புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட 5 இந்திய உணவுகள்.. வெற்றிலைக்கு இந்த நிலைமையா.?

5 Indian foods banned abroad: தனித்துவமான சுவைகள் மற்றும் வளமான சமையல் பாரம்பரியத்தை கொண்ட நாடாக இருக்கும் இந்தியாவில் இருந்து பல மசாலா பொருள்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியா உணவுகளில் அதிக சுவையும் சத்துக்களும் இருக்கிறது என்பதால் செழுமையான இந்தியா என பெயர் பெற்றிருக்கிறது. அதனால் தான் உலகம் முழுவதும் சுவையான உணவை கொண்ட இந்தியா என பேசப்படுகிறது.

ஆனாலும் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு காரணமாக சில இந்திய உணவுகளை பல்வேறு வெளிநாட்டுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட 5 இந்திய உணவுகளை பற்றி தற்போது பார்க்கலாம்.

வெல்லம்: சர்க்கரைக்கு ஒரு நல்ல மாற்றாக வெல்லம் கருதப்படுகிறது. இது ஆரோக்கியமானது, பாரம்பரிய இந்திய உணவு வகையில், முதல் பானங்கள் வரை வெல்லத்தின் பயன்பாடு அதிகமாகவே இருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட இந்த வெல்லம் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான காரணம் என்னவென்றால் மாசுபாடு மற்றும் சீரற்ற தரநிலைகள் குறித்து பிரச்சனைகள் ஏற்படுவதால் அமெரிக்காவில் கட்டுப்பாடற்ற வெல்லம் இறக்குமதி செய்வதில் தடை செய்யப்பட்டிருக்கிறது.

சாம்பார் (கத்தரிக்காயுடன்): சாம்பார் தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஒரு உணவாக கருதப்படுகிறது. பருப்புடன் சேர்ந்து காய்கறிகள் வேகவைத்து சாப்பிடும் இந்த உணவுக்கு மிஞ்சிய டேஸ்ட் எதுவும் இல்லை என்று சொல்லிய நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சாம்பார் தடை செய்யப்படவில்லை என்றாலும் அதில் சேர்க்கப்படும் கத்தரிக்காவுக்கு தடை செய்யப்பட்டிருக்கிறது.

அதற்கு காரணம் கத்தரிக்காய் இறக்குமதியால் விவசாயத்தை பாதிக்கக்கூடிய பூச்சிகள் மற்றும் நோய்களுடன் தொடர்புடையதாக இருப்பதால் சொந்த பயிர்களை பாதுகாக்க விவசாய பொருட்கள் இறக்குமதி செய்வதில் கடுமையான விதிமுறைகளை வைத்திருக்கிறது. அதனால் விவசாயத்தின் நலன் கருதி இதை தடை பண்ணியிருக்கிறார்கள்.

சிவப்பு உணவு வண்ணம்: இந்தியாவில் தயாரிக்கப்படும் இனிப்புகள் மற்றும் உணவுகளில் பொதுவாக கலர் கலராக பவுடர்கள் போடப்பட்டிருந்தால் அதை விரும்பி சாப்பிடுவது வழக்கம் தான். அந்த மாதிரியான செயற்கை சிவப்பு உணவு வண்ணங்களை சேர்ப்பதால் ஏற்படும் பிரச்சனையை தவிர்ப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த சாயங்கள் பூசிய உணவுகளை சாப்பிட்டால் குழந்தைகளின் அதிவேகத்தன்மை குறைந்தும், புற்றுநோயை ஏற்படுத்தவும் காரணமாக இருப்பதால் இதை பல நாடுகளில் அனுமதிக்கப்படவில்லை.

வெற்றிலை: இந்த பெயரை கேட்டதும் நம்முடைய தாத்தா பாட்டி ஞாபகம் தான் வரும். ஏனென்றால் அவர்கள் சாப்பிட்ட பிறகு செரிமான பிரச்சினை தீர்த்து வைப்பதற்காக உட்கொள்ளும் ஒரு மகத்துவம் தான் வெற்றிலை. இப்பொழுது கூட நமக்கு ஏதாவது ஒரு பிரச்சனை அஜீரண கோளாறு என்றால் முதலில் வீட்டில் இருப்பவர்கள் வெற்றிலை தான் நமக்கு கொடுப்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட வெற்றிலைக்கு இந்த நிலைமையா என்று சொல்வதற்கு ஏற்ப அதிர்ச்சி தகவலாக இருக்கிறது.

அதாவது உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) இது புற்றுநோயை ஏற்படுத்தும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை மெல்லுவது வாய்வழி புற்றுநோய் மற்றும் பிற உடல்நல பிரச்சினைகளின் அதிக ஆபத்துடன் தொடர்புடையதாக இருக்கும் என்று அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது.

கிண்டர் ஜாய் (kinder joy): குழந்தைகளை அட்ராக்ட் பண்ணும் விதமாக சாக்லேட்டில் ஒரு விளையாட்டுப் பொருளை வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனுடைய பாரம்பரிய இந்தியாவில் இல்லாவிட்டாலும், இந்தியாவில் இதற்கென்று ஒரு தொழிற்சாலையை ஆரம்பித்து இந்த சாக்லேட்டை தயாரித்து வருகிறார்கள்.

அப்படிப்பட்ட இந்த சாக்லேட் முட்டைக்குள் இருக்கும் சிறிய பொம்மைகள் குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஆபத்தை ஏற்படுத்துவதால் பாதுகாப்பு காரணமாக இது அமெரிக்காவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. அதாவது உணவுப் பொருள்களில் உண்ண முடியாத ஒரு பொருளை வைத்து இருப்பது கடுமையாக கண்டிக்கிறோம் என்ற விதத்தில் அமெரிக்காவில் இதற்கு கட்டுப்பாட்டுகள் விதித்து தடை செய்யப்பட்டு இருக்கிறது.

Trending News