செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தியேட்டரை மிஸ் செய்த 5 ஹிட் படங்கள்.. கல்நெஞ்சையும் கரைய செய்த ஜெய் பீம்

Five Films That Released On OTT Became Huge Hits: பொதுவாக படங்கள் திரையரங்கு வெளியீட்டுக்குப் பின் ஓடிடியில் வெளியாவது வழக்கமாக இருக்கும் ஒன்றுதான். ஆனால் சில படங்கள் நேரடியாகவே ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த படங்கள் தியேட்டரில் பார்த்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்களுக்கு எண்ணம் தோன்றும் படியாக வெளியான ஐந்து படங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

சார்பட்டா பரம்பரை : பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, ஜான் கொக்கன், துஷாரா விஜயன், பசுபதி மற்றும் பல நடிப்பில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தை தியேட்டரில் பார்க்க தவறவிட்டோமே என ரசிகர்கள் பெரிதும் கவலைபட்டனர். மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.

Also Read : ஆர்யா, கௌதம் கார்த்திக் கூட்டணியின் Mr X.. துணிவோடு சாகசத்திற்கு தயாரான அஜித் ஹீரோயின்

மூக்குத்தி அம்மன் : ஆர் ஜே பாலாஜியின் நடிப்பில் நகைச்சுவை கலந்த படமாக வெளியானது மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் நயன்தாரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நேரடியாக ஓடிடியில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு இருந்தது.

சூரரைப் போற்று : சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இப்படம் நேரடியாகவே அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படம் திரையரங்குகளில் வெளியிட்டு இருந்தால் பல கோடி லாபம் பார்த்திருக்கும். அதுமட்டுமின்றி சூரரைப் போற்று ஐந்து தேசிய விருதை வாங்கி குவித்தது.

Also Read : திடீர்னு எல்லா படங்களிலும் பட்டையை கிளப்பும் பழைய ஹீரோ.. சூர்யா படத்திலும் நடிக்குமாறு வந்த அழைப்பு

மகான் : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மகான். இந்த படம் அமேசான் பிரைமில் வெளியாகி இருந்தது. ஆனால் ரசிகர்கள் இந்த படத்தை தியேட்டரில் வெளியிட்டிருந்தால் வேற லெவலில் இருக்கும் என்று தங்களது கருத்துக்களை கூறி வந்தனர்.

ஜெய் பீம் : டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஜெய் பீம் படத்தை பார்த்தால் கல்நெஞ்சம் உடையவர்கள் கூட கலங்கி விடுவார்கள். அவ்வாறு மனதை கனக்க செய்யும் படமாக இருந்தது.

Also Read : சிங்கம் என்ன ரோபோவை அடக்கப் போகிறதா.? சூர்யாவை கிண்டலடித்து வம்பிழுக்கும் பிரபலம்

Trending News