சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

90ஸ் கிட்ஸ்க்கு சோசியல் மீடியாவாக இருந்த 5 தொகுப்பாளர்கள்.. ஹீரோயின்களுக்கு இணையாக ஃபேமஸான பெப்சி உமா

இந்த காலத்தில் ஒவ்வொரு செய்திகளையும் ஈசியாக சோசியல் மீடியா மூலம் தெரிந்து கொள்கிறார்கள். ஆனால் 90களில் நம்மளுக்கு பொழுது போக்காகவும் சினிமா பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும் மிகப்பெரிய உறுதுணையாக இருந்தது என்றால் அது அந்த காலத்தில் உள்ள தொகுப்பாளர்கள் தான். 90ஸ் கிட்ஸ்க்கு ஃபேவரிட் ஆக இருந்த தொகுப்பாளர்களை பற்றி பார்க்கலாம்.

சுரேஷ்குமார்: இவர் 90களில் மிகவும் பிரபலமான ஒரு தொகுப்பாளர், செய்தி வாசிப்பவர் மற்றும் பேராசிரியர். சன் டிவியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பப்படும் டாப் 10 திரைப்படங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குவார். இதை பார்த்த பிறகு தான் 90ஸ் கிட்ஸ்கள் எந்த படங்களை பார்க்கலாம் என்று முடிவு செய்து தியேட்டர்களில் போய் படம் பார்ப்பார்கள். இப்ப இருக்கிற ப்ளூ சட்டை மாறனுக்கு மூதாதையாக இருந்தவர் தான் சுரேஷ்குமார். இவர்களுக்கு இடையே இருக்கும் வித்தியாசம் என்னவென்றால் ப்ளூ சட்டை மாறன் கொடுக்கும் ரிவ்யூ பார்த்தால் நல்ல படத்தை கூட பார்க்கணும் என்று தோணாது. ஆனால் சுரேஷ் கொடுக்கிற ரிவ்யூ பார்த்தா மொக்க படத்தை கூட பார்க்க வைப்பார். அந்த அளவுக்கு ஒரு சிறந்த விமர்சகர்.

Also read: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 4 படங்கள்.. அதகளம் செய்யும் சிம்புவின் பத்து தல

விசு: தேசிய விருது பெற்ற இயக்குனரும், நடிகருமான விசு ஒரு மேடைப் பேச்சாளரும் கூட. அத்துடன் பட்டிமன்றம் என்று சொன்னதுமே 90ஸ் கிட்ஸ்க்கு ஞாபகம் வருவது விசு அவர்கள் தான். சன் டிவியில் ஒளிபரப்பான அரட்டை அரங்கம் நிகழ்ச்சி ரொம்பவே மக்களிடம் பிரபலமாகி வந்தது.

விஜய சாரதி: இவர் பிரபலமான தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர் மற்றும் வீடியோ ரேடியோ மூலமாகவும் எல்லாரும் மனதிலும் இடம் பிடித்தவர். அதுவும் சன் டிவியில் நீங்கள் கேட்ட பாடல் என்ற மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் தொகுப்பாளர். இப்பொழுது வருகிற சோசியல் மீடியாவுக்கு அடிக்கல் நாட்டியதே நம்முடைய விஜய சாரதி தான் என்றே சொல்லலாம்.

Also read: 25 வருடத்திற்கு பின் தலைக்காட்டிய உங்கள் சாய்ஸ் பெப்சி உமா.. அப்ப பார்த்த மாதிரி அப்படியே இருக்காங்களே

அப்துல் ஹமீத்: இவர் பெயரை சொன்னால் தெரியுமா தெரியாதா என்று தெரியவில்லை. ஆனால் இவரை ஈஸியாக அடையாளம் சொல்வதற்கு ஒரு அடைமொழி போதும் அதுதான் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு. இவருடைய இனிமையான குரலுக்கு அத்தனை பேரும் அடிமை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு 90ஸ் கிட்ஸ்க்கு இனிமையான பாடல்களை வழங்கியவர்.

பெப்சி உமா: இவர் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி. அத்துடன் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட “பெப்சி உங்கள் சாய்ஸ்” என்ற நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் மனதையும் அதிக அளவில் கவர்ந்தவர். அத்துடன் அவருடைய ட்ரெஸ்ஸிங் சென்ஸ், ஆங்கரிங் செய்யும்போது பட்டுப் புடவை, மிகவும் இனிமையான குரல் அத்துடன் இவருடைய முகத்தில் எப்போதும் புன்னகையுடன் பேசும் விதம் அனைவரையும் ரசித்து பார்க்க வைத்தது. மேலும் இவரை அப்பொழுது இருந்த முன்னணி ஹீரோக்கள் பலரும் சினிமாவில் நடிக்க கூப்பிட்டு இருக்கிறார்கள். அந்த அளவுக்கு சினிமா பிரபலங்களையும் கவர்ந்தவர்.

Also read: பிரசாந்த் கொடுத்த தரமான 5 சூப்பர் ஹிட் படங்கள்.. 90களில் ரஜினி, கமலுக்கு தண்ணி காட்டிய டாப் ஸ்டார் 

Trending News