ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

ஒடுக்கும் சமூகத்தினரின் கதையை வைத்து ஹிட் அடித்த 5 படங்கள்.. பிளாக்பஸ்டரில் பட்டையை கிளப்பிய சூர்யா

A Story Of An Oppressive Society : தமிழ் படங்களில் இதுவரை ஒடுக்கப்பட்ட மக்களை பற்றிய படங்கள் அதிகம் வந்ததில்லை. ஒரே இனம் ஒரே மொழி என்று சொல்லிக் கொண்டாலும் இங்கு இன்னுமும் சாதிய வேறுபாடுகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன. சமீப காலமாக அந்த மக்களின் வலிகளைச் சொல்லும் விதமாக தமிழ் திரைப்படங்கள் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன. அதைப் பற்றிய பதிவு

பரியேறும் பெருமாள் : மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா. ரஞ்சித் தயாரிப்பில் வெளியான படம் பரியேறும் பெருமாள். சாதிய பாகுபாடுகள் குறித்து இப்படம் பேசி இருந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது. விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை குவித்தது, வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. சட்டக் கல்லூரியில் நுழையும் ஒடுக்கப்பட்ட பிரிவினை சேர்ந்த ஹீரோ. கூட படிக்கும் தோழியான ஹீரோயின் வேறு ஒரு ஜாதியை சேர்ந்தவளாக அமைந்துவிட ஏற்படும் பிரச்சனைகளையும் அவமானங்களையும் மீறி பரியனின் படிப்பு தொடர்ந்ததா இல்லையா, என்பதை பல்வேறு விஷயங்களை அதிரவைக்கும் படி இப்படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

Also Read : ஹீரோவும் நானே வில்லனும் நானே என்று அமைந்த 5 படங்கள்.. வேறொரு பரிமாணத்தில் கலக்கிய தனுஷ்

அசுரன் : வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் அசுரன். சாதி மோதல், பழிக்குப்பழி, பகை என்ற பார்த்த கதையே தான். இடத்தகராறில் மூத்த மகனை பறிகொடுத்து, மீதமுள்ள குடும்பத்தை காப்பாற்ற ஓடி ஒளிகிறார் என்று நினைத்தால் தன் குடும்பத்திற்காக அசுர வேட்டையை நடத்துகிறார் அசுரனாக மாறி தனுஷ். ஒரு சாதாரண வாழ்வியலான கதையில் கூட சரியான காட்சியில் ஹீரோயிசத்தை வைத்து தனுஷ் ரசிக்க வைத்திருப்பார். இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார் தனுஷ். அத்துடன் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதும் இப்படத்திற்காக பெற்றார் இயக்குனர் வெற்றிமாறன்.

ஜெய் பீம் : த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ஜெய் பீம். இப்படத்தில் சிறையில் இருந்து வெளிவரும் ஒடுக்கப்பட்ட ஜாதியை சேர்ந்த சிலர் மீது பொய் வழக்கு போட்டுவார்கள். அவர்களை குற்றவாளிகள் என சொல்லி போலீசார் வழக்கை முடிப்பார்கள் என்பதை காட்டியிருப்பார் இயக்குனர். காவல்துறையினரின் அத்துமீறல் மனித உரிமைகளை மீறுதல் ஆகியவற்றை வெளிப்படையாக காட்டிய படம். மனித உரிமை வழக்குகளுக்காக 1.ரூபாய் கூட கட்டணம் வாங்காத நேர்மையான கண்டிப்பான வக்கீல் சந்துருவாக நடித்திருப்பார் சூர்யா. ஹீரோவுக்கான காட்சிகள் ஏதும் இல்லாமல் கேரக்டருக்கு ஏற்றவாறு முழுமையாக உள்வாங்கி நேர்த்தியாக நடித்திருப்பார் சூர்யா.

Also Read : சிங்கம் என்ன ரோபோவை அடக்கப் போகிறதா.? சூர்யாவை கிண்டலடித்து வம்பிழுக்கும் பிரபலம்

கபாலி : கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் கபாலி. இப்படத்தில் மலேசிய ரப்பர் தோட்ட தமிழ் தொழிலாளர்களின் பிரச்சனையும் தமிழனுக்கு தமிழனே செய்யும் கெடுதல்களையும் மிக ஆழமாக அதிரடியாக சொல்லி இருப்பார் இயக்குனர் பா. ரஞ்சித். கபாலினதும்,சொல்லுங்க எசமானு கூனி குறுகி நிப்பேனு நெனச்சியாடா, கபாலிடா என்று ரஜினி நடிப்பிலும் ஸ்டைலிலும் மாஸ் காட்டி இருப்பார். இந்த வயதிலும் என்ன ஒரு ஸ்டைல் என்ன ஒரு ஆக்ஷன் என்று சொல்லும் அளவுக்கு நடித்திருப்பார். “காந்தி சட்டையை கழட்டியதற்கும் அம்பேத்கார் கோட் சூட் போட்டதுக்கும் நிறைய வித்தியாசமும் காரணமும் இருக்கு, நம்ம மக்கள் எங்க போனாலும் ஜாதி மதப் பிரச்சினை பண்றாங்க” உள்ளிட்ட டயலாக்ஸ் மற்றும் ரஜினி ஸ்டைல், மேனரிசனங்களால் படம் ரசிக்க வைத்தது.

கர்ணன் : மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான மற்றொரு படம் கர்ணன். பொடியன்குளம் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் மட்டுமே வாழ்கின்றார்கள். எந்த பேருந்தும் அந்த கிராமத்தில் மட்டும் நிற்காது. அந்த கிராமத்து மக்கள் எவ்வளவு முயற்சித்தும் எதுவும் நடக்கவில்லை. ஒரு சமயத்தில் ஹீரோ கர்ணன் பேருந்தை அடித்து உடைத்து போலீசை எதிர்த்து நிற்கிறார். போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று போலீஸ் ஸ்டேஷனை உடைத்து நொருக்குகிறார். கர்ணன் படத்தில் அவரை வாளேந்த வைத்து உரிமைக்காக போராட வைத்திருப்பார் இயக்குனர். இப்படத்தில் இந்த கர்ணனும் ரத்தம் சிந்துகிறார், மற்றவர்களையும் ரத்தம் சிந்த வைக்கிறார். அழுத்தமான காட்சிகளும் ஷார்ப்பான வசனங்களும் படத்துக்கு மிகப்பெரிய பிளஸ்.

Also Read : பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு நடிகர் சிவகுமார் கொடுத்த பரிசு என்ன தெரியுமா ?

- Advertisement -spot_img

Trending News