புதன்கிழமை, ஜனவரி 22, 2025

AVM மாதிரி தமிழ் சினிமாவை தூக்கிவிட்டு 4 தயாரிப்பாளர்கள்.. 3 தலைமுறைகளை பார்த்த நிறுவனம்

பல தயாரிப்பாளர்கள் முயற்சியால் தான் இன்று கோலிவுட் ஆலமரமாக வளர்ந்திருக்கிறது. ஆரம்பத்தில் அவர்கள் எடுத்த ரிஸ்க் , இன்று பல நூறுகோடிகள் புழங்கும் துறையாக இந்தியாவின் முன்னணி சினிமாத்துறையாக தமிழ் சினிமாவை வளர்த்துவிட்டுள்ளது.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் 5 முக்கிய தயாரிப்பாளர்களையும், அவர்கள் தயாரிப்பில் வெளியான படங்கள் லிஸ்டையும் இதில் பார்க்கலாம்.

ஏ.வி.மெய்யப்ப செட்டியார்

தென்னிந்திய சினிமாவின் மும்மூர்த்திகளில் ஒருவர் மற்ற இருவர் எஸ்.எஸ்.வாசன் மற்றும் எல்.வி.பிரசாத். இவர் தோற்றுவித்த ஏவிஎம் நிறுவனம், 3 தலைமுறைகளாக இயங்கி வருகிறது. அவர் இறக்கும் முன்னர் 167 படங்களை தயாரித்திருந்தார்.

அதில், வாழ்க்கை, நாம் இருவர், சர்வர் சுந்தரம், மேஜர் சந்திரகாந்த், களத்தூர் கண்ணம்மா ஆகும். பின்பு, அயன், சிவாஜி உள்ளிட்ட படங்களை தயாரித்தது. சமீபத்தில் இவர்கள் படங்கள் எதுவும் தயாரிக்கவில்லை என கூறப்படுகிறது.

எஸ்.எஸ்.வாசன்

சினிமாவின் எஸ்.எஸ்.வாசன் பெயர் மூலமாக அறியப்பட்டவர். பத்திரிக்கையாளர், எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர், தொழிலதிபர் என பன்முகங்கள் செயல்பட்டு வெற்றி பெற்றார்.

ஆனந்த விகடன், ஜெமினி ஸ்டுடியோஸ் இவரது நிறுவனங்கள். இவர், சபதம்,. சந்திரலேகா, வஞ்சிக் கோட்டை வாலிபன், சன்சார் பாகுபலி, இரும்புத்திரை, ஒளைவையார் என பல ஹிட் படங்களை தயாரித்திருந்தார்.

அக்காலத்தில் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் நிறுவனமாகப் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.

சாண்டோ சின்னப்ப தேவர்

அக்காலத்தில் புகழ்பெற்ற தயாரிப்பாளராக இருந்தவர் இவர். எம்.ஜி.ஆர் நடிப்பில் பல ஹிட் படங்களை தயாரித்தார். குறிப்பாக எம்.ஜி.ஆர் இவர் தயாரிப்பில் வெளியான 17 படங்களில் நடித்திருந்தார்.

தன் படங்களை விலங்குகளையும் நடிக்க வைத்து அசத்தினார். தேவர் பிலிம்ஸ் அப்போது பிரபலமானது. கோயம்புத்தூரை சேர்ந்த இவர் தயாரிப்பில், தாய்க்கு பின் தாரம், கொங்கு நாட்டு தங்கம், தாய் சொல்லை தட்டாதே, நீலமலை திருடன், தாய் மீது சத்தியம், தாயும் மகளும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கலைப்புலி எஸ். தாணு

தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர் தாணு. இவர் இயக்குனர், தயாரிப்பாளார், விநியோகஸ்தர் என பன்முகங்கள் கொண்டவர். 1985 ல் யார் படம் மூலம் தயாரிப்பை தொடங்கினார்.

அதன்பின், கிழக்கு சீமையிலே காக்க காக்க, சச்சின், துப்பாக்கி, கபாலி, தெறி, வேலையில்லா பட்டதாரி, அசுரன், கர்ணன், ஆளவந்தான் என பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். தற்போது வாடிவாசல் உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறார்.

மாடர்ன் தியேட்டர்ஸ்

இன்று ராமோஜிராவ் பிலிம் சிட்டி மாதிரி 1935-ல் தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்டது மாடர்ன் தியேட்டர்ஸ். இது இந்தியாவில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட பெரிய திரைபடக் கூடமாகும்.

இதை ராமலிங்க சுந்தரம் உருவாக்கினார், 1982 வரை தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாளம் என பல மொழிகளில் 150 க்கும் மேற்பட்ட படங்கள் தயாரித்தது.

இதில் கலைஞர், எம்.ஜி.ஆர் கண்ணதாசன், ஜெயலலிதா உள்ளிட்டோர் பணியாற்றியிருந்தனர். அலிபாபாவும் 40 திருடர்களும், கம்பர், மந்திரி குமாரி, குமுதம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News