ஒவ்வொரு கலைஞர்களுக்கும் ஆஸ்கார் விருது என்பது தங்கள் உழைப்பின் உண்மையான அங்கீகாரம். ஒரு சில படங்கள் எதிர்பாராத வெற்றியை பெறுவதோடு விருதுகளையும் வாரிக் குவிக்கும். ஆனால் ஒரு சில படங்கள் விருதினை மையமாகக் கொண்டுதான் எடுக்கப்படுகிறது. அப்படி நிறைய சினிமா கலைஞர்கள் ஆஸ்கார் விருதினை கனவாக நினைத்து படம் எடுக்கிறார்கள். அப்படி இந்த வருடம் இந்திய சினிமா கலைஞர்களில் சிலருக்கு ஆஸ்கார் வெற்றி தொட்டுவிடும் தூரத்தில் இருக்கிறது.
இரவின் நிழல்: ஒத்த செருப்பு திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் இயக்கிய திரைப்படம் இரவின் நிழல். இந்த படம் நான் லீனியர் வகையை சேர்ந்தது. படம் முழுக்க ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. இந்த படத்தை பலரும் ரசித்தாலும் ஒரு பக்கம் பார்த்திபனுக்கு அடிமேல் அடி தான் விழுந்தது. ஆனால் அதையெல்லாம் மறக்கடிக்கும் விதமாக இந்த படம் ஆஸ்கர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.
Also Read: புகைப்படத்துடன் பார்த்திபன் போட்ட ட்விஸ்ட் ஆன பதிவு.. அனல் பறக்க ரெடியாகும் பார்ட் 2
ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்: நடிகர் மாதவன் இயக்கி நடித்த திரைப்படம் ராக்கெட்டரி. இந்தப் படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட பயோபிக் திரைப்படம். இந்த திரைப்படத்திற்கு பலதரப்பட்ட மக்களும், பார்வையாளர்களும், பிரபலங்களும் தங்களுடைய பாராட்டை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இந்த படம் ஆஸ்கார் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.
ஆர்ஆர்ஆர்: சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். பாகுபலி வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜ மௌலி இயக்கிய திரைப்படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கூட உலக சினிமாவின் மிக உயரிய விருதான கோல்டன் குளோப் விருதை பெற்றிருக்கிறது.
காந்தாரா: ஒரு படம் வெற்றியடைய நல்ல கதை மட்டுமே இருந்தால் போதும் என்பதை உலக சினிமாவிற்கு உரக்க சொன்ன திரைப்படம் காந்தாரா. 16 கோடியில் உருவான இந்த திரைப்படம் மொத்தமாக 500 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்திருக்கிறது. சிறந்த படம், சிறந்த நடிகர் பட்டியலில் இந்த படம் ஆஸ்கார் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.
Also Read: மூன்றெழுத்து நடிகரால் பாழாய் போன பார்த்திபனின் கனவு.. மேடையில் வருத்தப்பட்டு பேசிய பார்த்திபன்
கங்குபாய் கத்தியவாடி: பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் கங்குபாய் கத்தியவாடி. இந்த படம் மும்பையை சேர்ந்த கங்குபாயின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படத்திற்கு பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பின. இருந்தாலும் இப்போது இந்த படம் ஆஸ்கார் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.
Also Read: பார்த்திபனுக்காக மொட்டை அடித்துக்கொண்ட பிரபல நடிகை.. ரகசியத்தை போட்டு உடைத்த பாக்யராஜ்!