திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

வாயால் வாழ்ந்துகெட்ட 5 நடிகைகளின் சோகக் கதை.. விவாகரத்தே மேல் என பிடித்ததை விட மறுத்த அமலாபால்

5 Indian Actresses are addicted to that bad habits: “என்னை தொட்ட நீ கெட்ட” என புகைப்பது பற்றி தெரிந்திருந்தும் அதைவிட மறுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இளைஞர்களின் கருத்தைக் கவர நடிகர்கள் கையில் எடுத்த இந்த மது மற்றும் புகைப்பழக்கம் தன்னையும் அழித்து தன்னைச் சார்ந்தோரையும் அழித்துவிடுகிறது என்ற உண்மையை காலம் கடந்து உணர வைப்பது தான் இதன் ஸ்பெஷாலிட்டி.

ஆரம்பத்தில் நடிகர்கள் மட்டுமே பின்பற்றிய இந்த பழக்கம் காலப்போக்கில் நடிகைகளுக்கும் தொற்ற ஆரம்பித்துவிட்டது. பழம்பெரும் நடிகை தொடங்கி தற்போது வரை இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. புகைப்பழக்கம் கேடு என தெரிந்தும்  அந்த கேட்டை தொடர்ந்து செய்யும் இவர்கள் செயல் கேடான ஒன்று. அவர்களில் சிலர் இதோ,

கங்கனா ரணாவத்:  இந்தியாவின் பல மொழிகளிலும் நடித்துவரும் கங்கனா ரணாவத் புகை பிடிப்பது மட்டுமின்றி அதை வெளிப்படையாகவும் ஒத்துக் கொண்டுள்ளார். கேங்ஸ்டர், பேஷன் போன்ற படங்களில் புகைப்பிடித்தல் மது பழக்கம் உடையவராக நடித்த அவர் நிஜ வாழ்க்கையிலும் அதை விட முடியாமல்  தவிர்க்கின்றார்.

Also read: படுக்கையை பகிர்ந்து கொண்டவர் வாழ்க்கையை பகிரவில்லை.. பிரபல நடிகரின் மீது செம கோபத்தில் கங்கனா ரணாவத்!

அமலா பால்: கடாவர், ஆடை போன்ற படங்களில் துணிச்சலான கதாபாத்திரத்தை மேற்கொள்ளும் அமலா பால், புகை பிடித்த படி தான் எடுக்கும் புகைப்படங்களை  சமூக வலைதளங்களில் பதிவிடுவதிலும் துணிச்சல் ஆனவர். மது, புகை இரண்டுக்கும் அடிமையான அமலாபாலின் இந்த ஒரு பழக்கமும் விவாகரத்திற்கு காரணம் என கூறப்படுகிறது

ஷகிலா: தமிழ் மற்றும் மலையாள படங்களில் கிளாமராக நடித்த ஷகிலா தற்போது குக் வித் கோமாளியின் மூலம் கம் பேக் கொடுத்தார். சர்ச்சைகளுக்கு அஞ்சாத ஷகிலா புகைப் பழக்கத்துக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் இருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சில்க் ஸ்மிதா: 80 களில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கிளாமர் ஆர்டிஸ்ட் ஆக வலம் வந்த சில்க் ஸ்மிதா புகழின் உச்சிக்கே சென்றார்.  இருந்தும் அவரை தொட்ட புகைப் பழக்கம் இறுதிவரை ஒட்டிக்கொண்டது.  வாழ்க்கையின் விளிம்பு வரை சென்று போராட முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சில்க் ஸ்மிதாவின் திரை பயணம் பல சோகங்கள் மிகுந்தது.  சோகத்தில் இருந்து மீள அவர் கையில் எடுத்த இந்த பழக்கம் அவருக்கு கை கொடுக்கவில்லை.

நயன்தாரா: ஸ்டைலாக தம் அடிக்கும் நம் சூப்பர் ஸ்டாரையும் மிஞ்சும் அளவு செயின் ஆக ஸ்மோக்கராக இருந்துள்ளார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. பிரபல நடிகருடன் யாரு வீட்ல பார்ட்டி என ஆரம்பித்த பழக்கம், விக்னேஷ் சிவனின் பழக்கத்தால் சிகரெட்டை தொட முடியாமல் போனது. காதுல பிளட் வர்ற வர அட்வைஸ் போட்டு இருப்பாரோ என்னவோ கையெடுத்து கும்பிடு போட்டு நிறுத்தி விட்டாராம்.

Also read: வெள்ள பாதிப்பால் சோலி முடிந்த நயன்தாராவின் வசூல்.. கல்யாண ராசி இன்னும் விட்டு வைக்கல

- Advertisement -

Trending News