வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

குழந்தைகளை வைத்து அதிரிபுதிரி ஹிட் அடித்த 5 படங்கள்.. கம்மி பட்ஜெட்டில் பட்டையை கிளப்பிய மணிரத்தினம்

தமிழ் சினிமாவில் எத்தனை படங்கள் வந்திருந்தாலும் அதில் குழந்தைகளை மையமாக வைத்து வந்த படங்கள் ஹிட் படங்களாக மாறி இருக்கிறது. அதிலும் இவர்களுக்காகவே மறுபடியும் அந்த படத்தை பார்க்கலாம் என்று சொல்லும் அளவிற்கு அவர்களுடைய நடிப்பு எதார்த்தமாக இருந்திருக்கும். அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்

காக்கா முட்டை: மணிகண்டன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு காக்கா முட்டை திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜே விக்னேஷ், வி ரமேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஏழையாக இருக்கும் இரண்டு சிறுவர்கள் பீட்சாவை சாப்பிட வேண்டும் என்று ஆசையுடன் இருக்கும் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் நடித்த இரண்டு குழந்தைகளுமே விருது வாங்கும் அளவிற்கு இப்படம் அமைந்திருக்கும்.

Also read: தனது சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்ட படம்.. தனுஷ்க்கு நன்றி தெரிவித்து ஐஸ்வர்யா ராஜேஷ்

மெரினா: பாண்டிராஜ் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு மெரினா திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவகார்த்திகேயன், ஓவியா, பகோடா பாண்டி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் தனியாக இருக்கும் சிறுவனின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அவர் செய்யும் சிறு சிறு வேலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் மூன்று குழந்தைகளை மையமாக வைத்து அவர்களுடைய சூழ்நிலைக்கேற்றவாறு அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது கதையாக அமைந்திருக்கும்.

சாட்டை: மு. அன்பழகன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு சாட்டை திரைப்படம் வெளிவந்தது. இதில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, யுவன், மகிமா நம்பியார், ஜூனியர் பாலையா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் பள்ளியில் மாணவர்களை அவர்களுக்கு ஏற்ற மாதிரி ஆசிரியர்கள் எப்படி பேசி அவர்களை வெற்றி அடைய வைக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும்.

Also read: சமுத்திரக்கனிக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா?. ட்ரெண்டாகும் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள்

பசங்க: பாண்டிராஜ் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு பசங்க திரைப்படம் வெளிவந்தது. இதில் விமல், வேகா தம்மோடியா, ஸ்ரீராம், கிஷோர் டிஎஸ் மற்றும் பலர் நடித்தார்கள். இப்படம் மூன்று பசங்களை மையமாக வைத்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் சிறந்த குழந்தை கலைஞர் தேசிய திரைப்பட விருதுகளை கிஷோர் டிஎஸ் மற்றும் ஸ்ரீராம் பெற்றிருக்கிறார்கள். இப்படம் இவர்களுக்காகவே பார்க்கலாம் என்று ஆசையை தூண்டி பார்க்க வைக்கக்கூடிய படமாக அமைந்திருக்கிறது.

அஞ்சலி: மணிரத்தினம் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு அஞ்சலி திரைப்படம் வெளிவந்தது. இதில் ரகுவரன், ரேவதி, பிரபு, சரண்யா, தருண்,ஷாம்லி ஆகியோர் நடித்தார்கள். இப்படம் மனநலம் குன்றிய குழந்தையின் நிலைமையை பார்த்து அவரது குடும்பம் அனுபவிக்கும் மன உளைச்சலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இதில் தருண் மற்றும் ஷாம்லி
குழந்தை நட்சத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம் முழுவதுமே குழந்தைகளை வைத்து கதை அமைந்திருக்கும்.

Also read: சப்போர்ட் கேரக்டரில் நடித்து கேரியரை தொலைத்த 7 நடிகர்கள்.. திறமை இருந்தும் வாய்ப்பில்லாமல் தவிக்கும் கலையரசன்

Trending News