வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

கவர்ச்சி ஆட்டத்திற்காகவே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய 5 நடிகைகள்.. சமந்தாவுக்கே டஃப் கொடுத்த ரம்யா கிருஷ்ணன்

Tamil Actresses: கோலிவுட்டில் டாப் நடிகையாக இருந்தவர்கள் முன்னணி நடிகர்களின் படங்களில் ஒரே ஒரு ஐட்டம் பாட்டுக்கு மட்டும் நடனம் ஆடி கோடிகளில் சம்பளம் வாங்கி இருக்கின்றனர். அதிலும் குறிப்பிட்டு சொல்லக் கூடிய இந்த ஐந்து நடிகைகள் கவர்ச்சி ஆட்டத்தால் இளசுகளை கதி கலங்க செய்தனர். அத்துடன் சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ரம்யா கிருஷ்ணன் குத்தாட்டம் போட்டு இருக்கிறார்.

சிம்ரன்: 90களில் இளசுகளின் மனதைக் கவர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்த இடுப்பழகி சிம்ரன், ஒரு கட்டத்தில் மார்க்கெட் சரியவும் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட துவங்கினார். இதற்கு முழு காரணம் அவருக்கு டான்ஸ் பிடிக்கும் என்பதால் கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடுவது தப்பில்லை என்று அந்த முடிவுக்கு வந்தார். அதுவும் தளபதி விஜய் உடன் யூத் படத்தில் ‘ஆள்தோட்ட பூபதி’ பாடலில் தன்னுடைய இஞ்சி இடுப்பழகை காட்டி குத்தாட்டம் போட்டார். இந்த பாடலுக்காக மட்டும் அவருக்கு 1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது.

Also Read: நீலாம்பரியை பதம்பார்த்த குடும்ப இயக்குனர்.. மனைவிக்கு தெரிந்த கர்ப்பமான மேட்டர், அவசர திருமணம்

ரம்யா கிருஷ்ணன்: தொடக்கத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பிறகு குணச்சித்திர கேரக்டரில் தற்போதும் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் ரம்யா கிருஷ்ணன், ஐட்டம் பாடல்களிலும் கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார். அதிலும் காக்க காக்க படத்தில் ‘தூது வருமா’ என்ற பாடலுக்கு இளசுக்குகளை உசுப்பேற்றும் வகையில் ஹாட்டான லுக்குடன் டான்ஸ் ஆடினார். இந்த பாடலுக்காக ரம்யா கிருஷ்ணனுக்கு 1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ஜோதிகா வெறும் 50 லட்சம் தான் சம்பளம் வாங்கினார்.

நயன்தாரா: தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் நயன்தாரா, திருமணம் ஆனாலும் தன்னுடைய மவுசு குறையாமல் பாலிவுட் வரை கலக்குகிறார். இவர் விஜய்யின் சிவகாசி படத்தில் ‘கோடம்பாக்கம் ஏரியா’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். இதற்காக அவருக்கு 70 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டது. அதேபோல் சூப்பர் ஸ்டாரின் சிவாஜி படத்தில் ‘காவிரி ஆறும்’ என்ற பாடலுக்காக 1.8 கோடி சம்பளம் . அதன் தொடர்ச்சியாக குசேலன் படத்தில் நயன்தாரா நடித்த கேமியோ கதாபாத்திரத்திற்காக 2 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது.

Also Read: பிரபாஸுடன் சேர்ந்து வசமாக சிக்கிய நயன்தாரா.. இருக்க பிரச்சனை போதாதுன்னு சர்ச்சையில் சிக்கும் படம்

தமன்னா: மில்க் பியூட்டியாக தமிழ் ரசிகர்களை திணறடித்த தமன்னா திடீரென்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் ‘கவாலா’ பாடலுக்கு செம ஹாட் ஆக நடனமாடி திணறடித்தார். சில ரசிகர்கள் இந்தப் பாடலை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்றே அந்த படத்தை பார்க்க சென்றதாகவும் குறிப்பிட்டனர். இந்த ஒரு பாடலுக்கு மட்டும் தமன்னா 3 கோடி சம்பளம் வாங்கினார்

சமந்தா: தென்னிந்திய நடிகையாக மார்க்கெட் குறையாமல் இருந்த சமந்தா, திடீரென்று புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி இளசுகளை மகிழ்வித்தார். இந்த பாடல் புஷ்பா படத்தின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த ஒரு பாட்டிற்காக மட்டும் சமந்தா 5 கோடி சம்பளம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஐட்டம் டான்ஸ் ஆடி பண மழையில் குளித்த 5 நடிகைகள்.. ஹீரோயினை விட அதிகம் லாவிட்டு போன ரம்யா கிருஷ்ணன்

- Advertisement -spot_img

Trending News