திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

தமிழ் சினிமாவில் நடித்த 5 முக்கிய அரசியல் தலைவர்கள்.. விஜயகாந்துடன் இணைந்து நடித்த முதல்வர் ஸ்டாலின்

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற சினிமா பிரபலங்கள் சிலர் தங்களுக்கு இருக்கும் ரசிகர்களால் சினிமாவைத் தாண்டி அரசியலிலும் கொடி கட்டி பறந்தார்கள். அப்படி தமிழ் சினிமாவில் நடித்த 5 முக்கிய அரசியல் பிரபலங்கள் யார் யார் என்பதைப் பார்ப்போம். அதிலும் தற்போதைய தமிழக முதல்வர் விஜயகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

முக ஸ்டாலின்: தொடக்கத்தில் இவர் திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான் மற்றும் நாளை நமதே போன்ற திராவிட கொள்கைகளை முன்வைக்கும் நாடகங்களில் நடித்தார். பின் தூர்தர்ஷனில் 13 பாகங்களாக வெளியான குறிஞ்சி மலர் என்னும் சீரியலில் அரவிந்தன் எனும் கதாபாத்திரத்தில் ஸ்டாலின் நடித்தார்.

அதன் பிறகு முக ஸ்டாலின் 1987 இல் கலைஞர் கதை வசனம் எழுதிய ஒரே ரத்தம் என்ற படத்தில் நடித்தார். இதேபோல் 1988 ல் கலைஞர் கதை வசனத்தில் மக்கள் ஆணையிட்டால் என்ற படத்தில் ஸ்டாலின் மற்றும் விஜயகாந்த் இணைந்து நடித்தார்கள்.

Also Read : கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி தொடர்ந்து.. சினிமாவிற்கு என்ட்ரி கொடுக்கும் 4ம் தலைமுறை!

இதில் மக்கள் ஆணையிட்டால் படத்தில் விஜயகாந்த் மற்றும் ரேகா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள். இந்த படத்தில் ஸ்டாலின் ‘ஆற அமர்ந்து கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்’ எனும் பாடலை பாடுவது போல் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு ஸ்டாலின் 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு திரைத்துறையை விட்டு விலகி அரசியலில் கவனம் செலுத்தி தற்போது முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். எனவே ஸ்டாலின் சினிமாவில் நடித்திருக்கிறார் என்பது இளம் தலைமுறைகளுக்கு கொஞ்சம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும்.

தொல் திருமாவளவன்: அரசியல்வாதியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருக்கும் இவர், 2007-இல் அன்புத்தோழி என்ற படத்தில் நடித்தார். அதன்பின் 2011 இல் மின்சாரம் என்ற படத்தில் முதலமைச்சராக நடித்திருப்பார்.

டாக்டர் ராமதாஸ்: தமிழக அரசியல்வாதியும் மருத்துவரும் மன பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனமான இவர் 1990 ஆம் ஆண்டு இந்த கட்சியை துவங்கினார் அரசியல் வட்டாரத்தில் இவருடைய ஆதரவாளர்களால் அய்யா என அன்புடன் அழைக்கப்படும். இவர் 30 வருடங்களுக்கு முன்பு நடித்திருக்கிறார். 1990 பாலம் என்ற படத்தில் டாக்டராக நடித்திருக்கிறார். பின்னர் 1995 தொண்டன் என்ற திரைப்படத்திலும் டாக்டராக நடித்திருக்கிறார்.

Also Read : இதுவரைக்கும் நமக்குத் தெரியாமல் படத்தை இயக்கிய 11 நடிகர்கள்.. லிஸ்டில் இடம் பிடித்த ஒரே 1 பெண் இயக்குனர்

பழ கருப்பையா: இவர் முதல் முதலாக 1992 ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் படி அதன் பிறகு நாடி துடிக்குதடி என்று யாரும் அறியாத படத்தில் நடித்திருந்தார். ஆனால் சமீபத்தில் முக்கியமான இரண்டு படங்களான அங்காடிதெரு மற்றும் சர்க்கார் போன்ற படங்களில் நடித்து கோலிவுட்டில் பிரபலமாகியுள்ளார்.

நாஞ்சில் சம்பத்: அனைத்துக் கட்சிகளிலும் இருக்கக்கூடிய ஒரு முக்கிய நபர் தற்போது திமுகவில் இருக்கிறார். இவர் அச்சமுண்டு அச்சமுண்டு, எல்கேஜி போன்ற திரைப்படங்கள் நடித்திருக்கிறார். இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது.

இவ்வாறு இந்த 5 முக்கிய அரசியல் பிரபலங்களும் சினிமாவிலும் கால் பதித்துள்ளனர். அதிலும் பிற்காலத்தில் அரசியல் போட்டியாளர்களாக இருக்கும் முக ஸ்டாலின் மற்றும் விஜயகாந்த் இருவரும் ஒரே படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை வியக்க வைத்திருக்கின்றனர்.

Also Read : சரத்குமாரின் சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட ரஜினி, விஜயகாந்த்.. என்ன படம் தெரியுமா?

- Advertisement -spot_img

Trending News