வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஜயகாந்திடமிருந்து கைநழுவிப்போன 5 வெற்றி படங்கள்.. அய்யாதுரை ஆக நடிக்க இருந்த கேப்டன்

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் நடித்து வெற்றி பெற்று இப்பொழுது வரை ரசிகர்கள் இவருக்காக காத்திருக்க வைத்த ஒரே கேப்டன் நம்மளுடைய விஜயகாந்த் அவர்கள் தான். அப்படிப்பட்ட இவர் சில சூழ்நிலைகளினால் அதிக அளவில் வெற்றி பெற்ற சில படங்கள் இவரிடம் இருந்து கைநழுவி போயிருக்கிறது. அப்படி இவர் மிஸ் பண்ணிய படங்களை பற்றி நாம் பார்க்கலாம்.

புதிய பாதை: பார்த்திபன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு புதிய பாதை திரைப்படம் வெளிவந்தது. இதில் இவருக்கு ஜோடியாக சீதா நடித்திருக்கிறார். இப்படத்தின் மூலம் தான் பார்த்திபன் இயக்குனராக அறிமுகமானார். இவர் இதற்கான கதையை ரெடி பண்ணி முதலில் விஜயகாந்த் இடம் சொல்லி இருக்கிறார். அவரும் எனக்கு இந்த கதை ரொம்பவே பிடித்திருக்கிறது ஆனால் மற்ற படங்களில் நான் ஏற்கனவே பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் இந்த படங்களை இப்போதைக்கு என்னால் வந்து நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். அதன் பிறகு இவரே ஹீரோவாக நடிக்கலாம் என்று முடிவு செய்து நடித்த படம் தான். இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் அதிக லாபத்தை பார்த்தது. அத்துடன் பல விருதுகளையும் இப்படம் வென்றது.

Also read: இதனால் தான் விஜயகாந்திற்கு அப்பாவாக நடித்தேன்.. மனம் நொந்து பேசிய பிரபலம்

இணைந்த கைகள்: என்.கே விஸ்வநாதன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு இணைந்த கைகள் திரைப்படம் வெளிவந்தது. இதில் ராம்கி, அருண்பாண்டியன், நிரோஷா, சிந்து மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் அருண் பாண்டியன் கேரக்டருக்கு பதிலாக விஜயகாந்த் நடித்தால் ரொம்பவே நன்றாக இருக்கும் என்று இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் முடிவு செய்து விஜயகாந்த்திடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவர் அந்த வருடத்தில் மட்டும் ஆறு படங்களில் கமிட்டாகி இருந்ததால் இந்த படத்தை ஒதுக்க வேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது.

சூரியன்: இயக்குனர் பவித்ரன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு சூரியன் திரைப்படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், ரோஜா, கவுண்டமணி மற்றும் மனோரமா ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தின் கதைக்கு விஜயகாந்த் தான் சரியாக இருப்பார் என்று அவரிடம் கதை சொல்லி இருக்கிறார்கள். அவரும் இதில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்து விட்டார். ஆனால் அதன் பிறகு படப்பிடிப்பு நேரத்தில் படத்தில் ஆரம்பத்திலேயே விஜயகாந்த் மொட்டை அடிக்க வேண்டும் என்பதால் அவரால் இதில் நடிக்க முடியவில்லை.

Also read: நட்புக்காக பிடிக்காத இயக்குனரின் படத்தில் நடித்த விஜயகாந்த்.. ஹிட் கொடுத்து வாய் அடைக்க வைத்த சம்பவம்

ஐயா: இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், நெப்போலியன், நயன்தாரா மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்தார்கள். இந்த படத்தில் முதலில் சரத்குமாருக்கு பதிலாக விஜயகாந்த் தான் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்த நேரத்தில் இவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் இருந்து வரவேற்பை ஏற்படுத்தவில்லை. அதனால் இப்படத்தில் அவரை நடிக்க வைத்தால் இந்த படமும் ஃபெயிலியர் படமாக ஆகிவிடும் என்பதால் இயக்குனர் அவருக்கு பதிலாக சரத்குமாரை நடிக்க வைத்தார்.

ஆனந்தம்: லிங்குசாமி இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு ஆனந்தம் திரைப்படம் வெளிவந்தது. இதில் மம்முட்டி, முரளி, அப்பாஸ்,தேவயானி, ரம்பா, சினேகா மற்றும் பலர் நடித்தார்கள். இப்படத்தில் மம்முட்டிக்கு பதிலாக விஜயகாந்த் நடிக்க இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் விஜயகாந்த் தவசி, வாஞ்சிநாதன், நரசிம்மா போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அத்துடன் ஏற்கனவே இதே மாதிரி அண்ணன் தம்பி பாசத்தை வைத்து வானத்தைப்போல திரைப்படம் வெளிவந்ததால் இதிலும் நடித்தால் பெரிய அளவில் வித்தியாசமாக இருக்காது என்று விஜயகாந்த் அவரே இதிலிருந்து விலகி விட்டார்.

Also read: சினிமாவை கலக்கி ஓய்ந்து போன 2 பிரபலங்கள்.. விஜயகாந்துக்கு கொடுத்த நான்கு த்ரில்லர் ஹிட்ஸ்

Trending News