவர் மேற்கொண்ட படங்கள் ஆரம்ப காலகட்டத்தில் கை கொடுக்காவிட்டாலும், 2015ல் இவர் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் மாபெரும் ஹிட் கொடுத்த படம் தான் பாகுபலி ஒன்று மற்றும் இரண்டு. இப்படத்திற்கு பிறகு தான் இவர் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டார். அதை தொடர்ந்து இவர் மேற்கொண்ட ஆர் ஆர் ஆர் படமும் இவருக்கு வணிக ரீதியாக வெற்றியை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தனத்தின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்ல.. சாகப் போற நேரத்துல வளைகாப்பு கேக்குதா!

வெற்றிமாறன்: தனுஷ் நடிப்பில் இவர் மேற்கொண்ட எண்ணற்ற படங்கள் வெற்றியை கொடுத்துள்ளது. அவ்வாறு தன் சினிமா பயணமாக பொல்லாதவன் படத்தில் என்ட்ரி கொடுத்து தற்பொழுது விடுதலை படம் வரை தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் வெற்றிமாறன். சமீபத்தில் இவரின் விடுதலை படம் மக்களிடையே பெரிதும் பேசப்பட்ட நிலையில், அதன் பாகம் இரண்டில் மீண்டும் தனுஷ் இணைய போவதாக அறிவிப்பு வந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ்: பன்முகத் திறமை கொண்ட இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் பெரிதும் பேசப்படும் பிரபலங்களாகவே மாறிவிட்டார். அவ்வாறு இவர் மேற்கொண்ட கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களின் வெற்றியை கொண்டு அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். அதிலும் குறிப்பாக விஜய்யை வைத்து இவர் மேற்கொள்ளும் லியோப் படத்தின் வெற்றியை கொண்டாட காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

Also Read: அஸ்வின் போல ஆணவத்தில் ஆடும் யூடியூபர்.. முதல் படத்திற்கு ஓவர் பில்டப் கொடுக்கும் மஞ்சள் வீரன்

மணிரத்னம்: இவரின் படங்கள் புரியாத புதிராய் இருப்பினும், அவை கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும். அவ்வாறு இவர் பலமொழியில் இயக்கிய எண்ணற்ற படங்கள் இவருக்கு வெற்றியை கொடுத்துள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராய் தன்னை நிரூபித்து வருகிறார் மணிரத்னம். சமீபத்தில் இவரின் பிரம்மாண்ட படைப்பாய் மாபெரும் வெற்றியை சந்தித்த படம் தான் பொன்னின் செல்வன். அதை தொடர்ந்து மீண்டும் உலகநாயகனுடன் இணையும் கூட்டணியில் உருவாகும் படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

Trending News