புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ரஜினி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத 5 நண்பர்கள்.. தளபதி தேவாவுடன் தொடரும் நட்பு

Superstar Rajinikanth: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை 169 படங்களில் நடித்துள்ள நிலையில், பாலச்சந்தர் முதல் நெல்சன் திலீப்குமார் வரை இவர் எத்தனையோ இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார். அந்த வகையில் சூப்பர்ஸ்டாரின் நெருங்கிய வட்டாரங்கள் கொஞ்சம் குறுகியவை தான். அதிலும் இவருக்கு திரைத்துறையில் சில வேண்டப்பட்ட நண்பர்கள் மட்டுமே உள்ளனர். அப்படி சூப்பர்ஸ்டாரின் 5 சினிமா துறை நண்பர்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.

விஜயகுமார்: 70 காலகட்டத்தில் பல திரைப்படங்களில் முன்னணி நடிகராக வலம் வந்த இவர், 80களில் துணை கதாபாத்திரங்களில் ஏற்று நடித்து வந்தார். அந்த வகையில் சூப்பர்ஸ்டாருடன் இணைந்து பணக்காரன், பாட்ஷா, மாவீரன், உழைப்பாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் பாட்ஷா படத்தில் ரஜினியின் அப்பாவாக இவர் நடித்த நிலையில், சாகும் முன் வாங்கிய சத்தியத்துக்காக சாதாரன மாணிக்கமாக ரஜினிகாந்த் அப்படத்தில் நடித்து வருவார். இதனிடையே இவர்கள் இருவரும் தற்போது வரை நல்ல நண்பர்களாக உள்ளனர்.

Also Read: நெல்சனை சுற்றலில் விட்ட ரஜினிகாந்த்.. இதுவரை யாரும் பார்க்காத சூப்பர் ஸ்டாரின் மறுபக்கம்

ஜெய்ஷங்கர்: தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என அழைக்கப்படும் நடிகர் ஜெய்ஷங்கர் 60 காலக் கட்டத்திலிருந்து 80கள் வரை முன்னணி நடிகராக நடித்து வந்தார். அந்த வகையில், 80களில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முரட்டுக்காளை படத்தில் வில்லனாக ஜெய்ஷங்கர் நடித்த நிலையில், தொடர்ந்து சூப்பர்ஸ்டாரின் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் உயிரோடு இருந்தவரை சூப்பர்ஸ்டார் இவருடன் நெருங்கி பழகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒய்.ஜி.மகேந்திரன்: 70களிலிருந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர், இயக்குனர் பி. வாசுவின் படங்களில் அதிகமாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இதனிடையே சூப்பர்ஸ்டாரின் மனைவியான லதா ரஜினிகாந்த் இவருக்கு அண்ணி முறை என்ற நிலையில், மாமன், மச்சான் உறவில் இருவரும் பழகி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தற்போது வரை இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளனர்.

Also Read: 2வது முறையும் அவருடன் பாடும் வாய்ப்பை இழந்த ரஜினிகாந்த்.. ஒத்திகை பார்க்கும் பொழுது ஏற்பட்ட சங்கடம்

அமிதாப்பச்சன்: பாலிவுட் சூப்பர்ஸ்டாரான இவர், ரஜினிகாந்தின் மிக நெருங்கிய நண்பராவார். ரஜினிகாந்த் 80களில் தமிழில் எப்படி படங்களில் நடித்து வந்தாரோ, அதே போல ஹிந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் ஆக்ஷன் கேங்ஸ்டர் படமான ஹம் என்ற ஹிந்தி படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து ரஜினிகாந்த் நடித்த நிலையில், அந்த படம் மெகா ஹிட்டானது. அதன் பின்பு இங்கேயே இருந்துவிடு என ரஜினியிடம் அமிதாப்பச்சன் கெஞ்சிய கதையும் உண்டு.

மம்மூட்டி: மலையாள நடிகரான இவர், தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தில் தேவா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருப்பார். சூர்யாவாக ரஜினி இப்படத்தில் நடித்த நிலையில், நட்புன்னா என்னனு தெரியுமா என்ற வசனம் நட்புக்கு இலக்கணமாக மாறியது. இப்படத்தை தொடர்ந்து இவ்விருவரும் நண்பர்களாக தற்போது வரை உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஒரே நாளில் 3 படங்களில் நடித்து ரஜினி வாங்கிய முதல் சொத்து.. குட்டிச்சுவரில் பாட்டிலும், கையுமாய் நின்ற ரஜினிகாந்த்

Trending News