தமிழில் புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சுகன்யா. பின் படிப்படியாக முன்னேறி ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தில் கமலஹாசனுடன் இணைந்து வயதான கதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமல்லாமல் அவருக்கே டஃப் கொடுக்கும் வகையில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். அதிலும் ஹீரோவை தாண்டி சுகன்யாவால் ஹிட்டான 5 படங்களின் மூலம் இன்றளவும் தமிழ் ரசிகர்கள் மனதில் சின்ன கவுண்டர் தெய்வானையாய் நிலைத்து நிற்கிறார்.
புது நெல்லு புது நாத்து: பாரதிராஜா இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு ராகுல், சுகன்யா, நெப்போலியன், பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம். சுகன்யா அறிமுகமான தனது முதல் படத்திலேயே துருதுருவென சிட்டாய் பறக்கும் கிராமத்து பெண்ணாகவே நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். அதிலும் இளையராஜா இசையில் படத்தில் வரும்“கருத்த மச்சான்”என்ற பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரவினார்.
Also Read: சுகன்யா அந்த அரசியல்வாதியுடன் தொடர்பில் இருந்தது உண்மைதான்.. ஓபன் ஆக சொன்ன பிரபலம்
சின்ன கவுண்டர்: ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு விஜயகாந்த், சுகன்யா, மனோரமா, கவுண்டமணி மற்றும் செந்தில் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம். இப்படத்தில் விஜயகாந்த் மற்றும் சுகன்யாவிற்கு பம்பரம் போட்டி வைக்கப்படுகிறது. இதில் விஜயகாந்த் வெற்றி பெற்றதால் சுகன்யாவின் தொப்புளில் பம்பரம் விடும் ரொமான்ஸ் காட்சியின் மூலம் அன்றைய இளசுகளின் மனதை கவர்ந்தவராக இருந்தார். படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் ஹிட் அடித்தது.
வால்டர் வெற்றிவேல்: பி வாசு இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு சத்யராஜ், சுகன்யா, ரஞ்சிதா ஆகியோர் நடிப்பில் வெளியாகி 200 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம். 90களில் வெளியான சத்யராஜ் திரைப்படங்களின் அதிக வசூல் ஈட்டிய திரைப்படங்களில் ஒன்றாக இந்த படம் உள்ளது. சத்யராஜ் சுகன்யாவின் ஜோடி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
Also Read: 3 படங்களுக்காக வாங்கிய ஸ்டேட் அவார்ட்.. விஜயகாந்துடன் கிசுகிசுக்கப்பட்ட ஹீரோயின்
இந்தியன்: 1996 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஏ எம் ரத்தினம் தயாரிப்பில் உலகநாயகன் கமலஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகும். இதில் சுகன்யா எந்த ஒரு நடிகையும் ஏற்று நடிக்க தயங்கும் வயதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் உலக நாயகனுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் தனது தனித்துவமான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார்.
செந்தமிழ் பாட்டு: 1992 ஆம் ஆண்டு எம்.எஸ்.வி கோபி தயாரிப்பில் பிரபு, சுகன்யா, கஸ்தூரி நடிப்பில் வெளியான இப்படம் செந்தமிழ் பாட்டு. இதில் சலீம் கௌஸ் சுகன்யாவின் தந்தையாக தனது எதிர்மறையான கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார். சுகன்யா துர்கா எனும் கதாபாத்திரத்தில் பிரபுவுடன் இணைந்து நடித்திருப்பார்.
இவ்வாறு இந்த 5 படங்களும் ஹீரோவையும் தாண்டி சுகன்யாவால் ஹிட்டான படங்களாகும். அதிலும் உலக நாயகனுக்கு நடிப்பு கற்றுக் கொடுத்த சுகன்யா என்ற பெயரையும் இந்தியன் படம் மூலம் பெற்றுள்ளார்.
Also Read: மீண்டும் மருதநாயகத்தை கையில் எடுக்கும் கமல்.. ஹீரோவாக நடிக்க இருக்கும் மாஸ் நடிகர்