ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

வாரிசு மேடையில் விஜய் விலாசப் போகும் 5 சம்பவங்கள்.. குட்டி ஸ்டோரி யாருக்குத் தெரியுமா?

ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் நாளை எப்போது விடியும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். ஏனென்றால் வாரிசு படத்தின் பிரம்மாண்டமான ஆடியோ லான்ச் பங்க்ஷன் நாளை நடைபெற உள்ளது. இந்த படத்தின் டிக்கெட் விலையே 4000 முதல் 5000 என்று கூறப்படுகிறது. ஆனாலும் ரசிகர்கள் முந்தி அடித்துக்கொண்டு டிக்கெட்டை வாங்குகிறார்கள்.

இந்நிலையில் வாரிசு ஆடியோ லான்ச் பங்க்ஷனில் விஜய் எதைப் பற்றி பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களை தாண்டி அனைத்து தரப்பிலும் மிகப்பெரிய சினிமா ரசிகர்களுக்கும் உள்ளது. அந்த வகையில் முக்கியமான ஐந்து சம்பவங்களை விஜய் விலாச போகிறார்.

Also Read : ஒன்றிய அரசை பதம் பார்க்கப் போகும் விஜய்.. தலைமை தாங்கும் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட மூத்த தலைவர்

விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்ததால் அரசியலைப் பற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வாரிசு மேடையில் விஜய் அரசியலைப் பற்றி பேச போவதில்லையாம். இதற்கு மாறாக அஜித்தை வம்பு இழுக்க போகிறாராம். ஏனென்றால் வாரிசு படத்திற்கு போட்டியாக துணிவு படம் வெளியாக உள்ளது.

அதுமட்டுமின்றி துணிவு படத்துக்கு தான் அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆகையால் அந்த குட்டி ஸ்டோரி மறைமுகமாக அஜித்தை தாக்கி பேசுவதாக தான் அமைய உள்ளது. மேலும் ரசிகர்களுக்கு மோட்டிவேஷன் தரும் படியான சில விஷயங்களை விஜய் பேச இருக்கிறார்.

Also Read : டாம் குரூஸுக்கே சவால் விடப் போகும் விஜய்.. பார்த்து உருட்டுங்க பாஸ் மிஸ் ஆச்சுன்னா தலைமுடி கூட மிஞ்சாது

விஜய் தனது தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சனையை பீஸ்ட் படத்தின் நேர்காணலில் கூட பேசி இருந்தார். அதேபோல் வாரிசு மேடையிலும் தனது ஃபேமிலி இஸ்யூ ஆகியவற்றை விஜய் பேச இருப்பதாக நம்பகத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.

கடைசியாக வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவை பற்றி புகழ்ந்து பேசி சொம்படிக்க போகிறாராம். ஏற்கனவே தில்ராஜு தமிழகத்தில் நம்பர் ஒன் விஜய் என்று பேசியதற்கு அவர் எதுவும் கூறாமல் உள்ளார் என்று சர்ச்சை எழுந்துள்ளது. இப்போது அதைப் பற்றியும் வாரிசு மேடையில் விஜய் பேச இருக்கிறார்.

Also Read : விஜய்யை வாண்டடா வம்பு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. ரெய்டிற்கு பிறகு புலி பாயுமா? பதுங்குமா?

Trending News